Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | காந்தங்கள் கண்டறியப்படல்

பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தங்கள் கண்டறியப்படல் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்

காந்தங்கள் கண்டறியப்படல்

இந்நிகழ்வை மக்கள் அதிசயித்துப் பார்த்தனர். ஒவ்வொருவரும் தம்மனதில் தோன்றியதைக் கூறினர். உண்மையில் மேக்னஸின் கைத்தடி பாறையில் ஒட்டிக்கொண்டதன் காரணம் என்ன? நீ என்ன நினைக்கிறாய்? ஊகித்து எழுது.

காந்தங்கள் கண்டறியப்படல்

இந்நிகழ்வை மக்கள் அதிசயித்துப் பார்த்தனர். ஒவ்வொருவரும் தம்மனதில் தோன்றியதைக் கூறினர். உண்மையில் மேக்னஸின் கைத்தடி பாறையில் ஒட்டிக்கொண்டதன் காரணம் என்ன? நீ என்ன நினைக்கிறாய்? ஊகித்து எழுது. 


உனது யூகம் சரியானதுதான். அந்தப்பாறை காந்தத்தன்மையுடையது. அது மேக்னஸின் கைத்தடியை மட்டுமல்ல, இரும்பாலான அனைத்துப் பொருள்களையும் ஈர்ப்பதை மக்கள் கண்டறிந்தனர். இதே போன்ற பாறைகள் உலகின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டன. காந்தத்தன்மையுடைய இப்பாறைகள் சிறுவன் மேக்னஸின் பெயரால் 'மேக்னட்' என்றும்,அதன்தாதுக்கள் 'மேக்னடைட் என்றும் அழைக்கப்பட்டன. இப்பாறைகள் கண்டறியப்பட்ட 'மெக்னீசியா' என்ற ஊரின் பெயராலும் இப்பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


காந்தத்தன்மையுடையதாது மேக்னடைட் என்று அழைக்கப்படுகிறது. இவை இயற்கையான பாறைகள் என்பதால் ஒரு குறிப்பிட்ட வடிவம் இவற்றிற்குக் கிடையாது. மேக்னடைட் இயற்கைக் காந்தம் எனப்படுகிறது. காந்தங்கள் திசையினை அறியப் பயன்படுவதால் இவை வழிகாட்டும் கற்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

Tags : Term 3 Unit 1 | 6th Science பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 1 : Magnetism : Discovery of Magnets Term 3 Unit 1 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல் : காந்தங்கள் கண்டறியப்படல் - பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்