அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Civics : Forms of Government and Democracy

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி.

1. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?

விடை:

• நவீன உலகில் மக்களாட்சி அரசாங்கங்கள் தழைத்தோங்கி, மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக உள்ளது.

இதுவரை கடுமையான சவாலோ, போட்டியோ எதிர்கொள்ளப்படாத நிலையில் உலகெங்கும் மக்களாட்சி கடந்த நூறு ஆண்டுகளில் வளர்ந்து வருகிறது.

 இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்:

• கல்வியறிவின்மை

• வறுமை .

• பாலினப்பாகுபாடு

• பிராந்திய வாதம் (வட்டாரப் பாகுபாடு

• சாதி, வகுப்பு, சமயப்பண்பாடு

• ஊழல்

• அரசியல் குற்றமயமாதல்

• அரசியல் வன்முறை.

 

2. இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிபந்தனைகளை விளக்குக.

விடை:

• ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்களைக் கிடைக்கச் செய்ய அதிகாரம் அளித்தல்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும், பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.

• மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.

• மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமைமிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.

• பொதுமக்களின் கருத்து வலுவாக இருத்தல்.

• மக்களிடையே சகிப்புத்தன்மையும், மத நல்லிணக்கமும் நிலவுதல்.

• அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.

• வலுவான பொறுப்புமிக்க எதிர்க்கட்சி இருத்தல்.

 

3. இந்தியாவில் மக்களாட்சி பற்றிய உங்களது கருத்து என்ன?

விடை:

• இந்தியாவின் மக்களாட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சி முறையாகும்.

• நாட்டிற்குத் தேவையான கூட்டங்களை உருவாக்குகின்ற இந்திய நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகள். 1. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்குபெறுதல், 2. ஒப்பிதல் அளித்தல்.

• உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு ஆகிய 5 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.

• சாதி, சமய, சினம், பால், கல்வித்தகுதி பாகுபாடு இன்று 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் சமமான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

Tags : Forms of Government and Democracy | Civics | Social Science அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics : Forms of Government and Democracy : Answer in detail Forms of Government and Democracy | Civics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : விரிவான விடையளி - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி