தரவு காட்சிப்படுத்துதல் - தொடங்குதல் | 12th Computer Science : UNIT 16 : Integrating Python with MySql and C++ : Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart and Bar Chart

   Posted On :  19.08.2022 12:15 am

12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்

தொடங்குதல்

Matplotlib நிறுவிய பின், Matplotlib பதிவிறக்கம் செய்து பின்வரும் கட்டளையை பயன்படுத்தி குறியீட்டை தொடங்கலாம்.

தொடங்குதல்

Matplotlib நிறுவிய பின், Matplotlib பதிவிறக்கம் செய்து பின்வரும் கட்டளையை பயன்படுத்தி குறியீட்டை தொடங்கலாம்.

import matplotlib.pyplot as plt

இப்போது உங்கள் பணியிடத்தில் Matplotlib பதிவிறக்கம் ஆகிவிட்டது. இப்பொழுது வரைவிடத்தை காண்பிக்க வேண்டும். பைத்தான் ஸ்கிரிப்டிலிருந்து matplotlib ஐ பயன்படுத்தி, lt.show() என்ற முறையை கொண்டு வரைவிடத்தை காட்டலாம்.

எடுத்துக்காட்டு

import matplotlib.pyplot as plt

plt.plot([1,2,3,4])

plt.show()

வெளியீடு

இந்த சாளரம் ஒரு matplotlib சாளரம் ஆகும். இது வரைப்படத்தை பார்க்க உதவுகிறது. நீங்கள் வரைப்படத்தில் மீது சுட்டியை நகர்த்தினால், ஒருங்கிணைப்பு புள்ளிகளை வலது புற ஓரத்தில் காணலாம்.


ஏன் x-அச்சின் வரம்பு 0-3 மற்றும் y-அச்சின் வரம்பு 1-4 என வரக்கூடும் என்று நீங்கள் வியக்கலாம். நீங்கள் plot() கட்டளைக்கு ஒற்றை பட்டியல் அல்லது அணியாக மதிப்புகளை கொடுக்கும் போது, y அச்சின் தொடர் மதிப்புகளாக matplotlib எடுத்துக் கொண்டு, x அச்சின் மதிப்புகளை உருவாக்கும். பைத்தான் வரம்புகள் 0 உடன் தொடங்கும் என்பதால், இயல்பாகவே X திசை மற்றும் Y திசையை போன்று ஒரே நீளம் கொண்டதாக இருக்கும். எனவே ன் தரவு மதிப்புகள் (0,1,2,3).

plot() என்பது ஒரு சக்திவாய்ந்த கட்டளையாகும். அது எண்ணற்ற அளபுருக்களை ஏற்கும்.

Program

எடுத்துக்காட்டாக, x versus y அச்சில் வரைய நீங்கள் கீழ்க்கண்ட கட்டளையை கொடுக்க வேண்டும்:

import matplotlib.pyplot as plt

plt.plot([1,2,3,4), [1,4,9,16])

plt.show()

கட்டளை பல அளபுருக்களை எடுத்துக் கொள்ளும். ஆனால் முதல் இரண்டு மதிப்பும் 'x' மற்றும் 'y' ஆயத்தொலைவுகளை குறிக்கும். இதன் பொருள், இந்த பட்டியல்களின் படி (1,1), (2,4), (3,9) மற்றும் (4,16) ஆகியத் தொலைவுகளைக் கொண்டிருக்கும்.


இரண்டு கோடுகளை வரைய

இரண்டு கோடுகளை வரைய , பின்வரும் குறியீட்டை பயன்படுத்தலாம்:

எடுத்துக்காட்டு

import matplotlib.pyplot as plt

x = [1,2,3]

y = [5,7,4]

x2 = [1,2,3]

y2 = [10,14,12]

plt.plot(x, y, label='Line 1')

plt.plot(x2, y2, label='Line 2')

plt.xlabel('X-Axis')

plt.ylabel('Y-Axis')

plt.title('LINE GRAPH')

 plt.legend()

plt.show()

வெளியீடு

plt.xlabel மற்றும் plt.ylabel, கட்டளையைக் கொண்டு அச்சுகளுக்கு முறையே பெயரினை வழங்கலாம். plt.title கட்டளையைக் கொண்டு வரைப்படத்திற்கு தலைப்பினை வழங்கலாம், பின்னர் plt.legend() கட்டளையைக் கொண்டு கொடாநிலை புனைவுகள் (Legends) செயலாக்கலாம்.

வெளியீடு திரையில் உள்ள பொத்தான்கள்

வெளியீட்டு திரையில், நீங்கள் கீழ் இடது மூலையில் சில பொத்தான்களைக் காணலாம். இந்த பொத்தான்களின் பயன்பாட்டை கீழே பார்க்கலாம்.


முகப்பு பொத்தான் (Home Button) -> வரைப்படத்தில் உலாவ தொடங்கிய உடன் இப்பொத்தான்  உதவும். இப்பொத்தானை பயன்படுத்தி அசல் காட்சி திறையை எப்பொழுது வேண்டுமானாலும் பெறலாம்.

முன்னோக்கி/பின்நோக்கி (Forward/Backward buttons) -> இப்பொத்தான்கள் உலவிகளில் காணப்படும் முன்னோக்கி பின்நோக்கி பொத்தான்களைப் போல் பயன்படுகிறது. இப்பொத்தானைப்பயன்படுத்தி முந்தய இடத்திற்கோ அல்லது முன்னோக்கி செல்லவோ முடியும்.

பான் ஆக்ஸிஸ் பொத்தான்(Pan Axis Button) -> குறுக்கு வடிவம் போன்ற தோற்றத்தை கொண்ட  இப்பொத்தானை கிளிக் செய்து கொண்டே இழுத்து வரைபடத்தினுள் சுற்றி நகரலாம்.

பெரிதாக்கு பொத்தான்(Zoom Button) -> இப்பொத்தான் தேர்ந்தெடுத்து, பெரிதாக்க வேண்டிய  சதுரப்பரப்பினை கிளிக் செய்து நகர்த்த வேண்டும். பெரிதாக்குவதற்கு இடது கிளிக் செய்து நகர்த்தவும். மாற்றாக சிறிதாக்க விரும்பினால் வலது கிளிக் செய்து நகர்த்த வேண்டும்.

சப் ப்ளாட் கட்டமைப்பு பொத்தான்(Configure Subplots Button) -> இப்பொத்தான், படம் மற்றும் வரைவிடத்திற்கு கிடையே உள்ள இடைவெளியை கட்டமைக்க உதவுகிறது.

படத்தை சேமிக்கும் பொத்தான்(Save Figure button) -> இப்பொத்தான் படங்களை பல்வேறு வடிவங்களில் சேமிக்க  உதவும்.

Tags : Data Visualization Using Pyplot தரவு காட்சிப்படுத்துதல்.
12th Computer Science : UNIT 16 : Integrating Python with MySql and C++ : Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart and Bar Chart : Getting Started Data Visualization Using Pyplot in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல் : தொடங்குதல் - தரவு காட்சிப்படுத்துதல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்