எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - சமப் பங்கீடும் மீள் கழித்தலும் | 3rd Maths : Term 3 Unit 2 : Numbers
அலகு 2
எண்கள்
சமப் பங்கீடும் மீள் கழித்தலும்
கபிலனிடம் 30 மாங்கனிகள் இருந்தன. அவற்றை அவன் தன் 5 நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினான். தனது நண்பர்களுடன் ஒன்றன் பின் ஒன்றாக அவன் சமமாகப் பகிர்ந்த விதத்தைப் பார்போம்.
படிகளின் எண்ணிக்கை = 6
ந = நண்பர்கள்
இதனை ஓர் எண்கோட்டில் குறிப்போம்
மீள் கழித்தல் கூற்று 30 - 5 - 5 - 5 - 5 - 5 - 5 = 0
கபிலன் 30 மாங்கனிகளைத் தன் 5 நண்பர்களுக்கு ஒவ்வொரு படியிலும் ஒரு மாங்கனி எனப் பகிர்ந்தளித்தார். ஆகவே, ஒவ்வொரு நண்பருக்கும் முறையே 6 மாங்கனிகள் கிடைத்தன.
கபிலன் 30 மாங்கனிகைளத் தனது 10 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதைக் கற்பனை செய்க.
படிகளின் எண்ணிக்கை = 3
மேலே உள்ள சூழலுக்கான எண்கோடு
மீள் கழித்தல் கூற்று 30 - 10 - 10 - 10 = 0
இம்முறை கபிலன் 30 மாங்கனிகளைத் தன் 10 நண்பர்களுக்கு 3 படிகள் பகிர்ந்ததன் மூலம் ஒவ்வொரு நண்பருக்கும் 3 மாங்கனிகள் கிடைத்தன.
கபிலன் இந்த 30 மாங்கனிகளைத் தன் 15 நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனில் ஒவ்வொருவருக்கும் எத்தனை மாங்கனிகள் கிடைக்கும்? அந்த மாங்கனிகளைப் பகிர்ந்தளிக்க எத்தனைப் படிகள் தேவைப்படும்?
படிகளின் எண்ணிக்கை = 2
எண்கோட்டை நிறைவு செய்க.
மீள் கழித்தல் கூற்று 30 – 15 – 15 = 0
கபிலன் 30 மாங்கனிகளைத் தன் 15 நண்பர்களுக்கு 2 படிகளில் பகிர்ந்தளித்தார் எனில் ஒவ்வொரு நண்பருக்கும் 2 மாங்கனிகள் கிடைத்தன.
மேலே உள்ள 3 எடுத்துக்காட்டுகளையும் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
மேலே உள்ள 3 எடுத்துக்காட்டுகளையும் பின்வருமாறு எழுதலாம்.
30 ÷ 5 = 6
30 ÷ 10 = 3
30 ÷ 15 = 2
சமமாகப் பகிர்ந்தளிப்பதென்பது கணிதத்தில் ‘வகுத்தல்’ எனக் கூறப்படுகிறது. வகுத்தல் "÷" என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
வகுத்தல் கூற்று 30 ÷ 5 = 6
மேலும், ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
8 ÷ 4 = 2
இங்கு 8 என்பது வகுபடும் எண், 4 என்பது வகுத்தி மேலும் 2 என்பது ஈவு ஆகும்.
அட்டவணையை நிறைவு செய்க
2 மாங்கனிகளை 5 நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியுமா? முடியாது. எனென்றால் வகுத்தியை விட வகுபடும் எண் பெரியதாக இருக்க வேண்டும்.