வடிவியல் | முதல் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - டேன்கிராம் | 3rd Maths : Term 1 Unit 1 : Geometry
டேன்கிராம்
டேன்கிராம் துண்டுகளை பயன்படுத்தி வடிவங்களை உருவாக்குதல்.
"டேன்கிராம்" புதிர்கள் முதலாம் உலகப்போரின் போது மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும், இது உலகின் மிகவும் பிரபலமான பகுத்தறிவு புதிர் ஆகும்.
டேன்கிராம் என்பது ஒரு பழங்காலத்திய சீனப்புதிர். இது ஒரு சதுரத்தில் ஏழு துண்டுகளைக் கொண்டது. (ஒரு இணைகரம், ஒரு சதுரம், மற்றும் ஐந்து முக்கோணங்கள்) இந்த துண்டுகளை குறிப்பிட்ட வடிவமைப்போடு பொருத்தி அமைக்கலாம் விலங்குகள், மனிதர்கள் போன்ற பலவிதமான வடிவங்களை, டேன்கிராமில் உள்ள துண்டுகளைக் கொண்டு உருவாக்கலாம்,
5 துண்டுகள் டேன்கிராம்
டேன்கிராம் புதிரின் எளிய வடிவம் 5 துண்டுகளை கொண்டு விளையாடப்படுகிறது.
இவற்றை முயல்க
நீ உருவாக்கிய அமைப்பில் எவ்வளவு முக்கோணங்கள் உள்ளன? அவை அனைத்தும் சமமா? கண்டுபிடி?
7 துண்டுகள் டேன்கிராம்
7 துண்டுகள் டேன்கிராம் படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே மாதரி துண்டுகளை வெட்டி, வெவ்வேறு வடிவங்களில் ஒன்றாக சேர்த்து, உனக்கு விருப்பமான வடிவங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆசிரியர் குறிப்பு: டேன்கிராம் துண்டுகளைக் கொண்டு பல்வேறு வடிவங்களை உருவாக்க ஆசிரியர் மாணவர்களுக்கு உதவுலாம்.
பயிற்சி செய்
"டேன்கிராம்” புதிரில் உள்ள எண்களைப் பொறுத்து, கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு படத்தில் உள்ள ஒவ்வொரு வடிவத்திற்கும் அதற்குறிய எண்ணை எழுதவும்.
தளநிரப்பி வடிவங்களை பயன்படுத்தி ஒரு தளநிரப்பி வடிவத்தை கொடுக்கலாம்
வடிவங்கள் இடைவெளி இல்லாமலும் ஒன்றின்மேல் ஒன்று படியாமலும் ஒரு தளத்தினை நிரப்பும்போது தளநிரப்பிகள் கிடைக்கின்றன.
படங்களை உற்றுநோக்குக
பல்வேறு வகைகளில் சுட்ட களிமண் வடிவம், மேற்பரப்புகளை மூடுவதற்கு பயன்படுகிறது. இதையே 'தளநிரப்பி’ என்கிறோம்
ஆராய்ந்து பார்
தள நிரப்பிகளை உருவாக்க, ஒரு சில வடிவங்கள் பயன்படாது. ஏன்? அவை எவை?
பயிற்சி செய்
தளநிரப்பி முறையில் பின்வரும் படங்களை முழுமையாக வரைந்து பூர்த்தி செய்யவும்,
செயல்பாடு 6
கீழே உள்ள வடிவங்களைப் பயன்படுத்தி ஒரு புதிய தள நிரப்பி பகுதியை உருவாக்கவும்:
நிரப்பினால், இதனையே “தளநிரப்பிகள்" என்கிறோம்.
ஒழுங்கு பலகோணங்களில் முக்கோணம், சதுரம், அறுங்கோணம் போன்றவை ஒரு தளத்தினை நிரப்பும் வடிவங்களாகும்.
எடுத்துக்காட்டுகள்:
தளநிரப்பி ஆகும் மற்றும் தளநிரப்பி ஆகாது என வடிவங்கள் இடையே வேறுபடுத்தவும்.
கீழ் வரும் வடிவங்கள் தளநிரப்பி ஆகாது.
ஐங்கோணம், ஏழுகோணம் போன்றவை ஒழுங்கு பலகோணமாக இருப்பினும் அவைகள் தளநிரப்பி வடிவங்கள் ஆகாது என்போம்.
செயல்பாடு 7
ஒரு சம தளத்தில், சதுரம் மற்றும் ஐங்கோணத்தை பயன்படுத்தி தளநிரப்பியை வரைய குழந்தைகளிடம் கூற வேண்டும்.