Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

ஐரோப்பியர்களின் வருகை | அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 1 : Advent of the Europeans

   Posted On :  07.06.2023 07:20 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை

முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களால் முறியடிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேயரால் வெளியேற்றப்பட்டனர். அதன்பின் இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள், வர்த்தகம் மற்றும் அரசியல் ஆதிக்கப் போட்டியில் ஆங்கிலேயரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முடிவுரை

போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களால் முறியடிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேயரால் வெளியேற்றப்பட்டனர். அதன்பின் இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள், வர்த்தகம் மற்றும் அரசியல் ஆதிக்கப் போட்டியில் ஆங்கிலேயரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிரெஞ்சுக் - காரர்கள் வர்த்தகத்தைப் புறக்கணித்து இந்தியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் போரில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஆங்கிலேயருடன் நடைபெற்ற மூன்று கர்நாடகப் போர்களும் பிரான்சை நலிவடையச் செய்தன. இது ஆங்கிலேயரின் பிராந்திய விரிவாக்கத்திற்கு புத்தெழுச்சியைக் கொடுத்தது. போர்ச்சுக்கீசியர்கள், டச்சு, டேனிஷ் மற்றும் பிரெஞ்சு ஆகியவற்றின் மீதான ஆங்கிலேயரின் வெற்றிக்கு ஆங்கிலேயரின் வணிக ரீதியான போட்டி, உயர்ந்த தியாகம், அரசின் ஆதரவு, கடற்படை மேலாதிக்கம், தேசிய தன்மை, மற்றும் ஐரோப்பாவில் அவர்களின் அதிகாரம் ஆகியன காரணமாயின.


மீள்பார்வை

•தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம்.

•தமிழ்நாடு ஆவணக் காப்பகம் (TNA) என அழைக்கப்படும் சென்னை பதிவாளர் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.

•போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக "மாலுமி ஹென்றி" என அழைக்கப்படுகிறார்.

•பிரான்சிஸ்-டி- அல்மெய்டா 'நீலநீர்க் கொள்கை யைப் பின்பற்றினார்.

•முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் சூரத்தில் வர்த்தக மையம் அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு 1613இல் அனுமதி வழங்கினார்.

•பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 1664இல் கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.

•பாண்டிச்சேரி பிரான்சின் மிக முக்கியமான மற்றும் வளமான குடியேற்றமாக விளங்கியது.




மேற்கோள் நூல்கள்

1. Bipan Chandra - History of Modern India, Orient Blackswan Private Limited 2018.

2. Sumit Sarkar, Modern India 1885-1947, Laxmi Publications; Reprint edition (2008).

3. Ishita Banerjee-Dube - A History of Modern India, Cambridge University Press 2014.

 

இணையதள வளங்கள்

• www.india.gov.in

• www.historynet.com

www.ducksters.com

 

இணையச் செயல்பாடு

ஐரோப்பியர்களின் வருகை

இச்செயல்பாட்டின் மூலம் இந்திய வரலாற்றுக்கான ஆதாரங்களைக் காட்சியாய்க் காணுதல்.


படிநிலைகள்

படி1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி2: திரையின் மேலே காணப்படும் காலவரிசையைச் (Timeline) சொடுக்கி, இடப்பக்கம் தெரியும் பட்டியலில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்க. (Ex. Paintings)

படி3: காலவரிசை அம்புகளை நகர்த்திப் பொருத்தமான ஓவியங்களைக் காண்க.

உரலி:

http://museumsofindia.gov.in/repository/home

Tags : Advent of the Europeans | Chapter 1 | History | 8th Social Science ஐரோப்பியர்களின் வருகை | அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 1 : Advent of the Europeans : Conclusion, Recap, Glossary Advent of the Europeans | Chapter 1 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை : முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் - ஐரோப்பியர்களின் வருகை | அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை