Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | சமக் குழுவாக்கம்

எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - சமக் குழுவாக்கம் | 3rd Maths : Term 3 Unit 2 : Numbers

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்

சமக் குழுவாக்கம்

சமக் குழுவாக்கம் வழியாகவும் வகுத்தலைச் செய்யலாம்.

சமக் குழுவாக்கம்

சமக் குழுவாக்கம் வழியாகவும் வகுத்தலைச் செய்யலாம்.

இது இரங்கம்மாவின் கடை.

அவள் காய்கறிகளை விற்பனை செய்வதற்குக் 'கூறு' எனப்படும் சமக் குழுக்களாகப் பிரித்து அடுக்கினார்.


1. இரங்கம்மா 40 எலுமிச்சைகளை வைத்திருந்தார். ஒரு கூறில் 5 எலுமிச்சைகள் வீதம் என அடுக்கி வைத்தார். எலுமிச்சைகளைக் குழுக்களாக அடுக்கிக் குழுக்களின் எண்ணிக்கையைக் காண்போம்.

கொடுக்கப்பட்டுள்ள எண்கோட்டில் இதனைக் குறிப்போம்.

எண் கூற்று முறையில் இதனை 40 ÷ 5 = 8 என எழுதலாம். 


2. இரங்கம்மாவிடம் 36 தேங்காய்கள் இருந்தன. அவற்றை ஒரு கூறில் 4 தேங்காய்கள் என இருக்குமாறு அடுக்கினார் எனில் அவர் எத்தனை கூறுகள் அடுக்கியிருப்பார்?

எண்கோட்டை வரைக.

எண் கூற்று முறையில் இதனை 36 ÷ 4 = 9 என எழுதலாம்.


3. இரங்கம்மாவிடம் 48 நெல்லிகனிகள் இருந்தன. அதனை ஒரு கூறில் 6 கனிகள் என இருக்குமாறு அடுக்கினார். எனில் கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.

எண்கோட்டை வரைக

எண் கூற்று முறையில் இதனை  48 ÷ 6 = 8 என எழுதலாம். 


4. இரங்கம்மா அந்த 48 நெல்லிக்கனிகளைக் கூறுகளாக அடுக்கக்கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அதன் எண் கூற்றுகளை எழுதுக.

i. 48 ÷ 1 = 48

ii. 48 ÷ 2 = 24

iii. 48 ÷ 3 = 16

iv. 48 ÷ 4 = 12

v. 48 ÷ 6 = 8

vi. 48 ÷ 6

vii. 48 ÷ 12 = 4

viii. 48 ÷ 16 3

ix. 48 ÷ 24 = 2

x. 48 ÷ 48 = 1



Tags : Numbers | Term 3 Chapter 2 | 3rd Maths எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 2 : Numbers : Equal Grouping Numbers | Term 3 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள் : சமக் குழுவாக்கம் - எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்