Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

C++ ஓர் அறிமுகம் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 9 : Introduction to C PlusPlus

   Posted On :  03.08.2022 11:59 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

குறு வினாக்கள், சிறு வினாக்கள், நெடு வினாக்கள், முக்கியமான கேள்விகள் - அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : தரவினங்கள், மாறிகள் மற்றும் கோவைகள்

C++ ஓர் அறிமுகம்

மதிப்பீடு


பகுதி

குறு வினாக்கள்


1. வில்லைகள் என்றால் என்ன? C++ -ல் உள்ள வில்லைகளை கூறுக.

விடை : ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு, வில்லைகள் அல்லது மொழித் தொகுதி என்று அழைக்கப்படுகிறது. C++ பின்வரும் வில்லைகளை கொண்டுள்ளது.


(i) சிறப்புச் சொற்கள் (Keywords)

(ii) நிலையுருக்கள் (Literals)

(iii) குறிப்பெயர்கள் (Identifiers) 

(iv) செயற்குறிகள் (Operators)

(v) நிறுத்தற்குறிகள் (Punctuators)

 

2. சிறப்புச் சொற்கள் என்றால் என்ன? சிறப்புச் சொற்களை குறிப்பெயர்களாக பயன்படுத்தலாமா?

விடை :

(i) C ++ -நிரல் பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுடன் (reserved words), அவை C++ நிரல்களைக் கட்டமைக்க, சிறப்பு அவசியமான கூறுகளாகும்.

(ii) சிறப்புச் சொற்களை குறிப்பெயர்களாக பயன்படுத்த முடியாது.

 

3. பின்வரும் மாறிலிகள் எந்த வகை மாறிலிகள் ஆகும்?

(i) 39 (ii) 032 (iii) 0XCAFE (iv) 04.14

விடை :

(i) முழு எண் மாறிலிகள்

(ii) எண்ணிலை / எண்ம மாறிலிகள்

(iii) பதினாறு நிலை மாறிலிகள்

(iv) மதிப்புப் புள்ளி மாறிலிகள்

 

4. கீழ்க்கண்ட மெய்யான மாறிலிகளை அடுக்குகுறி வடிவில் எழுதுங்கள்:

(i) 23.197 (ii) 7.214 (iii) 0.00005 (iv) 0.319

விடை :

(i) 0.23197 × 102  0.23197E02

(ii) 0.7214 × 101  0.7214E01

(iii) 0.5 × 10-4  0.5E.04

(iv) 0.0319 × 101  0.0319E01

 

n = 10; எனில், n >> 2; ன் விடை என்ன?

விடை : n = 10  (00001010)2

n >>2  (00000010)2  210

 

6. பொருத்துக:


A : B

(a) வகுமீதி : (1) வில்லைகள்

(b) வரம்புச்சுட்டி : (2) வகுத்தலின் மீதி

(c) தரவு ஈர்ப்பு : (3) நிருத்தக்குறிகள்

(d) மொழித் தொகுதி : (4) தரவு பெறும்

[விடை: (a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)]

(a) வகுமீதி : (2) வகுத்தலின் மீதி

(b) வரம்புச்சுட்டி : (3) நிருத்தக்குறிகள்

(c) தரவு ஈர்ப்பு : (4) தரவு பெறும்

(d) மொழித் தொகுதி : (1) வில்லைகள்

 

பகுதி -

சிறு வினாக்கள்


1. சிறப்புச் சொற்கள் (keywords) மற்றும் குறிப்பெயர்கள் (identifiers) -க்கு இடையே உள்ள வேறுபாடுகளை விவரி?

விடை:


சிறப்புச் சொற்கள்

C++ நிரல் பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுடன் அவை C++ நிரல்களை கட்டமைக்கக் கூடிய சிறப்பு அவசியமான கூறுகளாகும்

.கா. break, continue, goto, void, if, for

குறிப்பெயர்கள்

குறிப்பெயர்கள் என்பது C++ நிரலில் வெவ்வேறு பகுதிகளுக்கு கொடுக்கப்படும் பெயர்களாகும். இவை பயனரால் வரையறுக்கப்பட்ட, மாறிகள், செயற்கூறுகள், அணிகள், இனக் குழுக்கள் போன்றவை ஆகும். இவை ஒரு நிரலின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள் ஆகும்.

.கா. load, mark, encmo, no

 

2. C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தியா? எழுத்து வடிவ உணர்த்தி (case sensitive) என்பதன் பொருள் என்ன?

விடை: C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தி மொழியாகும். பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் வெவ்வேறாக கருதப்படுகின்றன.

 

3. "=" மற்றும் "==" வேறுபடுத்துக.

விடை:


=

(i) இது மதிப்பிருத்து செயற்குறி.

(ii) ஒரு மதிப்பிருத்து கூற்றின் வலது பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருத்தும்.

.கா. a = b, b யின் மதிப்பு a-ன் மாறியில் இருத்தும்

==

(i) இது ஒரு ஒப்பீட்டுச் செயற்குறி.

(ii) செயலேற்பிகளுக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது

(iii) .கா. (a = b) செயலேற்பி a, செயலேற்பி b யுடன் ஒப்பிட்டு ஒப்பீட்டின் அடிப்படையில் 0 அல்லது 1 வரும்.

 

4. a=10, b =15; எனில் a^b-யின் மதிப்பு என்ன?

விடைa^b                                  

10^15

1010 = 10102

1510 = 11112


a^b = 01012 = 510

 

5. தொடரியல் பிழை (Syntax error) மற்றும் இயக்க நேர பிழை (Run time error) இவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

விடை :


தொடரியில் பிழை

தொடரியல் அல்லது இலக்கணம் (Syntax) என்பது நிரல்களை உருவாக்குவதற்கு தேவையான இலக்கண விதிமுறைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் மூலக் குறிமுறையை உருவாக்குவதற்கு தனி தனி விதிமுறைகள் உள்ளன.

.கா. cout<<"welcome to programming in C++"

இயக்க நேர பிழை

ஒரு நிரலை இயக்கும் போது, இயக்க நேரப்பிழை தோன்றலாம். காரணம், முறையில்லாத செயல் முறைகளால் இந்த பிழை ஏற்படும்.

.கா. இல்லாத ஒரு கோப்பை நிரலானது திறக்க முற்படும்போது இயக்க நேரப்பிழை ஏற்படுகிறது.

 

6. தொடரியல் பிழை (Syntax error) மற்றும் தர்க்கரீதியான பிழை (Logical error) இவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கூறுக.

விடை :


தொடரியில் பிழை

(i) தொடரியல் அல்லது இலக்கணம் (Syntax) என்பது நிரல்களை உருவாக்குவதற்கு தேவையான இலக்கண விதிமுறைகளின் தொகுப்பாகும்.  ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் மூலக் குறிமுறையை உருவாக்குவதற்கு தனி தனி விதிமுறைகள் உள்ளன.

(ii) C++ ன் இலக்கண விதிமுறைகள் மீறப்படும் போது தொடரியல் பிழைகள் ஏற்படுகின்றன.

தர்க்கரீதியான பிழை

(i) ஒரு நிரலானது இலக்கண விதிமுறை படி சரியாக இருந்தும், தேவையான விடையை வழங்காமல் இருக்கலாம். ஏனெனில் மாறி / செயற்குறி / இயக்கப்படும் வரிசை போன்றவற்றில் ஏதேனும் தவறு இருப்பின், இந்த பிழையானது தோன்றும்.

(ii) இதன்படி, நிரலானது இலக்கண விதிமுறைப்படி சரியாக| இருந்து தருக்க (logic) முறைப்படி தவறாக உள்ளது. ஆகையால் சொற்றொடர் பிழை தருக்க பிழை, என்றும் அழைக்கப்படும்.

 

7. தலைப்புக் கோப்பின் பயன் யாது?

விடை : தலைப்பு கோப்பு என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட பல்வேறு பொருள் உறுப்பினர்களை உள்ளடக்கியது. நிரலில் உறுப்பினர்களை பயன்படுத்த வேண்டுமானால் அதற்கான சரியான தலைப்பு கோப்பை பயன்படுத்த வேண்டும்.

 

8. main செயற்கூற்றின் சிறப்பு யாது?

விடை :

(i) C/C++ நிரலானது செயற்கூறுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு C++ நிரலும் main() செயற்கூறினைக் கட்டாயமாக்கப் பெற்றிருக்க வேண்டும்.

(ii) செயல்படுத்தப்படும் கூற்றுகள் main() செயற்கூறினுள் இருக்க வேண்டும்.

 

9. உள்ளடக்க தொகுப்பானின் (include compiler directive) இரண்டு பயன்பாடுகளை எழுதுக.

விடை :

(i) அனைத்து C++ நிரல்களும் include கூற்றுடன் குறியுடன் தொடங்கும். # என்பது ஒரு முன்செயலி நெறியுறுத்தும். இந்த கூற்றுகள் நிரல் தொகுப்புக்கு முன்னதாகவே செயல்பட தொடங்கும்.

(ii) #include<iostream> எனும் கூற்று, iostream என்னும் தலைப்புக் கோப்பினை நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு நிரல் பெயர்ப்பிக்கு உணர்த்துகிறது.

 

10. மெய் மாறிலிகளில் (real constants) பின்வருவனவற்றை எழுதுக.

(i) 15.223 (ii) 211.05 (iii) 0.00025

விடை :

(i) 1.5223 × 101  1.5223E−1

(ii) 2.1105 × l02  2.1105E−2

(iii) 25 × l0−5  25E −5

 

பகுதி -

பெரு வினாக்கள்


1. C++ -ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.

விடை :

இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும் செயற்குறிகள் இரும செயற்குறிகள் என்று அழைக்கப்படுகின்றன.

(i) கணக்கீட்டுச் செயற்குறிகள்

(ii) ஒப்பீட்டு செயற்குறிகள்

(iii) மதிப்பிருத்து செயற்குறிகள்

(iv) தருக்கச் செயற்குறிகள்

(i) கணக்கீட்டுச் செயற்குறிகள் (Arithmetic Operators): கணக்கீட்டுச் செயற்குறிகள் எளிய கணிதச் செயல்பாடுகளாகிய கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற கணக்கீடுகளை செயல்படுத்துகிறது.

(ii) ஒப்பீட்டு செயற்குறிகள் (Relational Operators): ஒப்பீட்டுச் செயற்குறிகள் செயலேற்பிகளுக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது. ஒப்பீட்டு செயற்குறிகள் இரண்டு செயலேற்பிகள் மீது செயல்படுத்தப்படும் போது, விடையானது பூலியன் மதிப்பாக இருக்கும். 1 அல்லது 0 என்பது முறையே சரி அல்லது தவறு என்பதை குறிக்கிறது. C++, ஆறு ஒப்பீட்டுச் செயற்குறிகளை வழங்குகிறது.

(iii) தருக்கச் செயற்குறிகள் (Logical Operators): தருக்கச் செயற்குறிகள், தருக்க மற்றும் ஒப்பீட்டு கோவைகளை மதிப்பிட பயன்படுகிறது. தருக்க செயற்குறிகள் செயலேற்பிகளாகிய தருக்க கோவைகளின் மீது செயல்படுகிறது. C++ மூன்று தருக்கச் செயற்குறிகளை வழங்குகிறது.

• AND, OR இரண்டும் இரும செயற்குறிகள்

(iv) மதிப்பிருத்து செயற்குறி (Assignment Operator): செயற்குறி = (சமம்) என்பது சாதாரண மதிப்பிருத்து செயற்குறி ஆகும். ஒரு மதிப்பிருத்து கூற்றின் வலப்பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருத்தும். இது பொதுவாக எல்லா கணிப்பொறி மொழிகளிலும் பயன்பாட்டில் உள்ளது. இது ஒரு இரும செயற்குறி ஆகும்.

C++ பலவிதமான மதிப்பிருத்து செயற்குறிகளைப் பயன்படுத்துகிறது. அவைகள் குறுக்கு வழி மதிப்பிருத்து செயற்குறிகள் எனப்படும்.

 

2. பிழைகளின் வகைகள் யாவை?

விடை :

பொதுவான பிழை வடிவங்கள் பின்வருமாறு:

பிழையின் வகைகள் : விளக்கம்

இலக்கணப்பிழை அல்லது தொடரியல் பிழை (Syntax Error) :

(i) தொடரியல் அல்லது இலக்கணம் (Syntax) என்பது நிரல்களை உருவாக்குவதற்கு தேவையான இலக்கண விதிமுறைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் மூலக் குறிமுறையை உருவாக்குவதற்கு தனி தனி விதிமுறைகள் உள்ளன.

(ii) C++ன் இலக்கண விதிமுறைகள் மீறப்படும் போது தொடரியல் பிழைகள் ஏற்படுகின்றன.

(iii) எ.கா. பின்வருமாறு தட்டச்சு செய்தால் C++ பிழையை ஏற்படுத்தும்.

cout<<"Welcome to Programming in C++"

(iv) C++ இலக்கண விதிமுறைகளின் படி அனைத்து இயக்க கூற்றுகளும் கண்டிப்பாக அரைப்புள்ளியுடன் (;) முற்றுப்பெற வேண்டும். ஆனால் இந்த கூற்று அரைப்புள்ளியுடன் (;) முடிக்கப்படவில்லை.

சொற்றெடர் பிழை (Semantic Error) :

(i) ஒரு நிரலானது இலக்கண விதிமுறை படி சரியாக இருந்தும், தேவையான விடையை வழங்காமல் இருக்கலாம். ஏனெனில் மாறி/ செயற்குறி/ இயக்கப்படும் வரிசை போன்றவற்றில் ஏதேனும் தவறு இருப்பின், இந்த பிழையானது தோன்றும்.

(ii) இதன்படி, நிரலானது இலக்கண விதிமுறைப்படி சரியாக இருந்து தருக்க (logic) முறைப்படி தவறாக உள்ளது. ஆகையால் சொற்றொடர் பிழை தருக்க பிழை, என்றும் அழைக்கப்படும்.

இயக்க நேர பிழை (Run-time error) :

(i) ஒரு நிரலை இயக்கும் போது, இயக்க நேரப்பிழை தோன்றலாம். காரணம், முறையில்லாத செயல்முறைகளால் இந்த பிழை ஏற்படும். (ii) எ.கா. இல்லாத ஒரு கோப்பை நிரலானது திறக்க முற்படும்போது இயக்க நேரப்பிழை ஏற்படுகிறது.

 

3. a = 15, b = 20; எனில் கீழ்காணும் செயல்பாட்டிற்கான விடை யாது.?  

(a) a&b (b) a|b (c) a^b (d) a>>3 (e) (~b)

விடை :

(a) a&b

a(15) = 01111

b(20) = 10100

a & b = (00100)

a & b = 00100 4

(b) a|b

a(15) = 01111

b(20) = 10100

(a|b) = 11111

(a | b) = 31

(c) a ^ b

a(15) = 01111

b(20). = 10100

(a ^ b) = 11000

a 24

(d) a >> 3

a= 15 = 15/a3 = 15/8 = 1

15>>3 = 1

(e) (~b)

b(20) = 10100

~ b = 01011 =11

 

சுய மதிப்பீடு

 

1. நிலையுரு என்றால் என்ன? C++ல் முழு நிலையுருக்களின் வகைகள் யாவை?

விடை :

ஒரு நிரல் இயங்கும்போது மதிப்புகள் மாறாத தரவுகள் நிலையுருக்கள் ஆகும். எனவே, நிலையுருக்கள் மாறிலிகள் என அழைக்கப்படுகிறது. மூன்று வகையான முழுஎண் மாறிலிகள் உள்ளன.

(i) பதின்மம்

(ii) எண்ணிலை

(iii) பதினாறு நிலை.

 

2. பின்வருவன எவ்வகையான மாறிலிகள்?

() 26 () 015 () 0×F () 014.9

விடை :

() 26 - Decimal பதின்மம்

() 015 - Octal எண்ணிலை

() 0×F - Hexa decimal பதினாறுநிலை

() 014.9 - Real constants மெற்மாறிலி / Floating point constants மிதப்புப்புள்ளி மாறிலி

 

3. C++ ல் குறியுரு மாறிலி என்றால் என்ன?

விடை : குறியுரு மாறிலி என்பது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் ஒற்றை குறியுருவைக் கொண்டிருக்கும். C++-ல் ஒரு குறியுரு மாறிலி, ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் ஒற்றை எழுத்தை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும்.

 

4. C++ ல் விடுபடுவரிசை எவ்வாறு குறிக்கப்படுகிறது?

விடை : ஒரு விடுபடுவரிசை ஒரு பின்சாய்வுக் குறியீட்டால் குறிக்கப்படுகிறது, அதன் பின் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் வரலாம்.

 

5. பின்வரும் மெய் மாறிலிகளை படி அடுக்கு முறையில் எழுதுக.

() 32.179 () 8.124 () 0.00007

விடை :

() 32.179 32179E-3

() 8.124 8124E-3

() 0.00007 7 × 10-5 7E-5

 

6. பின்வரும் மெய் மாறிலிகளை மிதப்புப் புள்ளி எண் வடிவம் எழுதுக.

() 0.23E4 () 0.517E-3 () 0.5E-5

விடை :

() 0.23E4 0.000023

() 0.517E-3 0.517 × 10-3 0.000517

() 0.5E-5 = 0.5 × 10-5 0.000005

 

7. சரத்தில் மதிப்பிலி (\0) குறியுருவின் முக்கியத்துவம் என்ன?

விடை : சரநிலையுருக்கள் தானமைவாக (\0) என்னும் சிறப்புக் குறியுருவை ஈற்றில் இணைத்துக் கொள்ளும்.

 

8. செயற்குறிகளின் பயன் யாது?

விடை : செயற்குறிகள் கணித, தருக்க செயல்பாடுகளை செய்யப் பயன்படும் குறியீடுகளாகும்.

 

9. இரும செயற்குறி என்றால் என்ன? கணித இரும செயற்குறிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.

விடை : இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும் செயற்குறிகள் இரும செயற்குறி எனப்படும்.

(.கா) x = a + b − c.

 

10. வகுமீதி (%) செயற்குறியின் செயல்பாடு என்ன?

விடை : செயற்குறியானது வகுத்தலின் மீதியை கண்டுபிடிக்க உதவுகிறது.

(.கா) 10% 3 = 1 (வகுத்தலின் மீதி)

 

11. 8.5% 2 - விடை யாது?

விடை : பிழை. 0.5 ((நினைவூட்டல் பதில்).

 

12. R - ன் தொடக்க மதிப்பு 35 எனில் S=(R −)+(++R), என்ற கோவையில், S-யின் மதிப்பு என்ன?

விடை : R = 35

S = (R--) + (++R)

= 35 + 35

S = 70

 

13. தொடக்கத்தில் K=20 எனில் j = - - k + 2k என்ற கோவையின் விடை யாது?

விடை : J = --K + 2K K = 20

= 19 + (2 × 20)

= 19 + 40

= 59

 

14. j =22 மற்றும் p=3 எனில் p = p * ++j என்பதன் விடை யாது?

விடை : p = p * ++j Where J = 22 P = 3

= 3 * 23

= 69

 

15. i=8, j=10 மற்றும் k=8 எனில் பின்வரும் கோவைகள் மதிப்பு என்ன?

(i) i<k (ii) i<i (iii) i>=k (iv) i==j (v) j!=k

விடை :

(i) i<k = 8 < 8 = False (0)

(ii) i<j. = 8 < 10 = True (1)

(iii) i>=k = 8 > = 8 = True (1)

(iv) i==j =8==10 = False (0)

(v) j!=k = 10! = 8 = True (1)

 

16. பின்வரும் கோவைகளின் மதிப்பீட்டு வரிசை முறையை எழுதுக.

(i) i + 3 >= j – 9 (ii) a+10 < p −3 + 2q

விடை :

(i) i + 3 >= j – 9


(ii) a+10 < p −3 + 2q


 

17. பின்வரும் கூற்றுக்கு தருக்க கோவையை எழுதுக மதிப்பெண் 75 எனில் தரம் A.

விடை :

Consider if you have 3 subject

K=[(marks1 ==75)&&(marks 2 ==75) && (mark3 ==75]

If (K==1)

cout << "grade = A"> if(marks>=75)

Else (or) grade 'A'

cout<<"nograde"


செய்முறைப் பயிற்சி


பின்வரும் C++ நீரலை DEV C++ IDE- யில் தட்டச்சு செய்து இயக்குக. நீரல்பெயர்ப்பி / தொகுப்பான் ஏதேனும் பிழையை சுட்டிக்காட்டினால் அதை சரி செய்து, சரியான விடை வரும் வரை மீண்டும் மீண்டும் இயக்கவும்.

1. மூன்று பாட மதிப்பெண்களின் கூட்டுத்தொகையை கண்டறியும் C++ நிரல்

#include <iostream>

using namespace std;

int main()

{

int ml, m2, m3, sum;

cout << “\n Enter Mark 1: ”;

cin >> m1;

cout<< “\n Enter Mark 2: ”;

cin >> m2;

cout<<”\n Enter Mark 3: ”;

cin >> m3;

sum = ml + m2 + m3;

cout<< ”\n The sum = ” << sum;

}

கொடுக்கப்படும் மதிப்பெண்களின் சராசரியை கணக்கிடும் வகையில், மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் வேண்டிய மாற்றங்களை செய்து இயக்குக.

விடை :

#include <iostream>

using namespace std;

int main()

{

int ml, m2, m3, avg;

cout << "\n Enter the mark In";

cin >> m1>>m2>>m3;

avg = (ml+m2+m3)/3;

cout <<"The average = "<<avg;

}

 

2. வட்டத்தின் பரப்பளவை கண்டறியும் C++ நிரல்.

#include <iostream>

using namespace std;

int main()

{

int radius;

float area;

cout<< ”\n Enter Radius: ”;

cin >> radius;

area = 3.14 * radius * radius;

cout<< "\n The area of circle =” << area;

}

விடை :

#include <iostream>

using namespace std;

int main()

{

float r, area;

Cout<< "\n Enter Radius: ";

cin >> r;

area = 3.14 * r * r;

cout<< "\n The Area of the circle is " << area;

}

வெளியீடு :

Enter Radius: 6.5

The Area of the circle is 132.665

 

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் பிழைகளை கண்டறிக.

Using namespace std;

int main()

{

Cout<< “Enter a value ”;

cin << numl >> num2

num+num2=sum;

cout >>“\n The Sum= ” >> sum;

விடை :

1. #include<iostream.h>(pre-processor statement missing)

2. int numl, num2; (variable declaration statement missing)

3. cin >> numl >> num2; (instead of extraction operator, insertion operator in the statement)

4. sum = numl + num 2; (always the expression come in RHS)

5. cout << "\n The sum = " << sum; (insertion operator is required)

6. } (to End the program using curly braces)

சரியான நிரல்:

#include<iostream.h>

int main ()

{

cout << "Enter a value";

cin>> numl >>num2:

sum = num1 + num2;

cout << "\n The sum = "<<sum;

}

 

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் எந்த வகையான பிழை உள்ளது என்று கண்டறிக:

#include <iostream>

using namespace std;

int main()

{

int h=l0; w=12;

cout<< ’’Area of rectangle” << h+w;

}

விடை:

தொடரியல் பிழை அல்லது இலக்கணப் பிழை.

int h = 10, w = 12;

Cout<< "Area of rectangle"<<h + w; 


தரவினங்கள், மாறிகள் மற்றும் கோவைகள்

மதிப்பீடு


பகுதி -

குறு வினாக்கள்


1. Const சிறப்பு சொல் பற்றி எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு எழுதுக.

விடை : மாறிலியை அறிவிப்பதற்கான சிறப்பு சொல் const ஆகும். const சிறப்பு சொல் மாறியின் அணுகுநிலையை மாற்றுகிறது அல்லது முறைப்படுத்துகிறது. எனவே இது அணுகுநிலை பண்பணர்த்தி எனவும் அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு: int num = 100;

 

2. setw( ) வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன?

விடை : setw() கையாளுகை செயற்கூறு வெளியீட்டிற்காக ஒதுக்கப்பட்ட புலத்தின் அகலத்தை வரையறுக்கிறது. வெளியீட்டில் எழுதப்பட வேண்டிய குறைந்தபட்ச குறியுரு எண்ணிக்கையை புலத்தின் அகலம் நிர்ணயிக்கிறது.

கட்டளையமைப்பு:

set w (எழுத்துருக்களின் எண்ணிக்கை)

 

3. குறியுரு(char) தரவினம் ஏன் முழு எண் தரவினமாக கருதப்படுகிறது?

விடை : இது முழு எண் வகையாக கருதப்படுகிறது. ஏனெனில், அனைத்து குறியுருக்களும் நினைவகத்தில் அதனுடைய தொடர்புடைய ASCII குறியீடுகளாகவே குறிக்கப்படுகின்றன char என குறிப்பெயர் குறிக்கப்பட்டால் C++, குறியுரு அல்லது முழு எண் மதிப்பை சேமித்துக் கொள்ள அனுமதிக்கிறது.

 

4. மேற்கோள் மாறிகள் என்றால் என்ன? அதன் பயன் யாது?

விடை : முன்னரே, வரையறுக்கப்பட்ட மாறிகளுக்கு ஒரு மறுபெயரை குறிப்புகள் வழங்குகின்றன. குறிப்புகளின் அறிவிப்பு மாறியின் அடிப்படை தரவினத்துடன் குறியீட்டையும் கொண்டிருக்கும். குறிப்பு மாறியின் பெயரானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாறியின் மதிப்பை எடுத்துக் கொள்ளும்.

 

5. பின்வரும் C++ கூற்றுகள் சமமானதா என்பதை கண்டறிக.

char ch = 67;

char ch = 'C';

விடை : ஆம். இரண்டு கூற்றுகளும் சமமானது.


 

6. 56L மற்றும் 56 இடையே உள்ள வேறுபாடு என்ன?

விடை : 56L இது Long என்ற பண்புணர்த்தியுடன் வந்துள்ளது. ஆகவே நினைவிடத்தில் அதற்கு 4 bytes ஒதுக்கப்படுகிறது.

56 இது சாதாரணமான பண்புணர்த்தியுடன் வந்துள்ளது. ஆகவே நினைவிடத்தில் அதற்கு 2 bytes ஒதுக்கப்படுகிறது.

 

7. பின்வருவனவற்றுள் எது தகுதி வாய்ந்த மாறிலி என கண்டறிந்து, அதனுடைய வகையை குறிப்பிடுக.

(i) 0.5 (ii) ‘Name' (iii) ‘\t' (iv) 27,822

விடை :

(i) 0.5 மிதப்புப்புள்ளி மாறிலி

(ii) 'பெயர்' - தவறான சரம் மாறிலி (இரட்டை மேற்கோள்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளது)

(iii) '\t' குறியுரு மாறிலி

 

8. x மற்றும் y என்பது இரண்டு இரட்டை மிதப்புப் புள்ளி மாறி என்றால் அதனை முழு எண்ணாக மாற்ற பயன்படும் C++ கூற்றை எழுதுக.

விடை :

double x;

double y;

int z = (int) x + (int)y; (or)

int z = (int) (x + y);

 

9. num=6 என்று முதலில் கொடுக்கப்பட்டால் பின்வரும் கூற்றின் விடையை காண்க.

(a) cout << num;

(b) cout << (num==5);

விடை :

(a) 6

(b) 0

 

10. பின்வரும் இரண்டு கூற்றில் எது தகுதியானது என கண்டறிந்து அதன் விடையை எழுதுக.

int a;

(i) a = 3,014; (ii) a = (3,014);

விடை :

(i) a = 3,014; (ii) a = (3,014);

இரண்டுமே தவறான கூற்று.

 

பகுதி -

சிறு வினாக்கள்


1. C++-ல் கணக்கீட்டுச் செயற்குறிகள் யாவை? ஒரும, இரும செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.

விடை: கணக்கீட்டுச் செயற்குறிகள் எளிய கணிதச் செயல்பாடுகளாகிய கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்கீடுகளைச் செயல்படுத்துகிறது.

(i) ஒருமச் செயற்குறிகள் ஒரே ஒரு செயலேற்பியை மட்டும் ஏற்கும்.

.கா.: &, ++, *, --

(ii) இருமச் செயற்குறிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு செயலேற்பிகள் தேவை.

.கா.: +, -, <, > =

 

2. மதிப்பிடுக. x + = x +++ x; Let x = 5;

விடை :

x + = x +++ x  Let x = 5

x = x + x +++x

= 5 + 5 + 6

x = 16.

 

3. ஒப்பீட்டு செயற்குறிகளும், தருக்கச் செயற்குறிகளும் எந்த வகையில் தொடர்புடையவை?

(i) தருக்க செயற்குறிகள், தருக்க மற்றும் ஒப்பீட்டு கோவைகளை மதிப்பிட பயன்படுகிறது. தருக்க செயற்குறிகள் செயலேற்பிகளாகிய தருக்க கோவையின் மீது செயல்படுகிறது.

(ii) ஒப்பீட்டு செயற்குறிகள் செயலேற்பிகளுக்கு இடையேயான உறவுமுறையைக் கண்டுபிடிக்க பயன்படுகிறது.

 

4. பின்வரும் C++ கோவையை மதிப்பிடுக. இங்கு x, y, Z என்பது முழு எண்கள் மற்றும் m, n என்பது மிதப்புப் புள்ளி எண்கள் x = 5, y = 4 மற்றும் m = 2.5;

(i) n = x + y / x;

(ii) z = m * x + y;

(iii) z = (x++) * m + x;

விடை:

(i) n = x + y/x; = 5 + (4/5)

n = 5 + 0.8 = 5.8

(ii) z = m * x + y;

z = (2.5 * 5) + 4

= 12.5 + 4 = 16.5

z = 16

(iii) z = (x ++) * m + x;

z = ((5 ++) * 2.5) + 5

= (5* 2.5) + 5

= 12.5 + 5

z = 17.5

z = 17 (z என்பது ஒரு முழு எண்)

 

சுய மதிப்பீடு


1. அடிப்படை தரவு வகை என்றால் என்ன?

விடை:

தரவுகளை கையாள்வதற்காக முன்னதாகவே வரையறுக்கப்பட்ட தரவு இனங்களின் தொகுப்பை C++ வழங்குகிறது. இவை அடிப்படை அல்லது உள்ளிணைந்த தரவு இனங்கள் என்று அழைக்கப்படுகிறது.

 

2. char என்ற தரவினம் குறியுருக்களைக் குறிக்க பயன்படுகிறது. ஆனால் ஏன் அது முழு எண் தரவினமாக பெரும்பாலும் வரையறுக்கப்படுகிறது?

விடை:

இது முழு எண் வகையாக கருதப்படுகிறது. ஏனெனில், அனைத்து குறியுருக்களும் நினைவகத்தில் அதனுடைய தொடர்புடைய ASCII குறியீடுகளாகவே குறிக்கப்படுகின்றன.

 

3. முழு எண்களை விட மிதப்புப் புள்ளி எண்கள் எந்த வகையில் சிறப்பானவை?

விடை:

(i) எண்களுக்கு இடையே உள்ள மதிப்பை குறிக்கிறது.

(ii) மதிப்புகளின் மிக அதிகமான பரப்பை குறிக்கிறது. (greater range of values)

 

4. double என்பது மற்றொரு மிதப்புப் புள்ளி தரவு வகை பிறகு ஏன் அதை தனி தரவினமாக பயன்படுத்துகிறோம்?

விடை: இது துல்லியமான இரட்டை மிதப்புப் புள்ளி எண்களாகும். (துல்லியம் என்பது தசம புள்ளிக்கு பிறகு வரும் இலக்கங்களை குறிக்கிறது) இரட்டை மிதப்புப்புள்ளி எண்கள் சாதரண மிதப்புப் புள்ளி எண்களையும் கையாளும். ஆனால், இது மிதப்புப் புள்ளி தரவினத்தை விட இரண்டு மடங்கு இடத்தை எடுத்துக் கொள்ளும்.

 

5. void தரவு இனத்தின் பயன் யாது?

விடை: void என்பதன் பொதுவான பொருள் வெற்றிடம். C++ void தரவின மதிப்புகள் ஒரு வெற்று தொகுப்பை குறிக்கிறது. இது எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது.

 

6. பண்புணர்த்தி என்றால் என்ன? அதன் பயன் யாது?

விடை:

(i) மதிப்பிலி தரவினத்தை தவிர மற்ற அடிப்படை தரவினங்களின் சேமிக்கும் அளவை மாற்றி அமைக்க பண்புணர்த்திகள் (modifiers) பயன்படுகின்றன.

(ii) அடிப்படை தரவினங்களின் நினைவக ஒதுக்கீட்டை மாற்றி அமைக்க (விவரிக்க அல்லது சுருக்க) பண்புணர்த்திகள் பயன்படுகின்றன. இவைகள் தகுதியாக்கிகள் (Qualifiers) என்றும் அழைக்கப்படுகின்றன.

 

7. பின்வரும் C++ கூற்றிலுள்ள பிழை என்ன?

long float x;

விடை:

(i) long double x; இதுவே சரியான கூற்று.

(ii) மிதப்புப்புள்ளி தரவினத்தின் பண்புனர்த்தி long double மட்டுமே உள்ளது. long float என எந்த பண்புணர்த்தியும் அல்ல. ஆகவே அதுதான் பிழை

 

8. மாறி என்றால் என்ன? மாறியை ஏன் குறியீட்டு மாறி என்று அழைக்கிறோம்?

விடை:

(i) மாறிகள் என்பவை குறிப்பிட்ட தரவு இனங்களின் மதிப்புகளை தாங்கியுள்ள, பெயரிடப்பட்ட நினைவக இடங்களை குறிக்கிறது. மாறிகள் என்பவை குறிப்பெயர்கள் ஆகும்.

(ii) முன்னரே, வரையறுக்கப்பட்ட மாறிகளுக்கு ஒரு மறுபெயரை குறிப்புகள் வழங்குகின்றன. குறிப்புகளின் அறிவிப்பு மாறியின் அடிப்படை தரவினத்துடன் குறியீட்டையும் கொண்டிருக்கும். குறிப்பு மாறியின் பெயரானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாறியின் மதிப்பை எடுத்துக் கொள்ளும்.

 

9. இயங்குநிலையில் மாறியை தொடங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

விடை:

நிரலின் இயக்கத்தின் போது ஒரு மாறிக்கு தொடக்க மதிப்பு இருத்த முடியும். இதுவே இயங்குநிலை தொடக்க மதிப்பிருத்தல் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

int num1, num2, sum;

sum = num1 + num2;

மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் ஒரே கூற்றாக பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

int sum = num1 + num2;

இயக்கத்தின் போது அறியப்பட்ட num1 மற்றும் num2 மதிப்புகளை பயன்படுத்தி sumக்கு தொடக்க மதிப்பு கருதப்படுகிறது.

 

10. கீழ்கண்ட கூற்றில் உள்ள பிழை யாது?

const int x;

விடை: இந்த கூற்றில் x ன் மதிப்பு வழங்கவில்லை ஆகவே இது தவறான கூற்று

cout int x = 10; இதுவே சரியான கூற்று ஆகும்.

 

11. இனமாற்றம் என்றால் என்ன?

விடை: ஒரு அடிப்படை இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றப்படும் முறையே இனமாற்றம் எனப்படும்.

 

12. உள்நிலை மாற்றம் வெளிநிலை மாற்றத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

விடை:

(i) உள்ளுறை இனமாற்றம் என்பது தொகுப்பான் தானாகவே மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும் ஆகவே இது தானியங்கி மாற்றம் என்றும் அழைக்கப்படும்.

(ii) வெளியுறை இனமாற்றம் என்பது பயனரை மாற்றம் செய்ய அனுமதிப்பது ஆகவே இது இன வார்ப்புரு என்று அழைக்கப்படுகிறது.

 

13. endl மற்றும் \n வேறுபடுத்துக.

விடை:

endl - புதிய வரியை செருகி தற்காலிக நினைவகத்தை காலி செய்கிறது

'\n' - புதிய வரியை மட்டும் செருகுகிறது.

 

14. குறிப்புரையின் பயன் யாது?

விடை: குறிப்பு மாறியின் பெயரானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாறியின் மதிப்பை எடுத்துக் கொள்கிறது. இதுவே குறிப்புகளின் பயன் ஆகும்.

 

15. Setprecision() - பயன் யாது?

விடை: கொடுக்கப்பட்ட இலக்கங்களின் எண்ணிக்கைக்கு இணையான எண்களை தசம எண்களாக காண்பிக்க பயன்படுகிறது.

 

செய்முறைப் பயிற்சி


1. இரண்டு மாறிகளின் மதிப்பை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதற்கான C++ நிரலை எழுதுக.

(a) மூன்றாவது மாறியைப் பயன்படுத்தி

(b) மூன்றாவது மாறியை பயன்படுத்தாமல்

விடை:

(a) மூன்றாவது மாறியைப் பயன்படுத்தி :

#include<iostream.h>

using namespace.std;

int main ()

{

int a, b, t;

cout<<"\n Enter First number";

cin>>a;

cout<<"\n Enter Second number";

cin>>b;

t=a;

a=b;

b=t;

cout<<a<<"\t"<<b;

return 0;

}

(b) மூன்றாவது மாறியைப் பயன்படுத்தாமல்:

#include<iostream.h>

using namespace.std;

int main ()

{

int a, b;

cout<<"\n Enter First number";

cin>>a;

cout<<"\n Enter Second number";

cin>>b;

a = a+b;

b = a-b;

a = a-b;

cout<<a<<'\t'<<b;

return 0;

}

 

2. பின்வருவனவற்றை செய்வதற்கு C++ நிரலை எழுதுக.

(a) வட்டத்தின் கால்பகுதிக்கான சுற்றளவு மற்றும் பரப்பளவை கண்டறிக.

(b) முக்கோணத்தின் பரப்பளவை கண்டறிக.

(c) வெப்பநிலையை செல்ஸியஸ்லிருந்து, ஃபாரன்ஹீட்டாக மாற்றுக.

விடை:

(a) வட்டத்தின் கால்பகுதிக்கான சுற்றளவு மற்றும் பரப்பளவை கண்டறிக.

#include<iostream.h>

using namespace.std;

int main ()

{

float area, peri,r;

cout<<"\n Enter radius";

cin>>r;

area=0.25*3.14*r*r;//Area=1/4πr2

peri=0.5*3.14*r;//perimeter= 1/2πr

cout <<"Area of a quadrant = "<< area<endl;

cout<<"Perimeter of a quadrant = " << peri <<endl;

return 0;

}

(b) முக்கோணத்தின் பரப்பளவை கண்டறிக.

#include<iostream.h>

using namespace.std;

int main()

{

float area, b, h;

cout<<"\n Enter base";

cin>>b;

cout<<"\n Enter height";

cin>>h;

area = 0.5*b*h //Area=1/2 bh

cout <<"Area of a triangle = "<< area<endl;

return 0;

}

(c) வெப்பநிலையை செல்லியஸ்லிருந்து, ஃபாரன் ஹீட்டாக மாற்றுக.

#include<iostream.h>

using namespace.std;

int main ()

{

float tempC, tempF;

cout<<"\n Enter celcius";

cin>>tempC;

tempF =(tempC * 1.8F)+32;

cout<<"Equivalent temperature of <<tempC <<"in Fahrenheit is"<< tempF<<endl;

return 0;

}

 

3. உன்னுடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் கூட்டுத்தொகை மற்றும் சராசரியை கண்டறிந்து, அனைத்து மதிப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக கூட்டுத்தொகை மற்றும் சராசரியுடன் காண்பிக்கவும், வடிவமைப்பு செயற்கூறுகளை பயன்படுத்தவும்.

விடை:

#include<iostream.h>

#include<iomanip.h>

using namespace std;

int main()

{

char name[30];

float E,L,M,S,SS,tot, per;

cout<<"\n Name = ";

cin>> name;

cout <<"\ Enter English, Language, Maths, Science, Social Marks";

cin >> E>> L>>M >> S >> SS;

tot = E+L+M+S+SS;

per = tot/500*100;

cout<<setw(20)<<"Name:"<<setw(10)<< name;

cout <<setw (20) <<"English:" <<setw(10)<< E<<endl;

cout <<setw (20) << "Tamil:"<<setw(10)<< T<<endl;

cout <<setw (20) <<"Maths:"<<setw(10)<< M<<endl;

cout<<setw(20)<<"Science:"<<setw(10)<<S <<endl;

cout<<setw(20)<<"SocialScience:"<< setw (10) << SS<<endl;

cout <<setw (20) <<"Total:" << setw(10) << tot<<endl;

cout << setw (20) << "Percentage:" << setw(10) << per<<endl;

return 0;

}


Tags : Introduction to C PlusPlus | Computer Science C++ ஓர் அறிமுகம் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 9 : Introduction to C PlusPlus : Answer the following questions Introduction to C PlusPlus | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - C++ ஓர் அறிமுகம் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்