Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன்

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் - செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன் | 9th Social Science : Civics : Forms of Government and Democracy

   Posted On :  10.09.2023 09:34 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன்

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை வகுப்பறையில் கலந்துரையாடு.

2. மக்களாட்சி என்பதுசிறுபான்மையினரை மதிக்கும் பெரும்பான்மையினரின் ஆட்சி” - கலந்துரையாடு.

3. உங்கள் வகுப்பறையில் மாதிரி தேர்தலை நடத்துக.

4. இந்தியாவில் மக்களாட்சியின் நிறை, குறைகளைப் பற்றி வகுப்பறையில் குழு விவாதம் செய்க.

5. தற்போதைய தேர்தல் ஆணையர்களின் பெயர் மற்றும் படங்களைச் சேகரி.

6. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் படங்களை கி.பி. 1947 முதல் தற்பொழுது வரை சேகரித்து துணுக்குப் புத்தகம் தயாரிக்க.

 

VII. சிந்தனை வினா.

1. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அத்தகைய நாட்டில் பொது மக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

விடை:

ஓர் அரசியல் தலைவர் முழு அதிகாரத்தையும் கைக்கொண்டு கடுமையாகப் பயன்படுத்தும் நிலை.

இவ்வகை ஆட்சியில் பொதுக்கருத்துக்கு இடமில்லை. கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒருவர் தன் குரலை எழுப்ப உரிமை, சுதந்திரம் கிடையாது.

 

2. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழி வகுக்கிறது? விளக்குக.

விடை:

அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் ஆளுமை வளர்ச்சியில் முன்னேற்றம் காண அடிப்படை சுதந்திர உரிமை உண்டு.

அனைவரும் சமம் என்ற நிலையில் இணக்கமான வாழ்வுக்கு அடித்தளமாகிறது.

அடிப்படை உரிமைகள் இருப்பதால் அமைதியாக வாழ முடியாது.

 

VIII. வாழ்வியல் திறன்

குறிப்பிட்ட நாடுகளை தேர்வு செய். ஒவ்வொரு நாட்டையும் ஆராய்ந்து அந்நாட்டின் அரசாங்கம் - உயர்குடியாட்சி, முடியாட்சி, தனிநபராட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி குடியரசு - இவற்றில் எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கூறவும் : பின்னர் அரசாங்க வகைகளைத் தீர்மானிக்க உதவும் பண்புகளை விவரிஇணையச் செயல்பாடு

குழந்தைகள் உதவிமையம்

நம் பாதுகாப்பு நம் கையில் 1098


படிகள்:

படி 1: தேடு பொறியில் உரலியைத்தட்டச்சு செய்து 'Chlid Help Line' இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.

 படி 2: Chld protacian & Rights- சொடுக்கி குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை அறியலாம்.

படி 3: 'Reportachidrenndistress - ஐசொடுக்கி உதவிமற்றும் பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தையின்  தகவல்களை பெட்டிகளில் தட்டச்சு செய்து உதவி மையத்திற்கு தெரிவிக்கலாம்.

படி 4: முகப்புப் பக்கத்தில் வலதுவத்தில் உள்ள Muhaabilitymap- தெரிவுசெய்து தங்கள் பகுதிகளில் குழந்தைகளின் பாதிப்பு நிலையை அறிய முடியும்.

உரலி : URL: http://www.childlincindi.orgin/1098/bla-tdchdpline htm

Tags : Forms of Government and Democracy | Civics | Social Science அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics : Forms of Government and Democracy : Project and Activity, HOTS, Life Skills Forms of Government and Democracy | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன் - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி