எண்கள் | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு - ஒப்பிடுதல் | 1st Maths : Term 1 Unit 2 : Numbers
ஒப்பிடுதல்
பெரிய எண் - சிறிய எண்
செய்து பார்
எண்ணிக்கையினை □ ல் இட்டு, பெரிய எண்ணிற்கு (✔) செய்க.
எண்ணிக்கையினை □ல் இட்டு,
சிறிய எண்ணை (✔) செய்க.
மகிழ்ச்சி நேரம்
● பெரிய எண்ணை வட்டமிடுக
அ) 7, 8
ஆ) 5, 6
இ) 9, 4
ஈ) 1, 3
● சிறிய எண்ணை வட்டமிடுக
அ) 1, 5.
ஆ) 6,
4
இ)
8, 3
ஈ)
7, 9
முன்னும் பின்னும்
கற்றல்
முயன்று பார்
கொடுக்கப்பட்ட தொடர்வண்டிகளில் விடுபட்ட எண்களை நிரப்புக.
மேற்காணும் இரண்டு தொடர்வண்டிகளிலும் இன்ஜினிலிருந்து எண்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன?
செய்து பார்
தர வரிசை எண்கள்
பயணம் செய்வோம்
விழா மேடையில் நிற்கும் பழ வேடமணிந்த குழந்தைகளை உற்றுப் பார்.
வாய்மொழி வினாக்கள்
1.
முதலாம் இடத்தில் எப்பழ வேடமணிந்த குழந்தை நிற்கிறது.
விடை : மாம்பழம் வேடமணிந்த குழந்தை
2. பழ வேடமணிந்த குழந்தை 9 ஆம் இடத்தில் உள்ளது.
3.
ஏழாம் இடத்தில் நிற்கும் குழந்தை எப்பழ வேடமணிந்துள்ளது.
விடை : ஆப்பிள்
4. வேடமணிந்த குழந்தை 5ஆம் இடத்தில் உள்ளது.
5.
எந்தப் பழ வேடமணிந்த குழந்தை உனக்கு மிகவும் பிடிக்கும்? ஏன்?
விடை : எனக்கு மாம்பழம் வேடம் அணிந்த குழந்தை பிடிக்கும். ஏன் என்றால் எனக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும்.
செய்து பார்
மகிழ்ச்சி நேரம்
1.
எண் வரிசையில் உள்ள புள்ளிகளை இணைத்து உருவாகும் உருவத்தை வண்ணமிடுக.
2.
பொட்டுகளைப் பயன்படுத்தி போல் உருவம் வடிவமைக்கவும்.
3. 1 முதல் 9 வரையுள்ள எண்களைத் தீக்குச்சிகளால் உருவாக்கவும் எண் 2 - ஐ உருவாக்கிடக் கிடைப்பது இதேபோல் மற்ற எண்களை உருவாக்கவும்.
4.
ஒன்பது வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்திக் கட்டங்களை நிரப்புக.
குறிப்பிட்ட நிலையில் உள்ள கட்டத்தில் இடப்பட்டுள்ள வண்ணத்தை இடுக.
சறுக்கலும் ஏணியும்
விளையாட்டு
குறிக்கோள்:
1.
1 முதல் 6 வரையிலான எண்களில் வலுவூட்டம் பெறுதல்
2.
விளையாட்டு மூலம் நற்பண்புகளை வளர்த்தல்
தேவையான பொருட்கள்
ஒரு பகடை, வெவ்வேறு வண்ணப் பொத்தான்கள் மற்றும் ஏணிச் சறுக்குக் கட்டம்.
முறை:
1.
குழந்தைகள் தனித்தோ, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாகவோ விளையாடலாம்.
2.
ஒவ்வொரு குழந்தையும் பகடை உருட்டிப் பெறும் எண்ணிற்கேற்பப் பொத்தானை ஏணிச் சறுக்குக் கட்டத்தில் ஆரம்ப நிலையில் இருந்து நகர்த்த வேண்டும்.
3.
சுழற்சி முறையில் பகடை உருட்டப்பட வேண்டும்.
4. ஏணிப்படி அடியில் வரும்போது,
ஏணிப்படி வழியாக ஏறிக் கொள்ளலாம். சறுக்கலின் மரத் தலைப் பகுதியை அடைந்தால், அதன் கீழ்ப் பகுதி வரை கீழே இறங்க வேண்டும்.
5.
எவர் முதலில் இறுதி நிலையை அடைகிறார்களோ, அவரே வெற்றி பெற்றவராவர்