Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | ஆயத்தொலை வடிவியல்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

ஆயத்தொலை வடிவியல்

கற்றல் விளைவுகள் • கார்ட்டீசியன் ஆயத்தொலை முறையைப் புரிந்து கொள்ளுதல் • ஒரு புள்ளியின் கிடை அச்சுத் தொலைவு, செங்குத்து அச்சுத் தொலைவு மற்றும் கொடுக்கப்பட்ட புள்ளியின் அச்சுத்தூரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல். • கார்ட்டீசியன் தளத்தில் அமையும் இரு புள்ளிகளின் தொலைவை வாய்ப்பாட்டின் மூலம் கண்டறிதல். • நடுப்புள்ளிக்கான சூத்திரத்தைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் கணக்குகளைத் தீர்ப்பதில் பயன்படுத்துதல். • பிரிவு சூத்திரத்தைத் தருவித்தல் மற்றும் கணக்குகளைத் தீர்ப்பதில் பயன்படுத்துதல். • நடுக்கோட்டு மையத்திற்கான சூத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல் மேலும் அதன் பயன்பாட்டை அறிதல்.

அலகு – 5

ஆயத்தொலை வடிவியல்

 

கடினமான ஒன்றை பல பகுதிகளாகப் பிரிப்பதன் வாயிலாக எளிதாக்கலாம். ரெனே டேகார்ட்

 

பிரான்ஸ் நாட்டுக் கணித அறிஞர் ரெனே டேகார்ட் (Rene Descartes) ஆயத்தொலை வடிவியல் அல்லது பகுமுறை வடிவியல் என்ற புதிய பிரிவைக் கணிதத்தில் உருவாக்கினார். அது கடந்த காலங்களில் எண்கணிதம், இயற்கணிதம் மற்றும் வடிவியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வரைபடத்தில் புள்ளிகளாகவும், சமன்பாடுகளாகவும் வடிவியல் உருவங்களாகவும் காட்சிப்படுத்தும் ஓர் உத்தியாகும். தளத்தில் ஒரு புள்ளியின் ஆய அச்சுத் தொலைவுகளையும், இரு எண்களையும் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு கோடுகளில் இருந்து அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதன் மூலம் குறிக்கலாம். இது முழுவதும் ரெனே டேகார்ட்டின் கண்டுபிடிப்பாகும்.


ரெனே டேகார்ட் (கி.பி. (பொ..) 1596 −1650)

 

கற்றல் விளைவுகள்

கார்ட்டீசியன் ஆயத்தொலை முறையைப் புரிந்து கொள்ளுதல்

ஒரு புள்ளியின் கிடை அச்சுத் தொலைவு, செங்குத்து அச்சுத் தொலைவு மற்றும் கொடுக்கப்பட்ட புள்ளியின் அச்சுத்தூரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல்.

கார்ட்டீசியன் தளத்தில் அமையும் இரு புள்ளிகளின் தொலைவை வாய்ப்பாட்டின் மூலம் கண்டறிதல்.

நடுப்புள்ளிக்கான சூத்திரத்தைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் கணக்குகளைத் தீர்ப்பதில் பயன்படுத்துதல்.

பிரிவு சூத்திரத்தைத் தருவித்தல் மற்றும் கணக்குகளைத் தீர்ப்பதில் பயன்படுத்துதல்.

நடுக்கோட்டு மையத்திற்கான சூத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல் மேலும் அதன் பயன்பாட்டை அறிதல்.

9th Maths : UNIT 5 : Coordinate Geometry : Coordinate Geometry in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : ஆயத்தொலை வடிவியல் - : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்