உயிரி உலகம் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 1 : Living World
உலகின் பன்முகத்தன்மை
உயிரி உலகம்
மதிப்பீடு
1. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றி சரியான கூற்று எது?
அ.
வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன
ஆ.
நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்
இ. DNA அல்லது RNA
வை கொண்டுள்ளன
ஈ.
நொதிகள் காணப்படுகின்றன.
2. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.
அ. டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
ஆ.
செல்சுவரில் அதிகளவு பெட்டிடோ கிளைக்கான் உள்ளது
இ.
செல்சுவர் ஓரடுக்கால் ஆனது
ஈ.
லிப்போபாலிசாக்கரைட்கள் கொண்ட செல்சுவர்
3. ஆர்க்கி பாக்டீரியம் எது?
அ.
அசிட்டோபாக்டர்
ஆ.
எர்வினீயா
இ.
டிரிப்போனிமா
ஈ. மெத்தனோபாக்டீரியம்
4. நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?
அ. நகர்வதற்கான உறுப்புக்கள் இல்லை
ஆ.
செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது
இ.
உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை
ஈ.
ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது
5. சரியாகப் பொருத்திய இணையைக் கண்டறிக.
அ. ஆக்டீனோமைசீட்கள்
- தாமதித்த வெப்புநோய்
ஆ. மைக்கோ
பிளாஸ்மா - கழலைத் தாடை நோய்
இ. பாக்டீரியங்கள் - நுனிக்கழலை
நோய்
ஈ. பூஞ்சைகள் - சந்தனக் கூர்நுனி நோய்