பைத்தான் - அறிமுகம் | 12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary
Dictionaries
அறிமுகம்
பைத்தானில், Dictionary என்பது பல்வேறு வகையான உறுப்புகளின்
தொகுப்பாகும். பிற தரவினங்களாகிய List அல்லது Tuples போன்று இல்லாமல், Dictionary வகை
உறுப்புகளுடன் அதற்கான திறவு கோலையும் (இணைப்புப் பெயர்) சேமிக்கிறது. பைத்தான்
Dictionary உள்ள திறவு கோல்கள் முக்காற்புள்ளியாலும் ( : ) உறுப்புகள் காற்புள்ளியாலும்
(,) பிரிக்கப்பட வேண்டும். திறவுகோல் மற்றும் மதிப்புகள் நெளிவு அடைப்புக்குறிக்குள்
{ } வரையறக்கப்படும்.
Dictionaryஐ வரையறுப்பதற்கான தொடரியல்:
Dictionary_Name = { Key_1: Value_1,
Key_2:Value_2,
.Key_n:Value_n
]
Dictionary உள்ள திறவுகோல் தனித்தன்மை வாய்ந்த ஒரே வகையான (Case Sensitive) மற்றும் பைத்தானில் எந்தவொரு தகுதிவாய்ந்த தரவினமாகவும் இருக்கலாம்.
# காலியான வெற்று Dictionary
Dict1
= { }
# திறவுகோலைக் கொண்ட Dictionary
Dict_Stud = { 'RollNo': 1234, 'Name':'Murali', 'Class':'XII', 'Marks':451}
பைத்தானில், சுருக்கம் என்பது Dictionary ஐ உருவாக்குவதற்கான
மற்றொரு வழியாகும். இந்த வகை Dictionary ஐ உருவாக்குவதற்கான தொடரியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
தொடரியல்:
Dict = {expression for variable in sequence
[if condition]}
if நிபந்தனை கட்டாயமல்ல. If நிபந்தனையை குறிப்பிட்டால், நிபந்தனை
பூர்த்தி செய்யும் மதிப்புகள் மட்டுமே கோவையைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
Dict = {x: 2 * x for x in range(1,10)}
மேலே உள்ள குறிமுறையின் வெளியீடு
{{1: 2, 2: 4, 3: 6, 4:8, 5: 10, 6: 12, 7: 14, 8: 16, 9: 18}
Dictionary ன் அனைத்து உறுப்புகளையும் அணுகுதல் List மற்றும்
Tuples-ஐ போன்றே உள்ளது. எளிய print செயற்கூறு அனைத்து உறுப்புகளையும் அணுகப் பயன்படுகிறது.
நீங்கள், ஒரு குறிப்பிட்ட உறுப்பை அணுக விரும்பினால், திறவுகோலுடன் சதுர அடைப்புக்குறி
பயன்படுத்தப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு 9.8: Dictionary சேமிக்கப்பட்ட அனைத்து மதிப்புகளையும் அணுகுவதற்கான நிரல்.
MyDict = { 'Reg_No': '1221',
'Name' : 'Tamilselvi',
'School' : 'CGHSS',
'Address': 'Rotler St., Chennai 112'}
print(MyDict)
print("Register Number: ",
MyDict['Reg_No'])
print("Name of the Student:
", MyDict['Name'])
print("School:'',
MyDict('School'])
print("Address: '',
MyDict('Address'])
வெளியீடு
{'Reg_No': '1221', 'Name':
'Tamilselvi', 'School': 'CGHSS', 'Address': 'Rotler St., Chennai 112'} Register
Number: 1221
Name of the Student: Tamilselvi
School: CGHSS
Address: Rotler St., Chennai 112
குறிப்பு: முதல்
print கூற்று Dictionary-ல் உள்ள அனைத்த மதிப்புகளையும் அச்சிடுகிறது. மற்ற கூற்றுகள்,
சதுர அடைப்புக்குறிக்குள் உள்ள குறிப்பிட்ட மதிப்புகளை மட்டுமே அச்சிடுகின்றன.
ஏற்கனவே உள்ள Dictionary-ல் மதிப்பை அதன் திறவுகோலுடன் இருத்துவதன்
வழியாக பல மதிப்புகளை சேர்க்கலாம். பின்வரும் தொடரியல் Dictionary பல உறுப்புகள் சேர்த்தலை
புரிந்து கொள்ள பயன்படுகிறது.
dictionary-name[key]=value/elment
எடுத்துக்காட்டு 9.9: Dictionary புதிய மதிப்பை சேர்ப்பதற்கான நிரல்
MyDict = {'Reg_No': '1221',
'Name': 'Tamilselvi',
'School' : 'CGHSS', 'Address':'
Rotler St., Chennai 112'}
print(MyDict)
print("Register Number:'',
MyDict('Reg_No'])
print("Name of the Student: ", MyDict['Name'])
MyDict('Class'] = 'XII - A'
print("Class: ''', MyDict('Class']) # Adding new value
print("School:'', MyDict('School']) # Printing newly added value
print("Address: '', MyDict('Address'])
Dictionary உள்ள மதிப்பை மாற்றியிடுதல், உறுப்புகளை சேர்ப்பது
போன்றதே ஆகும். நீங்கள் திறவுகோலுக்கு ஒரு மதிப்பை இருத்தும் போது, அது பழைய மதிப்பின்
மேல் எழுதப்படுகிறது.
பைத்தான் Dictionary, del சிறப்புச் சொல் ஒரு குறிப்பிட்ட உறுப்பை
நீக்குவதற்கு பயன்படுகிறது. clear( ) செயற்கூறு Dictionary-ன் அனைத்து உறுப்புகளையும்
நீக்குவதற்கு பயன்படுகிறது. Dictionary யை நீக்குவதற்கு del சிறப்புச் சொல்லுடன்
Dictionaryன் பெயரையும் பயன்படுத்த வேண்டும்.
தொடரியல்:
# குறிப்பிட்ட உறுப்பை நீக்க.
del Dictionary_name[key]
# அனைத்து உறுப்புகளையும் நீக்க
Dictionary_name.clear( )
# முழு Dictionary நீக்க
del Dictionary_name
எடுத்துக்காட்டு 9.10: Dictionary ல் இருந்து உறுப்புகளை நீக்குதல் மற்றும் இறுதியாக டிக்ஷனரிஐ நீக்குவதற்கான நிரல்.
Dict = {'Roll No' : 12001, 'SName' : 'Meena', 'Mark1' : 98,
'Marl2' : 86}
print("Dictionary elements before deletion: \n", Dict)
del Dict('Mark1'] # குறிப்பிட்ட உறுப்பை நீக்குதல்
print("Dictionary elements after deletion of a element:
\n", Dict)
Dict.clear() # அனைத்து உறுப்புகளையும் நீக்குதல்
print("Dictionary
after deletion of all elements: \n", Dict) del Dict
print(Dict)
# முழு Dictionary ஐ நீக்குதல்
வெளியீடு
Dictionary elements before deletion:
{'Roll No': 12001, 'SName': 'Meena',
'Mark1': 98, 'Marl2': 86}
Dictionary elements after deletion of
a element:
{'Roll No': 12001, 'SName': 'Meena',
'Marl2': 86}
Dictionary after deletion of all
elements:
{ }
Traceback (most recent call last):
File
"E:/Python/Dict_Test_02.py", line 8, in <module>
print(Dict)
NameError: name 'Dict' is not defined
(1) List என்பது வரிசைப்படுத்திய உறுப்புகளின் தொகுப்பாகும்.
ஆனால், Dictionary ஒரு உறுப்பை (திறவுகோல்) மற்றொரு உறுப்புடன் (மதிப்பு) பொருத்தப்
பயன்படும் தரவு அமைப்பாகும்.
(2) List-ன் சுட்டெண்கள் குறிப்பிட்ட உறுப்பை அணுகுவதற்குப்
பயன்படுகின்றன. ஆனால், Dictionary-ல் திறவுகோல் சுட்டெண்ணைக் குறிக்கிறது. ஒரு சரத்தின்
எண்ணாகவும், திறவுகோல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
(3) List-ன் மதிப்பை பார்த்துக் கொள்ளப்பயன்படுகிறது.
Dictionary ஒரு மதிப்பை எடுத்துக் கொண்டு மற்றொரு மதிப்பை பார்த்துக் கொள்ள பயன்படுகிறது.