Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | ஆசியா மற்றும் ஐரோப்பா - ஓர் ஒப்பீடு

பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஆசியா மற்றும் ஐரோப்பா - ஓர் ஒப்பீடு | 6th Social Science : Geography : Term 3 Unit 1 : Asia and Europe

   Posted On :  30.08.2023 08:15 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா

ஆசியா மற்றும் ஐரோப்பா - ஓர் ஒப்பீடு

ஆசியா மற்றும் ஐரோப்பா - ஓர் ஒப்பீடு - புவியியல்

ஆசியா மற்றும் ஐரோப்பா - ஓர் ஒப்பீடு


நினைவில் நிறுத்துக

• உலகின் மிகப் பெரியதும், மிக அதிக மக்கள் தொகையும் கொண்டது ஆசியா. ஐந்து இயற்கையமைப்பு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

• நிலநடுக்கோட்டிலிருந்து துருவம் வரை அனைத்து வகையான காலநிலையும் ஆசியாவில் காணப்படுகின்றது.

மரங்களற்ற துருவப்பகுதி முதல் அடர்ந்த நிலநடுக்கோட்டுக் காடுகள் வரை ஆசியாவில் உள்ளன.

நிலக்கரி, இரும்புத்தாது, பெட்ரோலியம், பாக்ஸைட், மைக்கா, தகரம், துத்தநாகம் முதலியனவும் ஆசியாவில் கிடைக்கப்பெறுகின்றன.

நெல், கோதுமை, கரும்பு, சணல், பருத்தி, தேயிலை, காப்பி மற்றும் பேரீச்சம்பழம் ஆகியன ஆசியாவின் முக்கியப் பயிர்களாகும்.

அனைத்துச் சமயங்களின் பிறப்பிடம் ஆசியாவாகும். 

• ஐரோப்பா உலகின் ஆறாவது பெரிய கண்டமாகும். இது நான்கு இயற்கை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

• ஐரோப்பிய ஆறுகள் அக்கண்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

•  ஐரோப்பா குளிர்ந்த மிதமான காலநிலையைக் கொண்டது.

• கலப்பு விவசாயமுறை பரவலாக நடைபெறுகின்றது.

• நிலக்கரி மற்றும் இரும்பு ஐரோப்பாவில் கிடைக்கப்பெறும் முதன்மையான கனிமம் ஆகும்

• தொழில்துறையில் உலகிலேயே மிகவும் முன்னேற்றமடைந்த கண்டமாகத் திகழ்கின்றது.

கிருத்துவம் ஐரோப்பாவின் முதன்மையான சமயமாகும்.

 

கலைச்சொற்கள்

* பானம் - நீர் அல்லாத குடிக்கப்பயன்படும் திரவம்

* வற்றாத - ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்கின்ற

* பருவக்காற்று - குறிப்பிட்ட பருவத்தில் இந்தியப்பெருங்கடலில் வீசும் காற்று

* டைகா - சதுப்புநில ஊசியிலைக் காடுகள்

*  தூந்திரம் – பரந்த சமமான மரமற்ற ஆர்டிக் பகுதி

* ஸ்டெப்பிஸ் – சைபீரியாவில் காணப்படும் மிகப்பெரிய, சமமான மரங்களற்ற புல்வெளி பரப்பு

* போல்டர் - கடலிலிருந்து மீட்கப்பட்ட தாழ்நிலம்

தோட்ட வேளாண்மை - தோட்டங்கள் அமைத்துப் பராமரிக்கும் கலை (காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள்)


மேற்கோள் நூல்கள்

1. Douglas L. Johnson, Viola Haarmann, Merril L. Johnson, David L. Clawson (2012), World Regional Geography, A Development Approach, PHI Learning Private Limited, New Delhi, India.

2. JohnCole, (2010), Geography, of the world's Major Regions, Routledge, London.

3. Majid Husain (2017), Indian and world Geography McGraw Hill Education (India) Private Limited, New Delhi, India.

 

இணையதள இணைப்புகள்

1. https://www.what arethe7continents. com

2. www.natural history on the Net.com

3. www.worldatlas.com

4. www.internetgeographynet

5. www.worldometers.info


இணையச் செயல்பாடு

ஆசியா மற்றும் ஐரோப்பா

இச்செயல்பாட்டின் மூலம் ஆசிய ஐரோப்பிய கண்டங்களின் நாடுகள் மற்றும் அவற்றின் நிலப்பரப்புகளை அறிய முடியும்.


படிநிலைகள்:

படி -1 கொடுக்கப்பட்ட உரலிடைப் பயன்படுத்தி செயல்பாட்டு தளத்திற்கு செல்லலாம்.

படி -2 "Search" என்ற பகுதியில் Asia and Europe என டைப் செய்யவும்.

படி -3 '+' '-" என்ற பொத்தானைக் கொண்டு zoom in மற்றும் Out செய்ய முடியும்.

படி -4 "Full screen' குறியீட்டை சொடுக்கி முழுத்திரையில் காண முடியும்.


உரலி :

http://earth3dmap.com/?1-asia

* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Term 3 Unit 1 | Geography | 6th Social Science பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 3 Unit 1 : Asia and Europe : Comparision of Asia and Europe Term 3 Unit 1 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா : ஆசியா மற்றும் ஐரோப்பா - ஓர் ஒப்பீடு - பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா