Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | குறியுரு எண்களின் இருநிலை பிரதியீடு

11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்

குறியுரு எண்களின் இருநிலை பிரதியீடு

கணிப்பொறிகள் நேர்மறை (குறியுறா) மற்றும் எதிர்மறை (குறியுரு) எண்களைக் கையாளும் திறன் பெற்றவை.

குறியுரு எண்களின் இருநிலை பிரதியீடு:

 

கணிப்பொறிகள் நேர்மறை (குறியுறா) மற்றும் எதிர்மறை (குறியுரு) எண்களைக் கையாளும் திறன் பெற்றவை. எதிர்மறை இருநிலை எண்களை எளிதாக குறிக்க பயன்படும் முறை "குறியுரு அளவு" (Signed Magnitude) முறை என்று அழைக்கப்படுகிறது. "குறியுரு அளவு' முறையில், இடது ஓர பிட்டான (Left most bit), மிகு மதிப்பு பிட் (MSB) “குறி பிட்” (Sign Bit) அல்லதுசமநிலை பிட்” (Parity Bit) என அழைக்கப்படுகிறது.

 

கணிப்பொறியில் எண்கள் பல்வேறு வழிகளில் பிரதியிடப்படுகின்றன. அவை,

 

·  குறியுரு அளவு பிரதியிடுதல் (Signed Magnitude Representation)

·  1-ன் நிரப்பி (1's compliment)

·  2-ன் நிரப்பி (2's compliment)

 

1. குறியுரு அளவு பிரதியிடுதல் (Signed Magnitude Representation)

ஒரு முழு எண்ணின் மதிப்பு அதன் முன்னொட்டான குறியை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. +' குறியுடனோ அல்லது எந்த ஒரு குறியும் இல்லாமலோ இருக்கும் எண்கள் நேர்மறை எண்களாக கருதப்படுகிறது.

'-' குறியை முன்னொட்டாக கொண்ட எண்கள் எதிர்மறை எண்களாக கருதப்படுகிறது.

 

எடுத்துக்காட்டு :

 

+43 அல்லது 43 ஒரு நேர்மறை எண்

 

-43 என்பது ஒரு எதிர்மறை எண்

 

குறியுரு இருநிலை பிரதியீட்டில், இடது ஓர பிட் அதன் குறிபிட்டாக கருதப்படுகிறது. இடது ஓர பிட் 0 எனில், அது நேர்மறை எண், 1 எனில் அது எதிர்மறை எண் எனக் கருதப்படும். எனவே, ஒரு 8 பிட் குறியுரு இருநிலை எண்ணில் அதில் 7 பிட்கள் மதிப்புகளைச் சேமிக்கும் தரவுபிட்டுகளாகவும் (Magnitude) மற்றும் இடது ஓர 1பிட் அதன் குறியாகவும் பயன்படுகிறது.

+43 என்பது நினைவகத்தில் கீழ்க்கண்டவாறு பிரதியிடப்படுகிறது.


-43 என்பது நினைவகத்தில் கீழ்க்கண்டவாறு பிரதியிடப்படுகிறது.


 

2. - 1ன் நிரப்பி (1's compliment)

 

குறியுரு எண்களைக் குறிப்பிடுவதற்கு இந்த முறை மிகவும் எளிதான ஒன்றாகும். இந்த முறை எதிர்மறை எண்களுக்கு அதாவது மிகு மதிப்பு பிட் 1 என தொடங்கும் மதிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஒரு எண்ணின் 1ன் நிரப்பைக் காண கீழ்க்காணும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

படிநிலை 1: கொடுக்கப்பட்ட பதின்ம எண்ணுக்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

படிநிலை 2: மாற்றப்பட்ட இருநிலை எண் 8 பிட்டுகளாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். 8 பிட்டுக்கும் குறைவாக இருப்பின், முன்னொட்டாக 0-க்களைச் சேர்த்து 8 பிட்டுகளாக மாற்றவும்.

படிநிலை 3: அனைத்து பிட்டுகளையும், தலைகீழாக மாற்றவும். (அதாவது 1 என்பதை ) எனவும், 0 என்பதை 1 எனவும் மாற்றுக.)

 

எடுத்துக்காட்டு:

 

(-24)10 கான 1-ன் நிரப்பு காண்க.


 

3. 2-ன் நிரப்பி (2's compliment)

 

எதிர்மறை எண்களுக்கான 2ன் நிரப்பி வழிமுறைகள் வருமாறு:

(அ) இருநிலை எண்களின் அனைத்து பிட்டுகளையும் தலைகீழாக்குக. (அதாவது, களை 0ஆகவும், 0- வை 1ஆகவும் மாற்றுக. இதுவே 1ன் நிரப்பி)

(ஆ) பின்னர், குறை மதிப்பு பிட்டுடன் 1- யைக் கூட்டவும்.

 

எடுத்துக்காட்டு :

 

(-24)10 ன் 2-ன் நிரப்பியைக் காண்க.



கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக.

(அ) 22 (ஆ) -13 (இ) -65 (ஈ) -46


11th Computer Science : Chapter 2 : Number Systems : Binary Representation for Signed Numbers in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள் : குறியுரு எண்களின் இருநிலை பிரதியீடு - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்