அளவீடுகள் | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு - தோராயமான அளவை, தரப்படுத்தப்பட்ட துல்லிய அளவுகோல் மூலம் அளந்து ஒப்பிட்டுப்பார்த்தல். | 3rd Maths : Term 1 Unit 4 : Measurements
தோராயமான அளவை, தரப்படுத்தப்பட்ட துல்லிய அளவுகோல் மூலம் அளந்து ஒப்பிட்டுப்பார்த்தல்.
செயல்பாடு 7
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் நீளத்தைப் தோராயமாக அளந்து பின்பு தரப்படுத்தப்பட்ட அளவு கொண்டு அளந்து சரி பார்.
பயிற்சி செய்
1. பின்வரும் விடைகளில் வேறுபட்டதை வட்டமிடுக.
1. மி.மீ 2. செ.மீ 3. மீ 4. முழம்
2. நிரப்புக.
1 மீட்டர் = 100 செ.மீ.
2 மீட்டர் = 200 செ.மீ.
3 மீட்டர் = 300 செ.மீ.
4 மீட்டர் = 400 செ.மீ.
3. பொருத்துக.
10 மில்லி மீட்டர் - 1 கிலோ மீட்டர்
100 சென்டி மீட்டர் - 1 சென்டி மீட்டர்
1000 மீட்டர் - 1 மீட்டர்
விடை:
10 மில்லி மீட்டர் - 1 சென்டி மீட்டர்
100 சென்டி மீட்டர் - 1 மீட்டர்
1000 மீட்டர் - 1 கிலோ மீட்டர்
4. தரப்படுத்தப்படாத அலகுகளை எழுதவும்
1. விரல் கடை
2. சாண்
3. முழம்
4. தப்படி
5. காலடி
5. உங்களுக்கு தெரிந்த திட்ட அலகுகளை எழுதுக.
1. மில்லி மீட்டடர்
2. சென்டி மீட்டர்
3. மீட்டர்
4. கிலோ மீட்டர்
5. டெசி மீட்டர்
6. அட்டவணையை நிரப்புக.
7. சுருங்கிய வடிவில் எழுதவும்
மில்லி மீட்டர் : மி.மீ
சென்டி மீட்டர் : செ.மீ
மீட்டர் : மீ
கிலோ மீட்டர் : கி.மீ
8. கொடுக்கப்பட்ட அலகுகளை வரிசைப்படுத்தி எழுதவும்
(மிமீ மீட்டர் செ.மீ கிமீ)
ஏறு வரிசை : மிமீ, செ.மீ, மீ, கிமீ
இறங்கு வரிசை கிமீ, மீ, செ.மீ, மிமீ
மேற்கண்ட அளவுகளிலிருந்து நீங்கள் கண்டறிந்தவற்றை கலந்துரையாடுக.
செயல்பாடு 8
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, வகுப்பறையின் நீளத்தை தரப்படுத்தப்படாத அலகுகளால் ஒரு குழுவும், தரப்படுத்தப்பட்ட அலகுகளால் மற்றொரு குழுவும் அளக்க ஆசிரியர் கூற வேண்டும்.