Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | நாற்கர குடும்பத்தின் பண்புகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நாற்கர குடும்பத்தின் பண்புகள் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

நாற்கர குடும்பத்தின் பண்புகள்

நாற்கரம், சதுரம், செவ்வகம், சாய்சதுரம், இணைகரம், சரிவகம்

நாற்கர குடும்பத்தின் பண்புகள்


நாற்கரம்

1. நான்கு பக்கங்கள் கொண்ட மூடிய வடிவம் நாற்கரமாகும்

2. நாற்கரத்திற்கு நான்கு பக்கங்கள் (AB, BC, CD, DA) நான்கு முனைகள் (A,B,C,D) மற்றும் இரண்டு மூலைவிட்டங்கள் (AC, BD) உள்ளன.


சதுரம், செவ்வகம், சாய்சதுரம், இணைகரம் மற்றும் சரிவகம் ஆகியவை நாற்கர குடும்பத்தைச் சேர்ந்தவை.


சதுரம்


1. நான்கு சமபக்கங்களைக் கொண்டது. (PQ = QR = RS = SP)

2. நான்கு முனைகளைக் கொண்டது. (P, Q, R, S)

3. சம நீளமுள்ள இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது. (PR = QS)

எடுத்துக்காட்டு

சுண்டாட்டப் பலகை, சதுரங்க பலகை, படம்



செவ்வகம்


1. நான்கு பக்கங்களைக் கொண்டது. (WX, XY, YZ, ZW)

2. அதன் எதிரெதிர் பக்கங்கள் சமமானவை. (WX = ZY; XY = WZ)

3. நான்கு முனைகளைக் கொண்டது. (W, X, Y, Z) 

4. சம நீளமுள்ள இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது. (WY = ZX)

எடுத்துக்காட்டு

மிதியடி, கரும்பலகை, அஞ்சல் அட்டை



சாய்சதுரம்


1. நான்கு சமபக்கங்களைக் கொண்டது. (LM = MN = NO = OL)

2. நான்கு முனைகளைக் கொண்டது. (L, M, N, O)

3. இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது. (LN, MO)

4. மூலைவிட்டங்களின் நீளங்கள் சமமல்ல.

எடுத்துக்காட்டு

பட்டம், தள நிரப்பிகள் (Tiles), குறீயிட்டுப் பலகை



இணைகரம்


1. நான்கு பக்கங்களைக் கொண்டது. (EF, FG, GH, HE) 

2. அதன் எதிரெதிர் பக்கங்கள் இணையானவை மற்றும் சம நீளமானவை. (EF=HG; EH = FG)

3. நான்கு முனைகளைக் கொண்டது. (E, F, G, H) 

எடுத்துக்காட்டு

அழிப்பான்



சரிவகம்

1. ஒரு சரிவகம் நான்கு பக்கங்களைக் கொண்டது (LM, MN, NO, OL)

2. ஒரு ஜோடி எதிர்பக்கங்கள் இணையானவை (LM, LO)


3. நான்கு முனைகளைக் கொண்டது (L, M, N, O)

4. இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டது (LN, MO)

எடுத்துக்காட்டு

மேசை, கைப்பை



செயல்பாடு

வடிவங்களின் பண்புகளைக் கலந்துரையாடுக.

Tags : Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 1 : Geometry : Draw 2D shapes in free hand with geometry tools Geometry | Term 1 Chapter 1 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : நாற்கர குடும்பத்தின் பண்புகள் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்