Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Geography: Disaster Management: Responding to Disasters

   Posted On :  08.09.2023 03:59 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

புவியியல்

அலகு எட்டு

பேரிடர் மேலாண்மை பேரிடரை எதிர்கொள்ளுதல்

புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

1. கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.

() காவலர்கள்

() தீயணைப்புப் படையினர்

() காப்பீட்டு முகவர்கள்

() அவசர மருத்துவக் குழு

விடை:

() காப்பீட்டு முகவர்கள்


2. ‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்! என்பது எதற்கான ஒத்திகை?

() தீ

() நிலநடுக்கம்

() சுனாமி

() கலவரம்

விடை:

() நிலநடுக்கம்


3. தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.

() 114

() 112

() 115

() 118 

விடை:

() 112


4. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?

() தீ விபத்திலிருந்து தப்பிக்க நில்! விழு! உருள்!

) “விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!” என்பது நிலநடுக்க தயார் நிலை. () “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.

() துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக் கொள்ளவும்.

விடை:

() “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” - என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.


5. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?

() “காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

() “கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.

() கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

() “கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்க வேண்டும்.

விடை:

() கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

Tags : Disaster Management: Responding to Disasters | Geography | Social Science பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Disaster Management: Responding to Disasters : One Mark Questions Answers Disaster Management: Responding to Disasters | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்