வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.4 | 4th Maths : Term 1 Unit 1 : Geometry
பயிற்சி 1.4
1. கோடிட்ட இடத்தை நிரப்புக
i. நான்கு பக்கங்கள் கொண்ட மூடிய வடிவத்தினை நாற்கரம் என்று அழைக்கலாம்.
ii. நான்கு சமநீளமுள்ள பக்கங்களையும் சமமான மூலைவிட்டங்களையும் கொண்டது சதுரம் ஆகும்.
iii. செவ்வக வடிவத்தின் எதிர்பக்கங்கள் சமம்.
iv. மூலைவிட்டங்கள் சமமாக உள்ள வடிவங்கள் சதுரம் மற்றும் சாய்சதுரம்.
2. பக்கங்கள் மற்றும் மூலைவிட்டங்களின் பெயர்களை எழுதுக.
(i) பக்கங்கள்: AB, BC, CD, AD
மூலைவிட்டங்கள்: AC, BD
(ii) பக்கங்கள்: WX, XY, YZ, ZW
மூலைவிட்டங்கள்: WY, XZ
(iii) பக்கங்கள்: PQ, QR, RS, SP
மூலைவிட்டங்கள்: PR, QS
(iv) பக்கங்கள்: EF, FG, GH, EH
மூலைவிட்டங்கள்: EG, FH
செயல்பாடு
பின்வரும் பொருள்களின் பக்க அளவுகளை அளந்து அவற்றின் வடிவங்களை கண்டறிக. அவற்றின் வேறுபாடுகளை கண்டறிந்து அட்டவணையை நிரப்புக.
(a) சதுரங்க அட்டை (b) அஞ்சல் அட்டை (c) ஜன்னல் (d) அழிப்பான் (e) செய்தித்தாள் (f) கணித உபகரணப் பெட்டி (g) பட்டம்