Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | இருநிலை எண்களின் கணக்கீடுகள்

எடுத்துக்காட்டு, படிநிலை | இருநிலை கூட்டல் மற்றும் கழித்தல் - இருநிலை எண்களின் கணக்கீடுகள் | 11th Computer Science : Chapter 2 : Number Systems

11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்

இருநிலை எண்களின் கணக்கீடுகள்

1. இருநிலை கூட்டல் 2. இருநிலை கழித்தல்

இருநிலை எண்களின் கணக்கீடுகள் (Binary Arithmetic)

பதின்ம எண்களைப் போலவே, இருநிலை எண்களிலும் அடிப்படை கணக்கீடுகளான, கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகியவைகளைச் செய்ய முடியும். இப்பகுதியில், இருநிலை எண்களின் கூட்டல் மற்றும் கழித்தல் செயல்முறைகளைப் பற்றி மட்டும் கற்கலாம்.

 

1. இருநிலை கூட்டல் (Binary Addition)

 

இருநிலை எண்களை விரைவாக கூட்டுவதற்கு பின்வரும் கூட்டல் அட்டவணை பயனுள்ளதாக இருக்கும்.


1 + 1 = 10 என்பதில், 0-வை மட்டும் வைத்துக்கொண்டு, 1-னை அடுத்த சுற்றுக்கு எடுத்து செல்ல வேண்டும். எனவே இது எடுத்து செல்லப்படும் பிட்" (Carry Bit) எனப்படும்.

 

எடுத்துக்காட்டு: கூட்டுக: 10112 + 10012


10112 + 10012 = 101002


எடுத்துக்காட்டு: இருநிலை எண் வடிவில் கூட்டுக: 2310 + 1210


படிநிலை 1: 23 மற்றும் 12யை இருநிலை எண் வடிவில் மாற்றுதல்



படிநிலை 2:

23 மற்றும் 12-யை இருநிலை எண் வடிவில் கூட்டுதல்:


 

2. இருநிலை கழித்தல் (Binary Subtraction)

 

இருநிலை எண் கழித்தல் விதிகளின் அட்டவணை:


0 லிருந்து 1- னைக் கழிக்கும் போது, அதன் முந்தைய "மிகு மதிப்பு பிட்" (MSB)-லிருந்து 1யை கடனாக பெறவேண்டும். அவ்வாறு 1- னை கடனாக பெறும் போது, அதன் மதிப்பு (முந்தைய மிகு மதிப்பு பிட்) 1 எனில், அதனை 0-ஆக மாற்ற வேண்டும். அல்லது அதன் முந்தைய மிகு மதிப்பு பிட் 0 எனில், அதற்கும் முந்தைய எந்த மிகு மதிப்பு பிட்டு 1- னை பெற்றுள்ளதோ அதனை கடனாக பெற்று, அதனையும் 0-ஆக மாற்ற வேண்டும். மேலும், அங்கிருந்து அதன் இடது பக்கமாக மீதமுள்ள அனைத்து 0 பிட்டுகளும் 1ஆக மாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டு: கழித்து எழுதவும் 10010102 - 101002


எடுத்துக்காட்டு: இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10


படிநிலை 1: - 21 மற்றும் 5 ஆகியவற்றை இருநிலை வடிவில் மாற்றுக.



படிநிலை 2:



படிநிலை 3:

- 21 மற்றும் 5க்கான இருநிலை கூட்டல்:



Tags : Example, Step | Binary Addition and Subtraction எடுத்துக்காட்டு, படிநிலை | இருநிலை கூட்டல் மற்றும் கழித்தல்.
11th Computer Science : Chapter 2 : Number Systems : Binary Arithmetic Example, Step | Binary Addition and Subtraction in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள் : இருநிலை எண்களின் கணக்கீடுகள் - எடுத்துக்காட்டு, படிநிலை | இருநிலை கூட்டல் மற்றும் கழித்தல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்