Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அரசாங்க அமைப்புகள்

குடிமையியல் - அரசாங்க அமைப்புகள் | 9th Social Science : Civics : Forms of Government and Democracy

   Posted On :  10.09.2023 10:03 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

அரசாங்க அமைப்புகள்

அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்து ஒரு நாட்டின் ஆட்சி அமைகிறது.

அரசாங்க அமைப்புகள்

அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்து ஒரு நாட்டின் ஆட்சி அமைகிறது. பல்வேறு வகையான அரசாங்கங்கள் இருக்கின்றன. அவை உயர் குடியாட்சி முடியாட்சி, தனிநபர் ஆட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி மற்றும் குடியரசு.

 

1. உயர்குடியாட்சி(Aristocracy)

உயர்குடி ஆட்சி அதிகாரத்தில் அதிகாரம், சிறு, சிறப்புரிமைகள் பெற்ற ஆளும் வர்க்கத்தினரிடம் காணப்படுகிறது .கா இங்கிலாந்து, ஸ்பெயின்.

 

2. முடியாட்சி (Monarchy)

ஒரு நபர் (வழக்கமாக அரசர்)- ஆல் அமைக்கப்படும் அரசாங்கமே முடியாட்சி (அரசியலமைப்பு முடியாட்சி) எனப்படும். .கா பூடான், ஓமன், கத்தார்.

 

3. தனிநபர் ஆட்சி(Autocracy)

முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே தனிநபர் ஆட்சி ஆகும். .கா வட கொரியா, சவுதி அரேபியா.

 

4. சிறு குழு ஆட்சி (Oligarchy)

மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ () அமைப்பையோ கட்டுப்படுத்துவதே சிறு குழு ஆட்சி' எனப்படும். .கா. முன்னாள் சோவியத் யூனியன், சீனா, வெனிசூலா வடகொரியா.

 

5மதகுருமார்களின் ஆட்சி (Theocracy)

மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ () கடவுளின் பெயரால் மதகுருமார்களால் அமைக்கப்படும் அரசாங்கமே மதகுருமார்களின் ஆட்சி'. .கா. வாட்டிகன்.

 

6. மக்களாட்சி (Democracy)

ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கமே "மக்களாட்சி" எனப்படும். .கா. இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்

 

7. குடியரசு (Republic)

மக்களிடமோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமோ உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறையே "குடியரசு" எனப்படும். இவ்வகை அரசாங்கத்தில் ஒரு முடிமன்னரை காட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட () நியமிக்கப்பட்ட குடியரசுத்தலைவர் இருப்பார். (.கா) இந்தியா, ஆஸ்திரேலியா.

உங்களுக்குத் தெரியுமா?

பொ..மு.500ம் ஆண்டு ரோம் நாட்டில் முதன் முதலில் குடியரசு" (Repubic) எனும் சொல் வடிவமைக்கப்பட்டது. இச்சொல் 'res publica" எனும் வத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது இதன் பொருள் பொது விவகாரம்' (public matter) என்பதாகும்.

 இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜனவரி 26, 1950ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. எனவே ஜனவரி மாதம் 26ஆம் நாள், 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது.

Tags : Indian Civics குடிமையியல்.
9th Social Science : Civics : Forms of Government and Democracy : Forms of Government Indian Civics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : அரசாங்க அமைப்புகள் - குடிமையியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி