Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமான விடையளி

செவ்வியல் உலகம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமான விடையளி | 9th Social Science : History: The Classical World

   Posted On :  05.09.2023 12:20 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்

சுருக்கமான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

V. சுருக்கமான விடையளி

1. ரோமானிய அடிமை முறையைப் பற்றி எழுதுக.

விடை:

ரோம் போர்க்கைதிகளை அடிமைகளாக ஆக்கியதன் மூலம் பணம் படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை உருவாக்கியது. பெரும் நிலப்பிரபுக்கள் அடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர்.

கி.மு. முதலாம் நூற்றாண்டில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன், அடிமைகளின் எண்ணிக்கை 2 மில்லியன் அடிமைகளால் சுதந்திர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வறியவரானார்கள். வறியவர்களின் குழந்தைகள் இறுதியில் அடிமைச்சந்தையை வந்தடைந்தனர்.

 

2. கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

விடை:

ரோமில் பேரரசருடைய உருவச்சிலைக்கு கிறிஸ்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது, அரச துரோகமாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். சிங்கங்களின் முன் வீசப்பட்டனர். ஆனாலும் ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் வெற்றிபெறவில்லை.

ரோமானியப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறியதால் கிறிஸ்தவம் ரோமப் பேரரசின் அரச மதம் ஆயிற்று.

 

3. கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?

விடை:

கார்த்தேஜ் ஹன்னிபால் :

இத்தாலியில் ரோம், வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் ஆகிய இரு சக்திகளிடையே நடைபெற்ற மூன்று போர்களேபியூனிக் போர்கள்' ஆகும். கார்த்தேஜ் தளபதி ஹன்னிபால் ரோமின் படையைத் தோற்கடித்தது. இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்

இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட ரோமானிய படைத்தளபதி பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் ஹன்னிபாலை தோற்கடித்தார். ரோமானியர்களால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார். மூன்றாவது போரில் கார்த்தேஜ் அழிக்கப்பட்டது.

 

4. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

விடை:

பட்டு வணிக வழித்தடத்தை ஹன் பேரரசு திறந்துவிட்டதால் ஏற்றுமதிப்பண்டங்கள் குறிப்பாக பட்டு ரோமப் பேரரசைச் சென்றடைந்தது.

பண்பாட்டில் பின்தங்கிய வடபகுதி ஆட்சியாளர்களின் கைவினைஞர்கள், கால்நடை மேய்ப்பர்கள், குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், அங்கவாடி போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர். இப்புதிய தொழில்நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.

 

5. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

விடை:

புனித சோபியா ஆலயம் :

ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான புனித சோபியா ஆலயம் கி.பி. 6-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. இது அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர்பெற்றது.

உதுமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிளை கைப்பற்றியபோது ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது.

Tags : The Classical World | History | Social Science செவ்வியல் உலகம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Classical World : Answer the following briefly The Classical World | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம் : சுருக்கமான விடையளி - செவ்வியல் உலகம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்