Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | தரவு காட்சிப்படுத்துதல் வரையறை
   Posted On :  19.08.2022 12:07 am

12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்

தரவு காட்சிப்படுத்துதல் வரையறை

தரவு காட்சிப்படுத்துதல் என்பது தரவு மற்றும் தகவல்களை வரைகலையாக உருவாக்குகின்றது.

அலகு V

பாடம் 16

தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்

 

கற்றலின் நோக்கங்கள்

இந்தப் பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர்கள் அறிந்துக் கொள்வது,

• தரவு காட்சிப்படுத்துதல் வரையறுக்க

• தரவு காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிட

• தரவு காட்சிப்படுத்துதல் பயன்களை பட்டியலிட.

• Matplotlib உள்ள காட்சிப்படுத்தலின் வகைகள்.

• Matplotlib நிறுவுதல்.

• Matplotlib இறக்கம் பற்றி அறிந்து கொள்ளுதல்.

• தரவு காட்சிப்படுத்துதல் தொகுப்புகளை வகைப்படுத்துதல்.

• Matplotlib கொண்டு பல்வேறு வகை வரைபடங்கள் (plot) உருவாக்குதல்


தரவு காட்சிப்படுத்துதல் வரையறை

தரவு காட்சிப்படுத்துதல் என்பது தரவு மற்றும் தகவல்களை வரைகலையாக உருவாக்குகின்றது. தரவு காட்சிப்படுத்தலின் முக்கிய நோக்கம் பயனாளர்களுக்கு தகவல்களை படக் காட்சி முறையில் காண்பிப்பது. இதற்கு, தரவை காட்சிப்படுத்துதல், புள்ளியியல் வரைகலை முறையைப் பயன்படுத்துகிறது. இம்முறையில் எண்வகை தரவு, புள்ளி, கோடு அல்லது பட்டையைக் கொண்டு, குறியாக்கப்பட்டு, அளவைக்குரிய செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அறிவிக்கலாம்.

தரவு காட்சிப்படுத்தலின் வகைகள்

• வரைப்படங்கள் (Charts)

• அட்டவணைகள் (Tables)

• வரைகலை (Graphs)

• நிலப்படங்கள் (Maps)

• இன்போகிராபிக்ஸ் (Infographics)

• டேஷ்போர்ட் (Dashboards)

 

தரவு காட்சிப்படுத்தலின் பயன்கள்

• தரவு காட்சிப்படுத்தல் பயனர்கள் தரவுகளை எளிதாக கூர்ந்து ஆய்வு செய்யவும், உட்பொருளை வெளிப்படுத்த உதவுகிறது.

• இது சிக்கலான தரவுகளை புரிந்துக் கொண்டு அவற்றை பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது.

• தரவு காட்சிப்படுத்தல் பல்வேறு வரைப்படங்களைக் கொண்டு தரவு மாறிகளுக்கு இடையே உள்ள உறவு நிலையை வெளிப்படுத்துகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

இன்போகிராபிக்ஸ் -> இன்போகிராபிக்ஸ் என்பது தகவல்களை வரைகலை முறையில் உருவமைக்கப் பயன்படுகிறது.

டேஷ்போர்ட் -> டேஷ்போர்ட் அனைத்து வளங்களையும் ஒன்றுபட்ட ஒற்றை காட்சி திரையில் காண்பிக்க பயன்படுகிறது. தரவு காட்சிப்படுத்துதல் மற்றும் டேஷ்போர்ட் சிக்கலான யோசனை மற்றும் கருத்துக்களை எளிமையான காட்சி வடிவத்தில் மாற்றும் உரையில் கண்டறியப்பட முடியாத.வடிவங்கள் மற்றும் உறவு நிலைகளை டேஷ்போர்ட் ஒரே பார்வையில் கண்டறிய பயன்படும்.

Matplotlib அறிமுகம் - பைத்தானில் தரவு காட்சிப்படுத்தல்

பைத்தானில் Matplotlib என்பது பிரபலமான தரவு காட்சிப்படுத்தல் நூலகம் ஆகும். குறைந்து அளவிலான குறிமுறைகள் கொண்டு வரைப்படங்களை உருவாக்க முடியும்.

Matplotlib காட்சிப்படுத்தல் வகைகள்

Matplotlib ல் பல்வேறு வகையான காட்சிப்படுத்தல் உள்ளன. அவை

• வரி வரைவிடம் (Line plot)

• ஸ்கேட்டர் வரைவிடம் (Scatter plot)

• ஹிஸ்டோகிராம் (Histogram)

• பெட்டி வரைவிடம் (Box plot)

• பட்டை வரைப்படம் (Bar chart)

• வட்ட வரைப்படம் (Pie chart)

உங்களுக்குத் தெரியுமா?

ஸ்கேட்டர் வரைவிடம்: ஸ்கேட்டர் வரைவு என்பது தரவுகளை புள்ளிகளின் தொகுப்பாக காட்டுகிறது. ஒரு புள்ளியின் நிலை அதன் இரு பரிமாண மதிப்பைப் பொறுத்தது, ஒவ்வொரு மதிப்பும் கிடைமட்ட அல்லது செங்குத்து பரிமாணத்தின் நிலையை குறிக்கும்.

பெட்டி வரைவிடம்: பெட்டி வரைவிடம் என்பது சிறிய முதல் கால்மானம், சராசரி, மூன்றாம் கால்மானம் மற்றும் பெரிய (minimum, first quartile, median, third quartile and maximum) ஆகிய ஐந்து எண்கள் திரட்டைக் கொண்டு தரவுகளின் பகிர்வை காட்டுகிறது.

Matplotlib நிறுவுதல்

Pip பயன்படுத்தி matplotlib நாம் நிறுவ முடியும். Pip என்பது பைத்தான் தொகுப்புகளை நிறுவுவதற்கான ஒரு மேலாண்மை மென்பொருள் ஆகும்.

குறிப்பு

PiP நிறுவுதல் முறையை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

12th Computer Science : UNIT 16 : Integrating Python with MySql and C++ : Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart and Bar Chart : Data Visualization Definition in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல் : தரவு காட்சிப்படுத்துதல் வரையறை - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்