Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள்

வரி விளக்கப்படம், பட்டை வரைப்படம்,வட்ட வரைப்படம் - சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள் | 12th Computer Science : UNIT 16 : Integrating Python with MySql and C++ : Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart and Bar Chart

   Posted On :  19.08.2022 12:26 am

12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்

சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள்

வரி விளக்கப்படம், பட்டை வரைப்படம்,வட்ட வரைப்படம், Matplotlib உங்களை ஹிஸ்டோகிராம், ஸ்கேட்டர் வரைவிடம், பட்டை விளக்கப்படம், பட்டை வரைப்படம் போன்ற பல்வேறு வகையான வரைவிடங்களை உருவாக்க உதவும்.

சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள்

Matplotlib உங்களை ஹிஸ்டோகிராம், ஸ்கேட்டர் வரைவிடம், பட்டை விளக்கப்படம், பட்டை வரைப்படம் போன்ற பல்வேறு வகையான வரைவிடங்களை உருவாக்க உதவும்.


வரி விளக்கப்படம்

வரி வரைப்படம் அல்லது வரி விளக்கப்படம் என்பது தகவல்களை, “குறிப்பான்கள்” (Mancer) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. வரி வரைப்படம் தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட்ட காலத்தில் நிகழக் கூடியதை காட்டும். எனவே, காலவரிசைப்படி இக்கோடுகள் அமைக்கப்படும்.

எடுத்துக்காட்டு: வரி வரைவிடம்

import matplotlib.pyplot as plt

years = [2014, 2015, 2016, 2017, 2018]

total_populations = [8939007, 8954518, 8960387, 8956741, 8943721]

plt.plot (years, total_populations)

plt.title ("Year vs Population in India")

plt.xlabel ("Year")

plt.ylabel ("Total Population")

plt.show()

இந்த நிரலில்,

Plt.title() – வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.

Plt.xlabel() - X-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.

Plt.ylabel() - Y-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.

வெளியீடு



பட்டை வரைப்படம்

பட்டை வரைவிடம் (அல்லது பட்டை வரைப்படம்) என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் மாறிக்கும், வகை மாறிகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும். இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடை மட்டமாகவோ தொகுக்கப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.

Matplotlib-ல் பட்டை விளக்கப்படத்தை உருவாக்க, plt.bar() என்ற செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு

import matplotlib.pyplot as plt

# Our data

labels = ["TAMIL", "ENGLISH", "MATHS", "PHYSICS", "CHEMISTRY", "CS"]

usage = [79.8, 67.3, 77.8, 68.4, 70.2, 88.5]

# Generating the ypositions. Later, we'll use them to replace them with labels.

y_positions = range (len(labels))

# Creating our bar plot

plt.bar (y_positions, usage)

plt.xticks (y_positions, labels)

plt.ylabel ("RANGE")

plt.title ("MARKS")

plt.show()

வெளியீடு


மேலே குறிப்பிட்டுள்ள குறியீடு பின்வருவதைக் குறிக்கிறது :

Labels -> பட்டையின் தலைப்பை குறிப்பிடுகிறது.

Usage -> பட்டையின் பெயருக்கு மதிப்பினை ஒதுக்குகிறது

Xticks -> x-அச்சில் டிக் குறியை குறிப்பிட்ட மதிப்பில் காட்டுகிறது. பின்னர் ஒவ்வொரு டிக்குறிக்கும் பெயர் குறிப்பிடப்படுகிறது.

Range  -> எண் தொடரை உருவாக்குகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

பட்டை வரைப்படம் மற்றும் ஹிஸ்டோக்ராம் ஆகிய இரண்டும் தரவுகளை படவடிவில் காண்பிக்க உதவும்.

ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள்

ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பின்வருமாறு குறிப்பிடலாம்:

1. ஹிஸ்டோகிராம் வரைப்படம், எண் வகை தரவுகளுக்கு இடையேயான அதிர்வெண்ணை பட்டை வடிவு வரைப்படத்தில் காட்டும். பட்டை வரைப்படம் பல்வேறு வகையான தரவுகளை ஒப்பீட பயன்படுகிறது.

2. ஹிஸ்டோக்ராம், மாறிகளின் தொடருக்கு இடையேயான அதிர்வெண் பகிர்வை காண்பிக்கும். மாறாக பட்டை வரைப்படம் வெவ்வேறான மாறிகளை ஒப்பிடும் படத்தை காண்பிக்கும்.

3. ஹிஸ்டோக்ராம் எண்வகை தரவுகளிலும், பட்டை வரைப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளின் செயலாற்றும்.

4. ஹிஸ்டோக்ராம் உள்ள பட்டைகளுக்கு இடையே இடைவெளியிருப்பதில்லை. ஆனால் பட்டை வரைப்படத்தில் தோன்றும் பட்டைகளிடையே முறையான இடைவெளிகள் மூலம் தரவுகளுக்குயிடையான தொடர்பின்மையை காண்பிக்கும்.

5. ஹிஸ்டோகிராம் எண்கள் உறுப்புகளாக அவை தரவுகளின் தொடர்புகளை வெளிப்படுத்த ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். பட்டை வரைபடத்தில் தரவுகள் தனி உறுப்புகளாக கருதப்படுகிறது.

6. பட்டை வரைப்படத்தில் தொகுதிகளை உச்சமதிப்பிலிருந்து குறைந்த மதிப்பீர்க்கு மறு வரியைக்கம் செய்ய முடியும். ஆனால் ஹிஸ்டோக்ராமில் இவை தொடர் வரிசையாக இருப்பதால் இது சாத்தியமில்லை.

7. ஹிஸ்டோக்ராமில் செவ்வக தொகுதியின் அகலம் ஒரே அளவில் இல்லாதிருக்கலாம். ஆனால் பட்டை வரைப்படத்தில் எப்போதும் அகலம் ஒரே மாதிரியானதாக இருக்கும்.


வட்ட வரைப்படம்

வட்ட வரைப்படம் ஒரு பொதுவான விளக்கப்பட வகையாகும். வட்ட வடிவில் தோன்றும் இந்த வரைப்படம் எண் விகிதத்தை விளக்கும் விதத்தில் துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். வட்ட வரைப்படத்தில் உள்ள துண்டுகள் முழு படத்துடன் உள்ள உறவை வெளிக்காட்டும்.

Matplotlib கொண்டு வட்ட வரைப்படத்தை உருவாக்க நாம் plt.pie() செயற்கூறினை பயன்படுத்த வேண்டும். autopct அளபுரு , Python சரம் வடிவமைப்பை பயன்படுத்தி மதிப்பை சதவீதத்தில் காட்டும்.

எடுத்துக்காட்டு

import matplotlib.pyplot as plt

sizes = [89, 80, 90, 100, 75)

labels = ["Tamil", "English", "Maths", "Science", "Social"]

plt.pie (sizes, labels = labels, autopct = "%.2f")

plt.axes().set_aspect ("equal")

plt.show()

வெளியீடு


Tags : Line Chart, Bar Chart, Pie Chart வரி விளக்கப்படம், பட்டை வரைப்படம்,வட்ட வரைப்படம்.
12th Computer Science : UNIT 16 : Integrating Python with MySql and C++ : Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart and Bar Chart : Special Plot Types Line Chart, Bar Chart, Pie Chart in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல் : சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள் - வரி விளக்கப்படம், பட்டை வரைப்படம்,வட்ட வரைப்படம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 16 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : தரவு காட்சிப்படுத்துதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைபடம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்