பைத்தான் - List ஓர் அறிமுகம் | 12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary

   Posted On :  17.08.2022 07:23 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 9 : தமிழ்: OOPS (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்

List ஓர் அறிமுகம்

பைத்தான் நிரலாக்க மொழியில் நான்கு வகையான தொகுப்பு தரவினங்கள் உள்ளன. அவை List, Tuples, Set மற்றும் Dictionary ஆகும்.

அலகு III

பாடம் 9

(List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்

 

கற்றலின் நோக்கங்கள்

இந்த பாடத்தை கற்ற பிறகு மாணவர்கள் அறிந்து கொள்வது,

• List, Tuples, Set மற்றும் Dictionary போன்ற பல வகையான தொகுப்பு தரவினங்களின் அடிப்படை கருத்துருக்களை புரிந்து கொள்ளுதல்.

• பல்வேறு செயற்கூறுகளைப் பயன்படுத்தி List, Tuples, Set மற்றும் Dictionary - ல் வேலை செய்தல்.

• List, Tuples, Set மற்றும் Dictionary யைப் பயன்படுத்தி பைத்தான் நிரல்களை எழுதுதல்.

• List, Tuples, Set மற்றும் Dictionary - களுக்கு இடையேயான உறவுகளை புரிந்து கொள்ளுதல்.


List ஓர் அறிமுகம்

பைத்தான் நிரலாக்க மொழியில் நான்கு வகையான தொகுப்பு தரவினங்கள் உள்ளன. அவை List, Tuples, Set மற்றும் Dictionary ஆகும். பைத்தானில் உள்ள List சரத்தைப் போன்றே "வரிசைமுறை தரவினம்” ஆகும். இது சதுர அடைப்புக் குறிக்குள்[ ] அடைக்கப்பட்ட மதிப்புகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும். List-ல் உள்ள ஒவ்வொரு மதிப்பும் உறுப்பு (element) என்றழைக்கப்படுகிறது. இது எண்கள், எழுத்துகள், சரநிலையுருக்கள் மற்றும்பின்னலான List போன்ற எந்த வகையாகவும் இருக்கலாம். உறுப்புகள் மாறும் தன்மையுடையன. அதாவது உறுப்புகளை மாற்றியமைக்கவும், சேர்க்கவும் அல்லது நீக்கவும் முடியும். ஒவ்வொரு உறுப்பும் List-ல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும். ஒரு உறுப்பின் இருப்பிட குறியீட்டென் அல்லது சுட்டெண் சுழியம் என்ற தொடக்க எண்ணால் குறிப்பிடப்படுகிறது. இந்த சுட்டெண் குறிப்பிட்ட உறுப்பை கண்டறிவதற்கும், அதனை கையாளுவதற்கும் பயன்படுகிறது. இதனால் List என்பது பதினொன்றாம் வகுப்பில் நீங்கள் பயின்ற அணிகளை ஒத்தது என்பதை நினைவில் கொள்க.


1. பைத்தானில் List-ஐ உருவாக்குதல்

பைத்தானில், List சதுர அடைப்புக்குறியைப் பயன்படுத்தி எளிமையாக உருவாக்கப்படுகின்றன. List ன் உறுப்புகளை கட்டயமாக சதுர அடைப்புக்குறிக்குள் குறிப்பிட வேண்டும். பின்வரும் தொடரியல் List உருவாக்கும் விதத்தை விளக்குகிறது.

தொடரியல்:

Variable = [element-1, element-2, element-3 ...... element-n]

எடுத்துக்காட்டு:

Marks = [10, 23, 41,75]

Fruits = ("Apple”, “Orange”, “Mango”, “Banana”)

MyList = [ ]

மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில், Marks என்ற List நான்கு முழு எண் (integer) உறுப்புகளையும், இரண்டாவது List, Fruits-ல் நான்கு சரநிலையுரு உறுப்புகளையும் கொண்டுள்ளது. மூன்றாவது List ஒரு வெற்று List ஆகும். List-ன் உறுப்புகள் ஒரே தரவினமாக இருக்க வேண்டிய அவசியமில்லை . பின்வரும் List பல வகை உறுப்புகளைக் கொண்டுள்ளது.

MyList = [ “Welcome”, 3.14, 10, [2, 4, 6] ]

மேலே உள்ள எடுத்துக்காட்டில், MyList என்ற List மற்றொரு List-டை உறுப்பாகக் கொண்டுள்ளது. இந்த வகை List “பின்னலான List (Nested List)” என்று அழைக்கப்படுகிறது.

பின்னலான List என்பது மற்றொரு List-ஐ ஒரு உறுப்பாக கொண்டுள்ள List ஆகும்.


2. List உறுப்புகளை அணுகுதல்

பைத்தான், List-ன் ஒவ்வொரு உறுப்புக்கும் சுழியத்திலிருந்து தொடங்குகின்ற தானமைவு சுட்டெண் மதிப்பை இருத்துகிறது. சுட்டெண் மதிப்பு, பட்டியலின் ஒரு உறுப்பை அணுகுவதற்கு பயன்படுகிறது. பைத்தானில், சுட்டெண் மதிப்பு நேர்மறை அல்லது எதிர்மறை முழு எண் மதிப்பாக இருக்கலாம்.


நேர்மறை சுட்டெண் மதிப்பு List-ன் தொடக்கத்திலிருந்தும் எதிர்மறை சுட்டெண் மதிப்பு இறுதியிலிருந்து பின் வரிசையில் (அதாவது பின்னோக்கு வரிசை) உறுப்புகளை கணக்கிடுகிறது.

List-லிருந்து ஒரு உறுப்பை அணுகுவதற்கு, சதுர அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்ட உறுப்பின் சுட்டென்ணை பின்னொட்டாகக் கொண்ட List-ன் பெயரை எழுதவும்.

தொடரியல்

List_Variable = [E1, E2, E3 ...... En]

print (List_Variable[index of a element])

 

எடுத்துக்காட்டு (ஒற்றை உறுப்பை அணுகுதல்):

>>> Marks = [10, 23, 41, 75)

>>> print (Marks[0])

10

மேலே உள்ள எடுத்துக்காட்டில், சுழியம் என்ற சுட்டெண்ணின் மதிப்பு 10 ஆக உள்ளதால், print கட்டளை 10 என்ற வெளியீட்டை அச்சிடுகிறது.

எடுத்துக்காட்டு (உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் அணுகுதல்):

>>> Marks = [10, 23, 41,75]

>>> print (Marks[-1])

75

வெளியீடு

எதிர்மறை சுட்டெண், உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் அணுகுவதற்கு பயன்படுகிறது.

1. List ன் அனைத்து உறுப்புகளையும் அணுகுதல்

List-ன் அனைத்து உறுப்புகளையும் அணுகுவதற்கு மடக்குகள் பயன்படுகின்றன. மடக்கின் தொடக்க மதிப்பு சுழியமாக இருக்க வேண்டும். List-ன் தொடக்க சுட்டெண் மதிப்பு சுழியமாகும்.

எடுத்துக்காட்டு

Marks = [10, 23, 41, 75]

i = 0

while i < 4:

print (Marks[i])

i = i + 1

வெளியீடு

10

23

41

75

மேலே உள்ள எடுத்துக்காட்டில் marks என்ற List 10,23,41,75 என்றநான்கு முழு எண் உறுப்புகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உறுப்புகளும், சுழியத்திலிருந்து தொடங்குகின்ற சுட்டெண் மதிப்பைப் பெற்றுள்ளது. உறுப்புகளின் சுட்டெண் மதிப்பு முறையே 0,1,2,3 என்பதாகும். இங்கு while மடக்கு List-ன் அனைத்து உறுப்புகளையும் அச்சிடுவதற்கு பயன்படுகிறது. மடக்கின் தொடக்க மதிப்பு சுழியமாகவும், நிபந்தனை சோதிப்பு i < 4 ஆகவும் உள்ளது. நிபந்தனை சோதிப்பு சரி எனில், மடக்கு செயல்படுத்தப்பட்டு தொடர்புடைய வெளியீடு அச்சிடப்படும்.

முதல் சுழற்சியின் போது , 1ன் மதிப்பு சுழியமாகும். கொடுக்கப்பட்ட நிபந்தனை மதிப்பு மெய், எனவே தொடர்ந்து வரும் print (Marks[i]) செயல்படுத்தப்பட்டு, Marks[0] என்ற உறுப்பின் 10 என்ற மதிப்பு அச்சிடப்படும்.

அடுத்த கூற்று i = i + 1, I ன் மதிப்பை சுழியத்திலிருந்து, 1-என மிகுக்கிறது. இப்போது, பாய்வுக் கட்டுப்பாடு, நிபந்தனை சோதிப்பை சரிபார்க்க While கூற்றுக்கு மாற்றப்படுகிறது. கொடுக்கப்பட்ட, while மடக்கின் நிபந்தனை சோதிப்பு பொய் என வரும் வரை Marks லிஸ்ட்ன் அனைத்து உறுப்புகளையும் அச்சிடும் செயல் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படும். மீதமுள்ள உறுப்புகளை அச்சிட மீண்டும் செய்யப்படுகிறது.

பின்வரும் அட்டவணை, மடக்கு செயல்படும் விதம் மற்றும் அச்சிடப்பட வேண்டிய மதிப்பைக் காண்பிக்கிறது.


2. பின்னோக்கு சுட்டு (Reverse Indexing)

பைத்தான், List உறுப்புகளுக்கு பின்னோக்கு அல்லது எதிர்மறை, சுட்டெண்களை வழங்குகிறது. இதனால் பைத்தான், சுட்டெண்களை எதிர் வரிசையில் பட்டியலிடுகிறது. பைத்தான் , List-ன் கடைசி உறுப்பிற்கு -1 முந்தைய உறுப்பிற்கு -2 என்ற சுட்டெண் மதிப்புகளையும் இருத்துகிறது. இதுவே பின்னோக்கு சுட்டு என அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு

Marks = [10, 23, 41,75]

i = -1

while I >= -4:

print (Marks[i])

i = i + -1

வெளியீடு

75

41

23

10

பின்வரும் அட்டவணை மேலே உள்ள பைத்தான் குறிமுறை வேலை செய்யும் விதத்தை காண்பிக்கிறது.


3. List -ன் நீளம்

பைத்தானில் உள்ள len( ) செயற்கூறு, List-ன் நீளத்தை கண்டறிய பயன்படுகிறது. (அதாவது, List-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ).பொதுவாக,len()செயற்கூறுList-ல் அனைத்து உறுப்புகளையும் அணுகுவதற்கான மடக்கின் உச்ச வரம்பை நிர்ணயிக்க பயன்படுகிறது. ஒரு List-ல் மற்றொரு List-ஐ ஒரு உறுப்பாக கொண்டிருந்தால், len() செயற்கூறு உட்புற List-ஐ ஒரு உறுப்பாகவே எடுத்துக்கொள்ளும்.

எடுத்துக்காட்டு:ஒற்றை உறுப்பை அணுகுதல்

>>> MySubject = ["Tamil”, “English”, "Comp. Science”, “Maths”)

>>>len(MySubject)

4

எடுத்துக்காட்டு: மடக்கை பயன்படுத்தி ஒரு List-ல் உள்ள உறுப்புகளை அச்சிடும் நிரல்

MySubject = ["Tamil", "English", "Comp. Science", "Maths"]

i = 0

while i < len(MySubject):

print (MySubject[i])

i = i + 1

வெளியீடு

Tamil

English

Comp. Science

Maths


4. for மடக்கை பயன்படுத்தி உறுப்புகளை அணுகுதல்

பைத்தானில் உள்ள for மடக்கு, List-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒவ்வொன்றாக அணுகுவதற்கு பயன்படுகிறது. இது, C++ போன்ற பிற நிரலாக்க மொழிகளில் உள்ள for மடக்கை போன்றது.

தொடரியல்:

for index_var in List:

print (index_var)

இங்கு, index_var என்பது List-ல் உள்ள ஒவ்வொரு உறுப்பின் சுட்டு மதிப்பைக் குறிக்கிறது. பைத்தான் ஆங்கில மொழியில் படிப்பது போன்றே, "for” கூற்றை கையாள்கிறது: “For (every) element in (the List of) List and print (the name of the) List items”

எடுத்துக்காட்டு

Marks=[23, 45, 67, 78, 98]

for x in Marks:

print( x )

வெளியீடு

23

45

67

78

98

மேலே உள்ள எடுத்துக்காட்டில், Marks List ஐந்து உறுப்புகளைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு உறுப்பிற்கும் 0 முதல் 4 வரை சுட்டெண் இருத்தப்படுகிறது. பைத்தான், ஆங்கில மொழியில் வாசிப்பதை போன்றே for மடக்கு மற்றும் print கூற்றுகளை படிக்கிறது: “For (every) element (represented as x) in (the List of) Marks and print (the values of the) elements”.


5. List உறுப்புகளை மாற்றம் செய்தல் 

பைத்தானில், List-கள் மாறும் தன்மையுடையவை, அதாவது List உறுப்புகள் மாற்றப்படலாம். List உறுப்பு அல்லது தொடர் உறுப்புகளை எளிய மதிப்பிருத்து செயற்குறியை (=) பயன்படுத்தி மாற்றலாம்.

தொடரியல்:

List_Variable [index of an element] = மாற்றப்படும் மதிப்பு

List_Variable (index from : index to] = மாற்றப்படும் மதிப்பு

இங்கு, index from என்பது தொடரின் தொடக்க சுட்டெண் ஆகும். index to என்பது தொடரின் உச்சவரம்பாகும். கொடுக்கப்படும் உச்சமதிப்புதொடரின் உச்சமதிப்பாக சேர்க்கப்பட்டாது.எடுத்துக்காட்டாக, தொடர் (0:5) என்று நீங்கள் பொருத்தினால், பைத்தான் 0 முதல் 4 என்ற உறுப்பு சுட்டெண்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும். எனவே, நீங்கள் 1 முதல் 4 தொடர் உறுப்புகளை மாற்றம் செய்ய விரும்பினால், கட்டாயமாக, [1:5) என்று குறிப்பிட வேண்டும்.

எடுத்துக்காட்டு 9.1: ஒற்றை மதிப்பை மாற்றுவதற்கான பைத்தான் நிரல்

MyList = [2, 4, 5, 8, 10]

print ("MyList elements before update... ")

for x in MyList:

print (x)

MyList[2] = 6

print ("MyList elements after updation...")

for y in MyList:

print (y)

வெளியீடு

MyList elements before update...

2

4

5

8

10

MyList elements after updation.....

2

4

6

8

10

எடுத்துக்காட்டு 9.2: தொடர் மதிப்புகளை மாற்றுவதற்கான பைத்தான் நிரல்

MyList = [1, 3, 5, 7, 9]

print ("List Odd numbers...")

for x in MyList

print (x)

MyList [0:5] = 2,4,6,8,10

print ("List Even numbers...")

for y in MyList:

print (y)

வெளியீடு

List Odd numbers...

1

3

5

7

9

List Even numbers...

2

4

6

8

10


6. List-ல் உறுப்பகளை சேர்த்தல்

பைத்தானில், append ( ) செயற்கூறு ஒரு உறுப்பையும் extend( ) செயற்கூறு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளையும் ஏற்கனவே உள்ள Listல் சேர்க்க பயன்படுகின்றது.

தொடரியல்:

List.append (element to be added)

List..extend ( [elements to be added])

extend( ) செயற்கூறில், பல உறுப்புகளை சதுர அடைப்புக் குறிக்குள் செயற்கூறின் செயலுருபுகளைப் போலவே குறிப்பிட வேண்டும்

எடுத்துக்காட்டு

>>> MyList=[34, 45, 48]

>>> MyList.append(90)

>>>  print(MyList)

[34, 45, 48, 90]

மேலே உள்ள எடுத்துக்காட்டில், My List என்பது மூன்று உறுப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. >>> MyList.append(90) என்ற கூற்றின் மூலம் 90 என்ற கூடுதல் மதிப்பு ஏற்கனவே உள்ள List-ல் கடைசி உறுப்பாக சேர்க்கப்படுகிறது. Print கூற்று MyList என்ற லிஸ்ட்-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது.

எடுத்துக்காட்டு

>>> MyList.extend ([71, 32, 29])

>>> print(MyList)

[34, 45, 48, 90, 71, 32, 29]

மேலே உள்ள குறிமுறையில், extend( ) செயற்கூறு பல உறுப்புகளை சேர்ப்பதற்கு பயன்படுகிறது. Print கூற்று, கூடுதல் உறுப்புகள் சேர்க்கப்பட்ட பிறகு List-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது.


7. List உறுப்புகளை செருகுதல்

நீங்கள் ஏற்கனவே படித்தபடி, பைத்தானில் உள்ள append( ) ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது. ஆனால், இது List-ன் இறுதியில் உறுப்பை சேர்க்கிறது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான இடத்தில் ஒரு உறுப்பை சேர்க்க விரும்பினால், insert ( ) செயற்கூறை பயன்படுத்த வேண்டும். insert ( ) செயற்கூறு, List-ன் எந்தவொரு இடத்திலும் ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.

தொடரியல்:

List.insert (position index, element)

எடுத்துக்காட்டு

>>> MyList=[34,98,47,'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan'] >>>

print(MyList)

[34, 98, 47, 'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']

>>> MyList.insert(3, 'Ramakrishnan')

>>> print(MyList)

[34, 98, 47, 'Ramakrishnan', 'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']

மேலே உள்ள எடுத்துக்காட்டில், insert( ) செயற்கூறு , Ramakrishnan' என்ற புதிய உறுப்பை மூன்றாவது சுட்டெண்ணில் அதாவது நான்காவது இடத்தில் சேர்க்கிறது. புதிய உறுப்பை ஏற்கனவே உள்ள உறுப்புகளின் இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கும் போது, ஏற்கனவே உள்ள உறுப்புகள் வலது பக்கமாக ஒரு இடம் நகர்த்தப்படும்.


8. Listலிருந்து உறுப்புகளை நீக்குதல்

List-ல் இருந்து ஒரு உறுப்பை நீக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அவை del கூற்று மற்றும் remove( ) செயற்கூறு ஆகும். del கூற்று தெரிந்த உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது. ஆனால், remove( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை List-லிருந்து நீக்குவதற்கு பயன்படுகிறது. del கூற்று முழு List-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.

தொடரியல்:

del List [index of an element]

# ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்க

del List [index from : index to]

# ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை நீக்க

del List

# ஒரு List-யை நீக்க

எடுத்துக்காட்டு

>>> MySubjects = ('Tamil', 'Hindi', 'Telugu', 'Maths']

>>> print (MySubjects)

['Tamil', 'Hindi', 'Telugu', 'Maths']

>>> del MySubjects[1]

>>> print (MySubjects)

['Tamil', 'Telugu', 'Maths']

மேலே உள்ள எடுத்துக்காட்டில், MySubjects என்ற List நான்கு உறுப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. Print கூற்று List-ன் அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது. >>> del MySubjects[1] கூற்று, சுட்டெண் 1 என்ற உறுப்பை நீக்குகிறது. அதன்பின் வருகின்ற print List-ன் மீதமுள்ள உறுப்புகளை காண்பிக்கிறது.

எடுத்துக்காட்டு

>>> del MySubjects[1:3]

>> print(MySubjects)

['Tamil']

மேலே உள்ள குறிமுறையில், >>> del MySubjects[1:3] என்பது இரண்டு மற்றும் மூன்றாவது உறுப்புகளை List-லிருந்து நீக்குகிறது. சதுர அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள சுட்டெண்ணின் உச்ச மதிப்பு - 1 என எடுத்துக்கொள்ளும்.

எடுத்துக்காட்டு

>>> del MySubjects

>>> print(MySubjects)

Traceback (most recent call last):

File "<pyshell#9>", line 1, in <module>

print(MySubjects)

NameError: name 'MySubjects' is not defined

இங்கு ,>>>del MySubjects, என்பது MySubjects என்ற List-ஐ முழுவதுமாக நீக்குகிறது. இப்போது உறுப்புகளை அச்சிட முயன்றால், பைத்தான் லிஸ்ட் is not defined என்ற பிழையை காண்பிக்கும். அதாவது, my Subjects என்ற List முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, remove( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது. remove() செயற்கூறு மட்டுமல்லாமல், pop( ) செயற்கூறும் கொடுக்கப்பட்ட சுட்டெண்களை பயன்படுத்தி, ஒரு உறுப்பை நீக்க பயன்படுகிறது. pop( ) செயற்கூறு சுட்டெண் கொடுக்கப்படாத போது List-ன் கடைசி உறுப்பை நீக்கி அதை காண்பிக்கிறது.

clear( ) செயற்கூறு List-ன் அனைத்து உறுப்புகளையும் நீக்க பயன்படுகிறது. இது உறுப்புகளை மட்டுமே நீக்கி, List-ஐ தொடர்ந்து வைத்திருக்கிறது. Del கூற்று முழு லிஸ்ட்-ஐ நீக்குகிறது என்பதை நினைவில் கொள்க.

தொடரியல்:

List.remove(element) # ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்க

List.pop(index of an element)

List.clear()

எடுத்துக்காட்டு

>>> MyList=[12,89,34,'Kannan', 'Gowrisankar', 'Lenin']

>>> print(MyList)

[12, 89, 34, 'Kannan', 'Gowrisankar', 'Lenin']

>>> MyList.remove(89)

>>> print(MyList)

[12, 34, 'Kannan', 'Gowrisankar', 'Lenin']

மேலே உள்ள எடுத்துக்காட்டில், MyList மூன்று முழு எண்கள் மற்றும் மூன்று சரநிலையுரு உறுப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் உள்ள print கூற்று List-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது. >>> MyList.remove(89) கூற்று, List-ல் இருந்து 89 என்ற உறுப்பை நீக்குகிறது. பின்வரும் print கூற்று மீதமுள்ள உறுப்புகளை காண்பிக்கிறது.

எடுத்துக்காட்டு

>>> MyList.pop(1)

34

>>> print(MyList)

[12], 'Kannan', 'Gowrisankar', 'Lenin']

மேலே உள்ள குறிமுறையில், pop( ) செயற்கூறு குறிப்பிட்ட உறுப்பை அதன் சுட்டெண்ணை பயன்படுத்தி நீக்குவதற்கு பயன்படுகிறது. உறுப்பு நீக்கப்பட்டவுடன் pop( ) செயற்கூறு நீக்கப்பட்ட உறுப்பை காண்பிக்கிறது. pop( ) செயற்கூறு லிஸ்ட்ல் இருந்து ஒரு உறுப்பை மட்டும் நீக்கப்பயன்படுகிறது. Del கூற்று பல உறுப்புகளை நீக்குகிறது என்பதை நினைவில் கொள்க.

எடுத்துக்காட்டு

>>> MyList.clear( )

>>> print(MyList)

[ ]

மேலே உள்ள குறிமுறையில், clear( ) செயற்கூறு உறுப்புகளை மட்டும் நீக்கி List-ஐ தொடர்ந்து வைத்திருக்கப் பயன்படுகிறது. உறுப்புகள் நீக்கப்பட்ட List-ஐ அச்சிடுவதற்கு நீங்கள் முயன்றால், எந்தவொரு உறுப்பும் இல்லாத காலியான சதுர அடைப்புக் குறி தோன்றும். அதாவது லிஸ்ட் காலியாக இருக்கும்.


9. List மற்றும் range ( ) செயற்கூறுகள்

range( ) என்பது பைத்தானில் தொடர் மதிப்புகளை உருவாக்கப் பயன்படும் செயற்கூறாகும். range () செயற்கூறை பயன்படுத்தி நீங்கள் தொடர் மதிப்புகளுடன் List-ஐ உருவாக்கலாம்.  range( ) செயற்கூறு மூன்று செயலுருபுகளைக் கொண்டுள்ளது.

range ( ) செயற்கூறின் தொடரியல்:

range (start value, end value, step value)

இங்கு,

• start value - தொடரின் தொடக்க மதிப்பு. சுழியம் தானமைவு தொடக்க மதிப்பாகும்.

• end value - தொடரின் உச்சவரம்பு. பைத்தான் இறுதி மதிப்பை உச்சவரம்பு-1 என எடுத்துக் கொள்கிறது.

• step value - இது ஒரு விருப்ப செயலுருபு (கொடுக்க வேண்டியது கட்டாயமில்லை) இது வெவ்வேறு இடைவெளிகளில் மதிப்புகளை உருவாக்கப் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு 9.3: 10 வரை உள்ள முழு எண்களை உருவாக்குதல்:

for x in range (1, 11):

print(x)

வெளியீடு

1

2

3

4

5

6

7

8

9

10

எடுத்துக்காட்டு 9.4: முதல் 10 இரட்டைப்படை எண்களை உருவாக்குதல்

for x in range (2, 11, 2):

print(x)

வெளியீடு

2

4

6

8

10

1. தொடர் மதிப்புகளுடன் லிஸ்ட்-ஐ உருவாக்குதல்

range( ) செயற்கூறை பயன்படுத்தி நீங்கள் தொடர் மதிப்புகளுடன் கூடிய லிஸ்ட்-ஐ உருவாக்கலாம். range( ) செயற்கூறின் விடையை லிஸ்ட் ஆக மாற்றுவதற்கு, List( ) செயற்கூறு பயன்படுகிறது. List( ) செயற்கூறு range( ) ன் விடையை லிஸ்ட் ஆக உருவாக்குகிறது.

தொடரியல்:

List_Varibale = List ( range ( ) )

குறிப்பு

List()செயற்கூறு பைத்தானில் லிஸ்ட் உருவாக்கப்பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு

>>> Even_List = List(range(2,11,2))

>>> print(Even_List)

[2, 4, 6, 8, 10]

மேலே உள்ள குறிமுறையில், List( )செயற்கூறு range( ) ன் விடையை Even_List என்ற List உறுப்புகளாக எடுத்துக் கொள்கிறது. எனவே, Even_List என்ற List முதல் ஐந்து இரட்டைப்படை எண்களை உறுப்புகளாக பெற்றிருக்கும்.

இதுபோன்று, எந்த தொடர் எண்களையும் range( ) பயன்படுத்தி உருவாக்கலாம். பின்வரும் எடுத்துக்காட்டு முதல் 10 இயல் எண்களின் 2ன் அடுக்கங்களுடன் கூடிய List-ஐ உருவாக்குதலை விளக்குகிறது.

எடுத்துக்காட்டு 9.5 முதல் 10 இயல் எண்களின் 2-ன் அடுக்குகளை உருவாக்குதல்

Squares = [ ]

for x in range(1,11):

S = x**2

squares.append(s)

print (squares)

மேலே உள்ள நிரலில், "squares" என்ற பெயருடைய ஒரு வெற்று லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர், for மடக்கு 1 முதல் 10 இயல் எண்களை range( ) செயற்கூறை பயன்படுத்தி உருவாக்குகிறது. மடக்கின் உள்ளே, ன் தற்போதைய மதிப்பு, 2-ன் அடுக்கேற்றத்தால் அதிகப்படுத்தப்பட்ட பின்னர் என்ற மாறியில் சேமிக்கப்படுகிறது. இறுதியாக, நிரல் பின்வரும் மதிப்புகளை விடையாகக் காண்பிக்கிறது.

வெளியீடு

[1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100]


10. List சுருக்கம் (List comprehensions)

List சுருக்கம் என்பது, கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு உருவாகும் தொடர் மதிப்புகளை ஏற்கும் List-யை உருவாக்கும் எளிய வழிமுறையாகும்.

தொடரியல்:

List = [ expression for variable in range ]

எடுத்துக்காட்டு 9.6: List சுருக்கத்தைப் பயன்படுத்தி முதல் 10 இயல் எண்களின் 2-ன் அடுக்குகளை உருவாக்குதல்.

>>> squares = [x** 2 for x in range(1,11) ]

>>> print (squares)

வெளியீடு

[1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100]

மேலே உள்ள எடுத்துக்காட்டில், x ** 2 என்ற கோவை மடக்குச் செயலின் ஒவ்வொரு சுழற்சியிலும் மதிப்பீடு செய்யப்படுகிறது. இது தொடர் மதிப்புகளை உருவாக்குவதற்கான குறுக்கு வழிமுறையாகும்.


11 . பிற முக்கியமான List செயற்கூறுக




12. List பயன்படுத்தப்பட்ட நிரல்கள்

நிரல் 1:1 முதல் 20 வரையான எண்களில் 4-ல் வகுபடும் எண்களை பெறும் List ஒன்றை உருவாக்கும் நிரல் ஒன்றை எழுதுக.

divBy4=[ ]

for i in range(21):

if (i%4==0) :

divBy4.append(i)

print(divBy4)  

வெளியீடு

[0, 4, 8, 12, 16, 20]

நிரல்2 : BRICS ன் உறுப்பு நாடுகளின் List- வரையறை செய்து, உள்ளீடு செய்யப்படும் நாடு BRICS ன் உறுப்பா (அல்லது) இல்லையா என்பதை பரிசோதிக்கும் நிரலை எழுதுக.

country=["India", "Russia", "Srilanka", "China", "Brazil"]

is_member = input("Enter the name of the country:")

if is_member in country:

print(is_member, " is the member of BRICS")

else:

print(is_member, " is not a member of BRICS")

வெளியீடு

Enter the name of the country:

India India is the member of BRICS

வெளியீடு

Enter the name of the country:

Japan Japan is not a member of BRICS

நிரல் 3: ஆறு பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடாகப் பெற்று, ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களை அச்சிட்டு மதிப்பெண்களின் கூட்டுத்தொகையை காண்பிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

marks=[]

subjects=['Tamil', 'English', 'Physics', 'Chemistry', 'Comp. Science', 'Maths']

for i in range(6):

m=int(input("Enter Mark = "))

marks.append(m)

for j in range(len(marks)):

print("{ }, { } Mark = { } ".format(j1+,subjects[j],marks[j]))

print("Total Marks = ", sum(marks))

வெளியீடு

Enter Mark = 45

Enter Mark = 98

Enter Mark = 76

Enter Mark = 28

Enter Mark = 46

Enter Mark = 15

1. Tamil Mark = 45

2. English Mark = 98

3. Physics Mark = 76

4. Chemistry Mark = 28

5. Comp. Science Mark = 46

6. Maths Mark = 15

Total Marks = 308

நிரல் 4: 5 பொருள்களின் விலையை List-ல் பெற்று, அனைத்து விலைகளின் கூட்டுத்தொகை, பெருக்கற்தொகை மற்றும் சராசரியைக் கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.

items=[]

prod=1

for i in range(5):

print ("Enter price for item {}: ".format(i+1))

p=int(input())

items.append(p)

for j in range(len(items)):

print("Price for item { } = Rs. { }".format(j+1,items[j]))

prod = prod* items[j]

print("Sum of all prices = Rs.'', sum(items))

print("Product of all prices = Rs.'', prod)

print("Average of all prices = Rs.",sum(items)/len(items))

வெளியீடு

Enter price for item 1:

5

Enter price for item 2:

10

Enter price for item 3 :

15

Enter price for item 4:

20

Enter price for item 5:

25

Price for item 1 = Rs. 5

Price for item 2 = Rs. 10

Price for item 3 = Rs. 15

Price for item 4 = Rs. 20

Price for item 5 = Rs. 25

Sum of all prices = Rs. 75

Product of all prices = Rs. 375000

Average of all prices = Rs. 15.0

நிரல்5: ஆண்டுக்கு 1 இலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பைத்தான் நிரல் n எண்ணிக்கையிலான பணியாளர்களின் மாத ஊதியத்தை உள்ளீடாக பெற வேண்டும்.

count=0

n=int(input("Enter no. of employees: "))

print("No. of Employees",n)

salary=[]

for i in range(n):

print("Enter Monthly Salary of Employee { } Rs.: ".format(i+1))

s=int(input())

salary.append(s)

for j in range(len(salary)):

annual_salary = salary[j] * 12

print ("Annual Salary of Employee { } is:Rs. {}".format(j+1,annual_salary))

if annual_salary >= 100000:

count = count + 1

print("{ } Employees out of { } employees are earning more than Rs. 1 Lakh per annum". format(count, n))

வெளியீடு

Enter no. of employees: 5

No. of Employees 5

Enter Monthly Salary of Employee 1 Rs.:

3000

Enter Monthly Salary of Employee 2 Rs.:

9500

Enter Monthly Salary of Employee 3 Rs.:

12500

Enter Monthly Salary of Employee 4 Rs.:

5750

Enter Monthly Salary of Employee 5 Rs.:

8000

Annual Salary of Employee 1 is:Rs. 36000

Annual Salary of Employee 2 is:Rs. 114000

Annual Salary of Employee 3 is:Rs. 150000

Annual Salary of Employee 4 is:Rs. 69000

Annual Salary of Employee 5 is:Rs. 96000

2 Employees out of 5 employees are earning more than Rs. 1 Lakh per annum

நிரல் 6: 1 முதல் 10 வரையுள்ள தொடர் எண்களை ஏற்கும் List ஒன்றை உருவாக்குவதற்கான நிரலை எழுதுக. பிறகு அனைத்து இரட்டைப்படை எண்களையும் நீக்கவிட்டு இறுதிப்பட்டியலை அச்சிடுக

Num = []

for xin range(1,11):

Num.append(x)

print("The List of numbers from 1 to 10 = "', Num)

for index, i in enumerate(Num):

if(i%2==0):

del Num[index]

print("The List after deleting even numbers = ", Num)

வெளியீடு

The List of numbers from 1 to 10 = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]

The List after deleting even numbers = [1, 3, 5, 7, 9]

நிரல் 7: பைபோனாசி வரிசையை உருவாக்கி அதை List -ல் சேமிப்பதற்கான நிரலை எழுதுக. பிறகு அனைத்து மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கண்டறிக.

a=-1

b=1

n=int(input("Enter no. of terms: "))

i=0

sum=0

Fibo=[ ]

 while i<n:

S = a + b

Fibo.append(s)

sum+=s

a = b

b = S

i+=1

print("Fibonacci series upto "+ str(n) +" terms is : " + str(Fibo))

print("The sum of Fibonacci series: ",sum)

வெளியீடு

Enter no. of terms: 10

Fibonacci series upto 10 terms is : [0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34]

The sum of Fibonacci series: 88

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary : Introduction to List Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 9 : தமிழ்: OOPS (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் : List ஓர் அறிமுகம் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 9 : தமிழ்: OOPS (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்