வடிவியல் | முதல் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - முப்பரிமாண (3 -D) பொருள்களை உருவாக்குதல் | 3rd Maths : Term 1 Unit 1 : Geometry
முப்பரிமாண (3 -D) பொருள்களை உருவாக்குதல்
பொருட்களின் வடிவத்தை அடையாளம் காண்க அவற்றின் பரிமாணங்களை உற்று நோக்குக,
எல்லா பொருள்களும் திடவடிவங்கள், உன்னால் எந்த வடிவம் என்று கூற இயலுமா?
(3 – D) வடிவங்கள்
கனச்செவ்வகம், கனசதுரம், உருளை, கோளம், முக்கோணப்பட்டகம், கூம்பு
திடவடிவங்கள் 3 பண்புகளை பெற்றிருக்கிறது அவை நீளம், அகலம் மற்றும் உயரம்.
இவற்றை முப்பரிமாண உருவங்கள் (3-D) என்றும் அழைக்கலாம்
தெரிந்து கொள்வோம்
ஒரு கனசதுரம் என்பது ஒரு திட சதுர வடிவம், 6 முகங்கள், 12 விளிம்புகள் மற்றும் 8 முனைகள் உண்டு.
ஒரு கனசெவ்வகம் என்பது ஒரு திட செவ்வக வடிவமாகும், 6 முகங்கள், 12 விளிம்புகள் மற்றும் 8 முனைகள் உண்டு.
ஒரு கோளம் என்பது ஒரு திட சுற்று வடிவமாகும், 1 முகம் உண்டு. விளிம்புகள் மற்றும் முனை கிடையாது.
பயிற்சி செய்
1. இவற்றைச் சுருக்கமான 3-D வடிவங்கள் என அழைக்கலாம் இருபரிமான 2D மற்றும் 3D முப்பரிமான வடிவங்களின்
2. பின்வருவனவற்றை பொருத்துக.
ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர் மாணவர்களுக்கு முப்பரிமான பொருட்களை அளித்து அவற்றின் முன் தோற்றம் மற்றும் பக்கவாட்டு தோற்றத்தை வரைய ஊக்குவிக்கலாம்,
செயல்பாடு 4
புள்ளிகளை இணைத்து முப்பரிமான வடிவங்களை வரைக.
செயல்பாடு 5
புள்ளிகளை இணைத்து முப்பரிமான வடிவங்களை வரைக
கோளம், கனச்செவ்வகம், கனசதுரம், கூம்பு, உருளை, கனசதுரம்
ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர், முப்பரிமாண (3D) பொருள்களை வரைய குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும், மேலும், 3D வடிவங்களின் உண்மையான பொருள்களை கொடுத்து, குழந்தைகள் அதை தொட்டும், உணர்ந்தும் அதனுடைய தன்மைகளை கண்டுபிடிக்கக் கூற வேண்டும்,