காட்சித்தொடர்பு - ஸ்கிராச்சு | 10th Science : Chapter 23 : Visual Communication
ஸ்கிராச்சு
(SCRATCH) மென்பொருள்
அறிமுகம்:
அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும்
விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH). இது
ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language) எம்ஐ
டி (Massachusetts Institute of Technology - MIT) என்னும்
பல்கலைத் தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம்
வடிவமைத்துள்ளது.
ஸ்கிராச்சு சூழல் திருத்தி
மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது. அவை
1) ஸ்டேஜ் (Stage)
2) ஸ்பிரைட் (Sprite)
3) ஸ்கிரிப்ட்
எடிட்டர் (Script Editor)
ஸ்டேஜ் (மேடை)
ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும்
போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ்; என்பர். இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.
ஸ்பிரைட்
ஸ்கிராச்சு சாளரத்தில்
பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் (Characters) ஸ்பிரைட்கள்
என்பர். ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக
காட்சியளிக்கும். ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
ஸ்கிரிப்ட் எடிட்டர் அல்லது காஸ்டியூம் (ஒப்பனை) எடிட்டர்:
நிரல்களையும் இஸ்பிரைட்
படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.
ஸ்கிராச்சு மென்பொருளைத்
திறந்தவுடன் மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சாளரம் புலப்படும். இடப்புற மேல்
பகுதியில் ஸ்டேஜ் பிரிவும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் ஸ்பிரைட் பட்டியல் பிரிவும்
வலப்புறத்தில் ஸ்கிரிப்ட் எடிட்டர் பிரிவும் இருக்கும்.
ஸ்கிரிப்ட் எடிட்டரின் மேல்
பகுதியில் Script,
Costume, Sound என மூன்று தத்தல்கள் இருக்கும்.
ஸ்கிரிப்ட்
எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
1) Script Area: இங்கு நிரல் (Script) கட்டமைக்கப்படுகிறது.
2) Block Menu: இங்கிருந்து
பிளாக்கு வகைமையைத் (blocks category-Programming Statements) தேர்வு செய்யமுடியும்.
3) Block Palette: இங்கு
பிளாக்குகளை (block) தேர்வு செய்யலாம்.
ஆடை தத்தலைத் (Costume tab) தேர்வு
செய்தால் ஆடை திருத்தி (Costume editor) புலப்படும்.
1) File/New தேர்வு
செய்க. புதிய செயல்திட்டம் (Project) உருவாகும்
2) Script Menu வில் Event ஐ தேர்வு செய்க. இப்போது சில கள்
தோன்றும். "When green flag clicked” என்ற block ஐ drag செய்து Script
area வில் வைக்கவும்.
3) Script → Motion menu வைத்
தேர்வு செய்து goto x:O y:0
என்ற block ஐ drag செய்து ஏற்கனவே நாம்
வைத்திருக்கும் "When green flag clicked" block ன் அடியில் சேர்க்கவும். இப்போது நமது Script area பின்வருமாறு
தெரியும்.
4) "move 10
steps" என்ற block ஐ ஏற்கனவே நாம் வைத்திருக்கும்
இரண்டு block களுக்கு அடியில் சேர்க்கவும். மேலும் "move
10 steps" என்பதில் உள்ள 10ஐ 100 ஆக மாற்றவும்.
5) இந்த நிரலை
இயக்க வலப்புற மேல்பகுதியில் உள்ள பச்சை நிறக் கொடியின் மீது சொடுக்கவும்.
1. Sound tab ஐ
தேர்வு செய்க. இப்போது தெரியும் Sprite list இல் ‘Sprite1’ என்பதைத் தேர்வு செய்யவும்.
2. 'மியாவ்'
என்ற ஒலி கேட்கும். வேறு ஒலி வேண்டும் எனில் speaker icon ஐ தேர்வு செய்து Sound library இல் இருந்து வெவ்வேறு
ஒலிகளைப் பெறலாம்.
3. Script tab → Sound → Play sound block ஐத் தெரிவு செய்க. அத்துடன் "When space key pressed"
block ஐச் சேர்க்கவும்.
4. நிரலை
இயக்கவும்.
எடுத்துக்காட்டு
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
1. Script tab
ல் Events option ஐ தேர்வு செய்க.
2. tab ஐ script
area விற்குள் இழுத்து வைக்கவும்
3. Script tab ல்
looks option ஐ தேர்வு செய்க. Say “ "
என்ற block ஐ Script area விற்குள் இழுத்து வைக்கவும்
4. Say tab னுள்
"Hello" என்ற வார்த்தையை தட்டச்சு செய்யவும்.
5. Script tab ->
Sounds option ஐ தேர்வு செய்க
"Play sound” block ஐ இழுத்து Script Area வினுள் விடவும். Audio file லிருந்து “Hello” sound ஐ தேர்வு செய்யவும்.
6. File menu -> Save தேர்வு செய்க. இப்போது உங்கள் Project சேமிக்கப்படும்.
7. நிரலை இயக்க
வலது மேல் ஓரத்தில் உள்ள பச்சை நிறக் கொடியை click செய்யவும்.
வெளியீடு: