எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பகு எண்கள் மற்றும் பகா எண்கள் | 5th Maths : Term 2 Unit 2 : Numbers
பகு எண்கள் மற்றும் பகா எண்கள்
செயல்பாடு 5
பின்வரும் எண்களின் காரணிகளைக் (✓) குறியிடுக.
பகு எண்கள்
இரண்டிற்க்கும் மேற்பட்ட காரணிகள் கொண்ட இயல் எண்கள் பகு எண்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டுகள்
4, 6, 8, 9, 12, 26, 60, 448, 816, …
பகா எண்கள்
இரண்டே இரண்டு காரணிகள், அதாவது 1 மற்றும் தன்னையே கொண்டிருக்கும் 1ஐ விட பெரிய இயல் எண் பகா எண் ஆகும்.
எடுத்துக்காட்டுகள்
2, 3, 5, 7, 11, 13, 29, 37, …
உங்களுக்குத் தெரியுமா? 2 மட்டுமே ஒரு இரட்டை பகா எண் ஆகும்.
பொதுக் காரணிகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களுக்கு பொதுவானா காரணிகளாக இருக்கும் எண்கள் அவ்வெண்களுக்கு பொதுக் காரணிகள் ஆகும்.
எடுத்துக்காட்டு
12 மற்றும் 18 இன் பொதுக் காரணிகளைக் காண்க.
12 மற்றும் 18 இன் பொதுக் காரணிகள் 1, 2, 3 மற்றும் 6
செயல்பாடு 6
காரணிச் செடியை நிரப்புக.