Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | புத்தக வினாக்கள் விடைகள்

காட்சித் தொடர்பு - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 23 : Visual Communication

   Posted On :  29.07.2022 06:21 pm

10வது அறிவியல் : அலகு 23 : காட்சித் தொடர்பு

புத்தக வினாக்கள் விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. II. பொருத்துக: III. குறு வினாக்கள் : IV. நெடு வினாக்கள் :


காட்சித் தொடர்பு

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது

அ) paint

ஆ) PDF

இ) MS Word

ஈ) Scratch

 

2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்

அ) கோப்புத் தொகுப்பு

ஆ) பெட்டி

இ) paint

ஈ) ஸ்கேனர்

 

3. நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?

அ) Script area

ஆ) Block palette

இ) Stage

ஈ) Sprite

 

4. நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது?

அ) Inkscape

ஆ) Script editor

இ) Stage

) Sprite

 

5. பிளாக்குகளை ( Block ) உருவாக்க பயன்படுவது எது?

அ) Block palette

ஆ) Block menu

இ) Script area

) Sprite

 

II. பொருத்துக:

 

1. நிரலாக்கப் பகுதி Script Area - குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes

2. கோப்புத் தொகுப்பு Folder - அசைவூட்ட மென்பொருள் Animation software

3. ஸ்கிராச்சு Scratch - நிரல் திருத்தி edit programs

4. ஆடை திருத்தி Costume editor - கோப்பு சேமிப்பு store files

5. நோட்பேடு Note pad - நிரல் உருவாக்கம் Build scripts

விடை:

1. நிரலாக்கப் பகுதி Script Area - நிரல் உருவாக்கம் Build scripts

2. கோப்புத் தொகுப்பு Folder - கோப்பு சேமிப்பு store files

3. ஸ்கிராச்சு Scratch - அசைவூட்ட மென்பொருள் Animation software

4. ஆடை திருத்தி Costume editor - நிரல் திருத்தி edit programs

5. நோட்பேடு Note pad - குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes

 

III. குறு வினாக்கள் :

 

1. ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?

அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப்பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH), இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programing Language) எம்ஐ டி ( Massachusetts Institute of Technology - MIT) என்றும் பல்கலைத் தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது.

 

2. திருத்தி (EDITIOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுதுக.

ஸ்கிரிப்பட் எடிட்டர் நிரல்களையும் இஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும். ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.

i) Script Area

ii) Block Menu

iii) Block Palette

 

3. மேடை (STAGE) என்றால் என்ன?

ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர். இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும். தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

 

4. ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?

ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்கள் என்பர். ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும். ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

 

IV. நெடு வினாக்கள் :

 

1. ஸ்கிராச்சு என்பதனை விரிவாக விளக்குக.

அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH). இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language) எம்ஐ டி (Massachusetts Institute of Technology - MIT) என்னும் பல்கலைத் தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது.ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று முக்கிய பகுதிகள் அவை

1. ஸ்டேஜ்

2. ஸ்பிரைட்டு

3. ஸ்கிரிப்ட் எடிட்டர்

மேடை (STAGE)

ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர். இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும். தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

ஸ்பிரைட்டு (SPRITE);

ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் ஸ்பிரைட்கள் என்பர். ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும். ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

ஸ்கிரிப்ட் எடிட்டர் (SCRIPT EDITOR) :

ஸ்கிரிப்ட் எடிட்டர் நிரல்களையும் இஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும். ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.

1. Script Area

2. Block Menu

3. Block Palette

Script Area:

இங்கு நிரல் கட்டமைக்கப்படுகிறது.

Block Menu:

இங்கிருந்து பிளாக்கு வகைமையைத் (block category - Programming statements) தேர்வு செய்யமுடியும்.

Block Palette

இங்கு பிளாக்குகளை (block) தேர்வு செய்யலாம்.


Tags : Visual Communication காட்சித் தொடர்பு.
10th Science : Chapter 23 : Visual Communication : Book Back Questions with Answers Visual Communication in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 23 : காட்சித் தொடர்பு : புத்தக வினாக்கள் விடைகள் - காட்சித் தொடர்பு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 23 : காட்சித் தொடர்பு