செவ்வியல் உலகம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : History: The Classical World

   Posted On :  05.09.2023 12:24 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளிக்கவும்

VI. விரிவான விடையளி

1. ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.

விடை:

ஏதென்ஸ் எழுச்சி:

ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மக்களாட்சி முறை நிறுவப்பட்டது. சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.

நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்தட்டு மக்கள் மக்களாட்சியை கும்பலின் ஆட்சி' எனக கருதினர்.

வளர்ச்சி:

பாரசீகப் படையெடுப்பின் அபாயன் கிரேக்கர்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்தது. ஆபத்து நீங்கியவுடன் அவர்கள் மீண்டும் சண்டையினைத் தொடங்கினர். விதிவிலக்காக இருந்து ஏதென்ஸ் மட்டுமே அங்கு மக்களாட்சி முறை 200 ஆண்டுகள் நீடித்தது

• 30 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பெரிகிளிஸ் என்றும் மாபெரும் தலைவரை ஏதென்ஸ் பெற்றிருந்தது, ஸ்பார்ட்டாவோடு பகைமை, இடையூறுகள் ஆகியவற்றையும் மீறி ஏதென்ஸ், பிரமிக்கச் செய்யும் கட்டடங்களை கொண்ட உன்னத நகராக மாறியது. மாபெரும் கலைஞர்களும். சிந்தனையாளர்களும் இருந்த இக்குறிப்பிட்ட காலட் 'பெரிகிளிசின் காலம்' எனப்படுகிறது.

கொடைகள்:

சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற சிந்தனையாளர்கள் உண்மையைக் கண்டடைவதற்கான புதிய பாரபட்சமற்ற அடிப்படை ஒன்றைக்கண்டறியும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்,

டெமோகிரைடஸ், எபிகியூரஸ் ஆகிய இரவரும் உலகம் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்தனர். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்சும், தூசிடைபிதம் இக்காலத்தவர்கள்.

 

2. செவ்வியல் காலத்தில் இந்தியாவின் நிலை குறித்து எழுதுக.

விடை:

செவ்வியல் காலத்தில் இந்தியா:

குஷாணர்கள் காலம் ரோமானியப் பேரரசின் இறுதி காலகட்டமான ஜுலியஸ் சீசரின் ஆட்சி காலத்தின் சமகாலமாகும்.

ஜுலியஸ் சீசரின் காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் களப்பிரர் காலம் செவ்வியல் காலத்தின் இறதிக்காலமாகும் 4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகள்.

தேக்கு, மிளகு, மணிகள், தந்தம் போன்றவை மலபார் கடற்கரை வழியாக பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.

பதினெண்மேல்கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் தொகுக்கப்பட்டன. சங்ககாலம் செவ்வியல் காலத்தின் சமகாலமாகும் (கி.மி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை).

 

வரலாற்றுடன் வலம் வருக

மாணவர்களுக்கான செயல்பாடுகள்

1. ஐரோப்பிய வரைபடத்தில் மேலை மற்றும் கீழை ரோமானிய பேரரசுகளின் எல்லைகளைக் குறிக்கவும்.

2. ஆசிரியரின் உதவியோடு மாணவர்கள் கூகுள் இணையத்தில் கிரேக்கம், ரோம் மற்றும் சீனாவின் சிறப்புமிக்க கட்டடக்கலை அழகினைப் பார்க்கவும்.

ஆசிரியர் வழிகாட்டுதலுடன் ஒப்படைப்பு:

 1. படத்தொகுப்பைத் தயாரித்தல் : கிரேக்க, ரோமானிய, பைசாண்டிய மற்றும் சீனப் பேரரசுகளின் தலைசிறந்த கலைப்படைப்புகள் -தொடர்பான படத்தொகுப்பைத் தயாரிக்கவும்.

2. புகழ்பெற்ற ரோமப் பேரரசர்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சுருக்கமாக எழுதுக.

 

மேற்கோள் நூல்கள்

1. கிறிஸ் ஹார்மன் - உலக மக்கள் வரலாறு, பாரதி புத்தகாலயம், 2018.

2. ஜவஹர்லால் நேரு - உலக சரிதம், அலைகள் வெளியீட்டகம்.

3. கி.. அநுமந்தன் - பண்டைய கிரீஸின் வரலாறு - .பா.... கழகம் (ஆவணப்பதிப்பு, ஆகஸ்ட் 2017).

 4. ஜே.பி. பியூரி - கிரேக்க நாட்டு வரலாறு - தமிழாக்கம் பி. இராமாநுஜம் தேவதாஸ், .எஸ். பாக்கியநாதன் .பா.... கழகம் (ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017).

5. Chris Harman, People's History of the World, Verso, 1999.

6. Philip Ralph and Edward McNail Burns, The World Civilizations: From the Stone Age to the New Millennium, Library of Congress, 1968.

7. Richard Overy (ed.), Complete History of the World, Harper Collins Publishers, 2007.

 8. Jawaharlal Nehru, Glimpses of World History, Penguin.

 

இணையச் செயல்பாடு

செவ்வியல் உலகம்

விளையாடிக் கற்போமா கிரேக்க நாகரிகத்தை!


படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Adventures in Ancient Greece என்னும் இணையப் பக்கத்திற்குச் செல்லவும். திரையில் உள்ள OK என்பதைச் சொடுக்கி, பெயரை உள்ளிட்டுச் செயல்பாட்டைத் துவங்கவும்.

படி 2: திரையின் இடப்பக்கம் உள்ள Note scroll என்பதில் வேண்டிய குறிப்புகளை எழுதிக்கொள்ளலாம். கீழ்ப்பக்கம் Timeline, Map, Athens போன்ற பல தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி 3: Timeline என்பதில் கிரேக்கம் சார்ந்த பொருத்து அட்டைக் கொடுக்கப்பட்டிருக்கும். பொருத்தி நிறைவு செய்க. Map இல் கிரேக்கத்தின் முக்கிய நகரங்களும், மக்களின் வாழ்வியல் முறைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைத் தெரிந்துகொள்க.

படி 4: Quiz என்பதில் இதுவரைத் தெரிந்து கொண்ட செய்திகளின் அடிப்படையில் கேட்கப்படிருக்கும் -வினாக்களுக்கு விடையளிக்க.

உரலி : http://mystery-productions.com/hyper/Hypermedia 2003/Miller/AM hypermedia/Artifact/go.htm

Tags : The Classical World | History | Social Science செவ்வியல் உலகம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Classical World : Answer the following in detail The Classical World | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம் : விரிவான விடையளி - செவ்வியல் உலகம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்