காட்சித்தொடர்பு - அறிமுகம் | 10th Science : Chapter 23 : Visual Communication
அலகு 23
காட்சித்தொடர்பு
கற்றல்
நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள்
பெறும் திறன்களாவன:
* கோப்பு, கோப்புத்
தொகுப்பு ஆகியவற்றை வேறுபடுத்துதல்
* கோப்பு, கோப்புத்
தொகுப்பு ஆகியவற்றை உருவாக்க அறிதல்
* மென்பொருள் வழியாக
அசைவூட்டத்தை உருவாக்குதல்
அறிமுகம்
பொதுவாகவே கணினி என்றாலே
கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி, மையச்செயலகம்
போன்றவை மட்டுமே நினைவுக்கு வரும். கணினி, கணினியின்
பாகங்கள் போன்ற கணினியைக் குறித்த அறிமுகத்தை மட்டுமே ஆறாம் வகுப்பில் அறிந்து
கொண்டோம். அவற்றைத் தவிர கணினியை இயக்குவதில் சில வன்பொருள்களும் மென்பொருள்களும்
முக்கியப் பங்காற்றுகின்றன. நம் தேவைகளுக்கு ஏற்றவாறு கணினியை எவ்வாறு செயல்படுத்துவது
என்பதையும் இனி அறிந்து கொள்வோமா!
கணினியை நாம் நாடுவதற்கான
காரணம் அதன் வேகமும் சேமிப்புத்திறனுமாகும். கணினியில் எவ்வாறு நம் தகவல்களைச்
சேமித்து வைப்பது?
பல கோப்புகள் உள்ளடங்கிய கோப்புத்தொகுப்பிலோ அல்லது தனிக் கோப்பிலோ
நம் செய்திகளைச் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் கணினியில் கோப்பும் (Files)
கோப்புத்தொகுப்பும் (Folder) முதன்மையானவை என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.