Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையை தெரிவு செய்க

கேள்விகளுக்கான பதில்கள் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Chemistry : UNIT 1 : Basic Concepts of Chemistry and Chemical Calculations

   Posted On :  21.12.2023 02:44 am

11 வது வேதியியல் : அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது வேதியியல் : அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் : சரியான விடையை தெரிவு செய்க

மதிப்பீடு


I. சரியான விடையை தெரிவு செய்க.

1. 40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு

. 40 மி.லி CO2 வாயு

. 40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு

. 60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு 

. 120 மி.லி CO2 வாயு

[விடை: ) 40மி.லி CO2 வாயு] 

தீர்வு:

1. CH4(g) + 2O2 (g) → CO2 (g) + 2 H2O (l)



2. தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X = 90 %, 199X = 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு

. 201 u

. 202 u

. 199 u

. 200 u

[விடை: ) 200 u]

தீர்வு:

(200 × 90) + (199 × 8) + (202 × 2) / 100 = 199.96


= 200 u


3. கூற்று (A) : இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.

காரணம் (R) : ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 × 1022

. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A) க்கான சரியான விளக்கம்

. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A) க்கான சரியான விளக்கமல்ல

. கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு

. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு

[விடை: ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு

தீர்வு:

சரியான காரணம் : ஒரு மோல் அளவுள்ள எந்தவொரு சேர்மத்திலும் அடங்கியுள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.022 × 1023


4. கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?

. கார்பன்

. ஆக்ஸிஜன்

. கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்

. கார்பன், ஆக்ஸிஜன் இரண்டுமில்லை

[விடை: ) ஆக்ஸிஜன்]

தீர்வு:

வினை 1:

2C + O2 → 2 CO

2 × 12g கார்பனானது 32g ஆக்ஸிஜனுடன் இணைந்துள்ளது,

எனவே கார்பனின் சமான நிறை [(2 × 12) / 32] × 8 = 6


வினை 2:

C + O2 → CO2

12g கார்பனானது 32g ஆக்ஸிஜனுடன் இணைந்து உள்ளது,

எனவே கார்பனின் சமான நிறை = (12/32) × 8 = 3



5. இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

. 102 g

. 27g

. 270 g

. 78 g

[விடை: ) 102 g ]

தீர்வு:

இணைதிறன் மூன்று கொண்ட உலோகத்தினை M3+ என்க

சமான நிறை = உலோகத்தின் நிறை / சமான காரணி

9g eq−1 = உலோகத்தின் நிறை / 3eq

உலோகத்தின் நிறை = 27g 

உருவாகும் ஆக்ஸைடு = M2O3 ;

ஆக்ஸைடின் நிறை = (2 × 27) + (3 × 16) 

= 102g


6. 0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை

. 6.022 × 1026

. 6.022 × 1023

. 6.022 × 1020

. 9.9 × 1022

[விடை: ) 6.022 × 1020 ]

தீர்வு:

நீர்த்துளியின் எடை = 0.018g 

நீர்த்துளியில் உள்ள மோல்களின் எண்ணிக்கை = நீரின் நிறை / மோலார் நிறை

 = 0.018 / 18 = 10−3 மோல் 

1 மோல் நீரில் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 6.022 × 1023

1 நீர்த்துளியில் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை (10−3  மோல்)

= 6.022 × 10−23 × 10−3  = 6.022 × 1020


7. 1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்களைக் கொண்டது) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. இம்மாதிரியிலுள்ள மாசு சதவீதம்.

. 0%

. 4.4%

. 16%

. 8.4 %

[விடை: ) 16%  ]

தீர்வு:

MgCO3 → MgO + CO2

MgCO3 : (1 × 24) + (1 × 12) + (3 × 16) = 84g

CO2 : (1 × 12) + (2 × 16) = 44g

100% தூய்மையுடைய 84g MgCO3 ஆனது வெப்பப்படுத்தும் போது 44gCO2 ஐத் தருகிறது.

1g MgCO3 ஆனது வெப்பப்படுத்தும் பொழுது 0.44gCO2 ஐத் தருகிறது. என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே,

84g MgCO3 மாதிரியினை வெப்பப்படுத்தும் பொழுது 36.96 g CO2 ஐத் தரும்

மாதிரியினுடைய தூய்மைத் தன்மையின் சதவீதம் = (100% / 44g CO2) × 36.96g CO2 = 84%


மாசு சதவீதம் = 16%


8. 6.3g சோடியம் பை கார்பனேட்டை, 30g அசிட்டிக் அமில கரைசலுடன் சேர்த்த பின்னர் எஞ்சியுள்ள கரைசலின் எடை 33g. வினையின்போது வெளியேறிய கார்பன்டையாக்ஸைடின் மோல் எண்ணிக்கை

. 3

. 0.75

. 0.075

. 0.3

[விடை: ) 0.075]  

தீர்வு:


வெளியேறிய CO2 அளவு x = 3.3g

வெளியேறிய CO2 ன் மோல்களின் எண்ணிக்கை = 3.3/44 = 0.075 மோல்


9. STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2லிட்டர் Cl2 வாயுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை

. 2 மோல்கள் HCl (g)

. 0.5 மோல்கள் HCl (g)

. 1.5 மோல்கள் HCl (g)

. 1 மோல் HCl (g)

[விடை: ) 1 மோல் HCl (g) ]

தீர்வு:

H2(g) + Cl2 (g) → 2 HCl (g)



10. சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?

. Cu + 2 H2SO  CuSO4 + SO2 + 2 H2O

. C + 2 H2SO4   CO2 + 2 SO2 + 2 H2O

. BaCl2 + H2SO   BaSO4 + 2 HCl

இவற்றில் எதுவுமில்லை

[விடை: ) BaCl2 + H2SO4 → BaSO4 + 2HCl]

தீர்வு:



11. பின்வரும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளில் எது விகிதச்சிதைவு வினை?

. 3 Mg (s) + N2 (g) Mg3N2 (s)

. P4 (s) + 3 NaOH + 3H2O PH3 (g) + 3 NaH2PO2 (aq)

. Cl2 (g) + 2 KI (aq)   2 KCl (aq) + I2

. Cr2O3 (s) + 2 Al (s) Al2O3 (s) + 2Cr (s)

[விடை: ) P4(s) + 3NaOH + 3H2O → PH3(g) + 3NaH2PO2(aq)]

தீர்வு:



12. கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு

(MnO4- + 2 H2O + 3e- MnO2 + 4 OH-)

. 31.6

. 52.7

. 79

. இவற்றில் எதுவுமில்லை

[விடை: ) 52.7]

தீர்வு:

ஆக்ஸிஜனேற்றியான (MnO4) ஆனது ஒடுக்க வினைக்கு உட்படும் போது மூன்று எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்கிறது. எனவே சமானநிறை

= (KMnO4ன் மோலார்நிறை) / 3

= 158.1 / 3 = 52.7


13. பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?

. 5 மோல்கள் நீர்

. 90 மோல்கள் நீர்

. (6.022 × 1023) / 180 நீர் மூலக்கூறுகள்

. 6.022 × 1024 நீர் மூலக்கூறுகள்

[விடை: ) 6.022 × 1024 நீர் மூலக்கூறுகள்]

தீர்வு:

180g நீரில் காணப்படும் மோல்களின் எண்ணிக்கை = நீரின் நிறை /நீரின் மோலார் நிறை

= 180g/ 18g mol−1 =10 மோல்கள்

நீரில் 6.022 × 1023 நீர் மூலக்கூறுகள் உள்ளன.

10 மோல் நீரில் 6.022 × 1023 × 10 = 6.022 × 1024 நீர் மூலக்கூறுகள் உள்ளன.


14. 0° C மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5g வாயு 5.6 L கனஅளவை அடைத்துக்கொள்கிறது எனில், அந்த வாயு

. NO

. N2O

CO

. CO2

[விடை: ) NO ]

தீர்வு:

273K மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5g வாயு அடைத்துக் கொள்ளும் கனஅளவு 5.6 லிட்டர் எனவே, 22.4 லிட்டர் கனஅளவை அடைத்துக் கொள்ளும் வாயுவின் நிறை

= 7.5g/5.6L =  x22.4L = 30g

NO− ன் மோலார் நிறை (14 + 16) = 30g


15. 1.7 g அம்மோனியாவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

. 6.022 × 1023

. (6.022 × 1022) / 1.7

. (6.022 × 1024) / 1.7

. (6.022 × 1023) / 1.7

[விடை) 6.022 × 1023 ]

தீர்வு:

ஒரு அம்மோனியா (NH3) மூலக்கூறில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (7 + 3) = 10

அம்மோனியா மோல்களின் எண்ணிக்கை = நிறை /மோலார் நிறை = 1.7g /17gmol−1 


= 0.1mol

0.1மோல் அம்மோனியாவில் காணப்படும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 0.1 × 6.022 × 1023 = 6.022 × 1022

0.1 மோல் அம்மோனியாவில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 10 × 6.022 × 1022 = 6.022 × 1023


16. SO42-, SO32-, S2O42-, S2O62- ஆகிய எதிரயனிகளில் சல்பரின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது?

. SO32- < SO42- < S2O42- < S2O62-

. SO42- < S2O42- < S2O62- < SO32-

. S2O42- < SO32- < S2O62- < SO42-

. S2O62- < S2O42- < SO42- < SO32- 

[விடை: S2O42−< SO32−< S2O62−< SO42− ]

தீர்வு:



17. பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை

. பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை / 1

. பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை / 2

. பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை / 3

. மேற்கண்ட எதுவுமில்லை.

[விடை: ) பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை /3]

தீர்வு:


FeC2 O4 ன் சமான நிறை = பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை /3 


18. அவகாட்ரோ எண் மதிப்பு 6.022 × 1023 லிருந்து 6.022 × 1020 க்கு மாற்றப்படுகிறது. இதனால் மாறுவது

. ஒரு சமன் செய்யப்பட்ட சமன்பாட்டில் வினைப்பொருட்களின் விகிதம்.

. ஒரு சேர்மத்திலுள்ள தனிமங்களின் விகிதம்

. கிராம் அலகில் நிறையின் வரையறை

. 1 மோல் கார்பனின் நிறை

[விடை: ) 1 மோல் கார்பனின் நிறை]

தீர்வு:

ஒரு மோல் கார்பனின் நிறை 


19. 22.4 L கனஅளவு கொண்ட இரு கொள்கலன்கள் A மற்றும் B யில் முறையே 8g O2 மற்றும் 8g SO2 வாயுக்கள் STP நிலையில் நிரட்டப்பட்டுள்ளது. எனில்

. A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகள் சமம்.

. B கலனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை விட அதிகம்.

. A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம் 2:1 

. B கலனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை போல மூன்று மடங்கு அதிகம்.

[விடை: ) A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம் 2:1]

தீர்வு:

ஆக்ஸிஜனின் மோல்களின் எண்ணிக்கை = 8g/32g 

= 0.25 மோல்கள்

சல்பர் டை ஆக்ஸைடின் மோல்களின் எண்ணிக்கை = 8g/ 64g 

= 0.125 மோல்கள்

மூலக்கூறுகளின் எண்ணிக்கைகளுக்கு இடையேயான விகிதம் = 0.25 : 0.125 = 2 : 1 


20. 50 mL 8.5 % AgNO3 கரைசலை 100 mL. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?

. 3.59g

. 7g

. 14 g

. 28 g

[விடை: ) 3.59g]

தீர்வு:

AgNO3 + KCl → KNO3 + AgCl

50 mL 8.5% கரைசல் ஆனது 4.25g AgNO3ஐக் கொண்டுள்ளது. 50 mL 8.5% AgNO3 கரைசலில் உள்ள AgNO3 ன் மோல்களின் எண்ணிக்கை = நிறை / மோலார் நிறை

= 4.25/170 = 0.025 மோல்கள்

இதைப்போலவே, 100 mL 1.865% KCl கரைசலில் காணப்படும் KCl ன் மோல்களின் எண்ணிக்கை = 1.865 / 74.5

= 0.025 மோல்கள்

எனவே உருவாகும் AgCl ன் மொத்த அளவு 0.025 மோல்கள் (வேதி வினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில்)

0.025 மோல்கள் AgCl ல் காணப்படும் AgCl − ன் அளவு

= மோல்களின் எண்ணிக்கை × மோலார் நிறை 

= 0.025 × 143.5 = 3.59g


21. 1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° C மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

. 66.25 g mol-1

. 44 g mol-1

. 24.5 g mol-1

. 662.5 g mol-1

[விடை: ) 44g mol−1]

தீர்வு:

அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25°C மற்றும் 1 atm அழுத்தம்) 612.5 mL கன அளவை அடைத்துக் கொள்ளும் ஒரு வாயுவின் மோல்களின் எண்ணிக்கை

= 612.5 × 10−3 L/24.5 Lmol−1 = 0.025 மோல்கள் 

நாம் அறிந்தபடி,

மோலார் நிறை = நிறை / மோல்களின் எண்ணிக்கை 

= 1.1g / 0.025 mol = 44g mol−1 


22. பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் - 12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

. 7.5 g ஈத்தேன்

. 8 g மீத்தேன்

. () மற்றும் ()

. எதுவுமில்லை

[விடை: ) () மற்றும் ()]

தீர்வு:

6g C −12 ல் காணப்படும் கார்பனின் மோல்களின் எண்ணிக்கை = நிறை / மோலார் நிறை 

= 6/12 = 0.5 மோல்கள் = 0.5 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்

8g மீத்தேனில் உள்ள மோல்களின் எண்ணிக்கை = 8/16 = 0.5 மோல்கள்

0.5 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்

7.5g ஈத்தேனில் உள்ள மோல்களின் எண்ணிக்கை = 7.5 / 16 = 0.25 மோல்கள்

= 2 × 0.25 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்


23. பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?

. புரப்பீன்

. ஈத்தைன்

. பென்சீன்

. ஈத்தேன்

[விடை: ) புரப்பீன்

தீர்வு:

எத்திலீனில் உள்ள கார்பனின் சதவீதம் (C2H4


= (கார்பனின் நிறை/ மோலார் நிறை) × 100

= (24/28) × 100 = 85.71%

= (36/42) × 100 = 85.71%

புரப்பீனில் உள்ள கார்பனின் சதவீதம் (C3H6 )


24. கார்பன் - 12 பொறுத்து பின்வருவனவற்றுள் எது உண்மையான கூற்று?

. C - 12 ன் ஒப்பு அணுநிறை 12 u

. கார்பனின் அனைத்து சேர்மங்களிலும் அதன் ஆக்ஸிஜனேற்ற எண் +4

. 1 மோல் கார்பன் - 12 ல் 6.022 × 1022 அணுக்கள் உள்ளன.

. அனைத்தும்

[விடை: ) C −12 ன் ஒப்பு அணுநிறை 12 u ]


25. அணுநிறைக்கு நியமமாக பின்வருவனவற்றுள் பயன்படுவது எது?

. 6C12 

. 7C12 

. 6C13 

. 6C14

[விடை: ) 6C12 ]

Tags : with Answers, Solutions கேள்விகளுக்கான பதில்கள்.
11th Chemistry : UNIT 1 : Basic Concepts of Chemistry and Chemical Calculations : Choose the best answer: Basic Concepts of Chemistry and Chemical Calculations with Answers, Solutions in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் : சரியான விடையை தெரிவு செய்க - கேள்விகளுக்கான பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்