இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 9 : Locomotion and Movement
முக்கிய கலைச்சொற்கள்
கலைச் சொற்கள் : விளக்கம்
1. அசிட்டைல் கொலைன் (Acetylecholine)
- இது நரம்பு மண்டலம் முழுவதும் காணப்படும் நரம்புணர்வு கடத்தியாகும்.
2. ஆக்டின் (Actin) - செல்சட்டகம் மற்றும் தசைச் செல்களில் உள்ள புரதமாகும். இது மெல்லிய இழைகளின் முதன்மை உட்பொருளாகும்.
3. அடினோசின் டிரை பாஸ்பேட் (ATP)
- இது, அடினைன், ரிபோஸ் மற்றும் மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகள் கொண்ட நியுக்ளியோடைட் ஆகும். உயிரிய மண்டலங்களில் ஆற்றல் பரிமாற்றத்தின் போது இதன் பங்கு மையமானதாகும்.
4. குருத்தெலும்பு (Cartilage) - கான்ட்ரோசைட் செல்களினால் உருவாக்கப்படுகிற உறுதியான,
மீட்சி தன்மை கொண்ட இணைப்புத்திசுவாகும்.
5. புறச்சட்டகம் (Exoskeleton) - உடலின் புறப்பரப்பில் அல்லது தோலில் காணப்படும் சட்டக பொருட்கள் ஆகும்.
(எ.கா) முதுகு நாணற்றவைகளான நத்தைகளின் ஓடு முதுகெலும்பிகளின் உரோமம்,
கூர்நகங்கள் நகங்கள் ஆகியன.
6. அகச்சட்டகம் (Exdoskeleton) - உயிரிகளின் உடலின் உட்பகுதியில் காணப்படும் சட்டகப் பொருட்கள் ஆகும். தசைகள் வெளியே அமைந்திருக்கும் முதுகெலும்பிகளின் சட்டக மண்டலம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
7. நெம்புகோல் முறை (Lever system) - மூட்டுகளில் காணப்படும் இயக்கம் நெம்புகோலை அடிப்படையாகக் கொண்டதாகும். மனித எலும்பு மண்டலம் மூவகை நெம்புகோல் வகைகளின் அடிப்படையில் செயலாற்றுகின்றன.
8. நடு அடுக்கு (Mesoderm) - இது கருவளர்ச்சி அடுக்குகளின் மைய அடுக்காகும். இதிலிருந்து தசை, சட்டக, சிறுநீரக இனப்பெருக்க மற்றும் சுற்றோட்ட மண்டல அமைப்புகள் தோன்றுகின்றன.
9. இயக்கு நியூரான் (Motor
neuron) - தண்டு வடத்திலிருந்து செயல்படு உறுப்புகளுக்கு நரம்புத்தூண்டல்களை எடுத்துச் செல்லும் நியூரான்.
10. மையோகுளோபின் (Myoglobin) - தசைச் செல்களில் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளோடு இணையும் இரும்பு (Haem)
பொருள் கொண்ட புரதம்.
11. மையோசின் (Myosin) - தசைச் சுருக்கத்தில் ஈடுபடும் முக்கிய புரதமாகும். தசைகளின் தடித்த இழைகளில் இப்புரதம் காணப்படுகிறது.
12. சார்கோலெம்மா (Sarcolemma) - செயல் மின்னழுத்தங்களை கடத்தும் திறன் கொண்ட,
தசைகளின் செல்சவ்வு
13. சார்கோமியர் (Sarcomere) - எலும்புத்தசைகளில், சுருக்கத்திற்கு காரணமான செயல் அலகு.
14. சார்கோபிளாஸ்மிக் வலை (Sarcoplasmic reticulam) - தசைசெல்லின் எண்டோபிளாச வலை இது தசை நுண்ணிழைகளை மூடியுள்ளது.
15. தசை நாண் (Tendon)
(ATP) - எலும்பையும்,
தசையையும் இணைக்கும் நாரிழை இணைப்புத்திசு