Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ பல்லுருவாக்கம்: நினைவில் கொள்க
   Posted On :  21.09.2022 07:53 pm

11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம்

C++ பல்லுருவாக்கம்: நினைவில் கொள்க

C++ மொழியில் பல்லுருவாக்கம் செயற்கூறு பணிமிகுப்பு மற்றும் செயற்குறி பணிமிகுப்பு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

நினைவில் கொள்க: 


• C++ மொழியில் பல்லுருவாக்கம் செயற்கூறு பணிமிகுப்பு மற்றும் செயற்குறி பணிமிகுப்பு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.


• பணிமிகுப்பு என்பது ஒரே பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு பொருளைக் குறிக்கிறது.


• பணிமிகுத்த செயற்கூறு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தனித்த பொருள் கொண்ட செயற்கூறினை குறிக்கிறது.


• பணிமிகுத்த செயற்கூறுகள் ஒரே பெயரைக் கொண்டிருக்கும். ஆனால் முன்வடிவு வேறுபட்டிருக்கும் (அளபுருக்களின் எண்ணிக்கை மற்றும் தரவினம்)


• செயற்கூறின் அளபுருக்களின் பட்டியல் செயற்கூறு முன்வடிவு எனப்படுகிறது.


• இரண்டு செயற்கூறுகளில் ஒன்று குறிப்பு அளபுருக்களையும் மற்றொன்று மதிப்பு அளபுருக்களையும் கொண்டிருந்தால் அவற்றை பணிமிகுக்க முடியாது. 


• சாதாரண செயற்கூறுகளைப் போல் உறுப்பு செயற்கூறுகளையும் பணிமிகுக்க முடியும


• ஓர் இனக்குழு பணிமிகுக்கப்பட்ட ஆக்கிகளை கொண்டிருக்க முடியும். அழிப்பிகள் பணிமிகுக்கப்பட முடியாது. 


• ஒரு செயற்குறிக்குப் புதிய பொருளை வழங்கும் செயல்நுட்பமே செயற்குறி பணிமிகுப்பு என்றழைக்கப்படுகிறது.


• செயற்குறி பணிமிகுப்பு C++ செயற்குறிகள் பலவற்றிற்கு புதிய வரையறுப்புகளை அளிக்கிறது. 


• பயனர் வரையறுக்கும் இனங்களையும் (பொருள்களைப்) பணிமிகுக்க முடியும். 


• பணிமிகுக்கப்பட்ட செயற்குறியின் வரையறை இவ்வாறு அமையும். சிறப்பு சொல் “Operator” அடுத்து செயற்குறி குறியீடு அமைந்திருக்கும். 


• கீழ்கண்ட C++ செயற்குறிகளை தவிர்த்து, அனைத்து செயற்குறிகளையும் இரண்டு செயற்கூறுகளில் ஒன்று குறிப்பு பணிமிகுக்க முடியும். 


• இனக்குழு உறுப்பு அணுகல் செயற்குறி (.) 


• வரையெல்லை செயற்குறி (::),


• sizeof () செயற்குறி 


• நிபந்தனை செயற்குறி (?: ) 


11th Computer Science : Chapter 15 : Polymorphism : C++ Polymorphism: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம் : C++ பல்லுருவாக்கம்: நினைவில் கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 15 : பல்லுருவாக்கம்