அளவீடுகள் | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு - மில்லி மீட்டர் மற்றும் சென்டிமீட்டர் | 3rd Maths : Term 1 Unit 4 : Measurements
மில்லி மீட்டர் மற்றும் சென்டிமீட்டர்
அறிமுகம்
இது ஒரு சென்டிமீட்டர் அளவுகோல். ஒரு சென்டிமீட்டரை குறிப்பது ‘1’. இரண்டு சென்டிமீட்டரை குறிப்பது '2': '0' மற்றும் '1' க்கும் இடையே உள்ள நீளம், 10 பகுதிகளாக சிறு சிறு கோடுகள் மூலம் குறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியின் அளவீடும் 'மில்லிமீட்டர்" எனப்படும்.
'0’ மற்றும் ‘1’ க்கும் இடையே எத்தனை மில்லிமீட்டர்கள் உள்ளன என்பதை நீங்கள் என்னிடம் சொல்ல முடியுமா?
இப்போது 1 மற்றும் 2- க்கும் இடையே எத்தனை மில்லிமீட்டர்கள் உள்ளன என்பதை என்னிடம் சொல்ல முடியுமா? 1 மற்றும் 3?
இப்போது 1 சென்டிமீட்டரில் எத்தனை மில்லிமீட்டர்கள் உள்ளன என்பதை என்னிடம் சொல்லவும்.
படத்திலிருந்து,
1 சென்டிமீட்டர் = 10 பாகங்கள்
அதனால்
10 மில்லிமீட்டர் = 1 சென்டிமீட்டர்
எழுதுவது எப்படி?
மில்லிமீட்டர் - மி.மீ.
சென்டிமீட்டர் - செ.மீ.
மீட்டர் - மீ
கிலோமிட்டர் - கி.மீ
நீளத்தின் மிகச்சிறிய அலகு மில்லிமீட்டர் என்று அழைக்கப்படுகிறது.
நீளத்தின் மிகப்பெரிய அலகு கிலோமீட்டர் என்று அழைக்கப்படுகிறது.
தெரிந்து கொள்வோம்
100 சென்டிமீட்டர் = 1 மீட்டர்
1000 மீட்டர் =1 கிலோ மீட்டர்
எடுத்துக்காட்டு:
மில்லிமீட்டர் (மி.மீ.) சென்டிமீட்டர் (செ. மீ.) மீட்டர் (மீ.)
செயல்பாடு 4
அளவு நாடா மூலம் ரிப்பனின் நீளத்தை அளக்கவும்...
ராஜ் ________ சென்டிமீட்டர்
அனு ________ சென்டிமீட்டர்
ராம் ________ சென்டிமீட்டர்
கவி ________ சென்டிமீட்டர்
திட்ட அளவைகள் கொண்டு திட்ட அலகுகளால் அளக்கும்போது ரிப்பன்களின் நீளம் மறுபடுவதில்லை.
பயிற்சி செய்
சென்டிமீட்டர் அளவுகோல் மூலம், பின்வரும் பொருள்களின் நீளங்களை அளவிட்டு, கீழே உள்ள கோடிட்ட இடங்களில் நிரப்புக.