எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கலும் வகுத்தலும் | 3rd Maths : Term 3 Unit 2 : Numbers
பெருக்கலும் வகுத்தலும்
வகுத்தல் கூற்றைக் காண்க.
8 ÷ 2 = 4
ரோஜாவிடம் 8 இனிப்புகள் இருக்கின்றன. அவற்றை தன் 2 தோழிகளுக்கு அவள் பகிர்ந்தளித்தாள் எனில் ஒவ்வொரு வருக்கும் எத்தனை இனிப்புகள் கிடைத்திருக்கும்?
4 இனிப்புகளைக் கொண்ட 2 குழுக்கள் 8 இனிப்புகளைப் பெற்றதை
2 × 4 = 8 என எழுதலாம்
எனவே பெருக்கலும் வகுத்தலும் தலைகீழ் செயல்கள் என்பதை அறிகிறோம்.
2 × 4 = 8
8 ÷ 2 = 4
கொடுக்கப்பட்டுள்ள 10 மலர்கள் அடுக்கப்பட்டிருக்கும் விகிதத்தைக் காண்க.
5 குழுக்களில் ஒரு குழுவிற்கு 2 மலர்கள் வீதம் 10 மலர்கள் இருக்கின்றன
5 × 2 = 10
2 குழுக்களுக்கு ஒவ்வொருவருக்கும் 5 மலர்கள் வீதம் 10 மலர்கள் இருக்கின்றன
2 × 5 = 10
10 மலர்களை ஒரு குழுவிற்கு 2 மலர் என 5 குழுவில் அடுக்கலாம்.
10 ÷ 5 = 2
10 மலர்களை ஒரு குழுவிற்கு 5 மலர்கள் என 2 குழுவில் அடுக்கலாம்.
10 ÷ 2 = 5
கொடுக்கப்பட்டுள்ள பெருக்கல் கூற்றுகளுக்கு வகுத்தல் கூற்றுகளைக் கண்டறிதல்.
பெருக்கல் வாய்பாடு மூன்றுக்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
பெருக்கல் வாய்பாடு நான்கிற்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
பெருக்கல் வாய்பாடு ஐந்திற்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
பெருக்கல் வாய்பாடு பத்திற்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
பின்வருவனவற்றின் ஈவினைக் காண்க..
1. 12 ÷ 4 = 3
4 × 1= 4
4 × 2 = 8
4 ×3 =12
12 என்பது 3 முறை 4 ஆகும். 3 × 4 = 12
எனவே 12 ÷ 4 = 3
12 எனும் பெருகற்பலன் கிடைக்கும் வரை 4 இன் பெருக்கல் வாய்பாடு கூறுக.
2. 25 ÷ 5 = 5
5 × 1 = 5
5 × 2 = 10
5 × 3 = 15
5 × 4 = 20
5 × 5 = 25
25 எனும் பெருக்கற்பலன் கிடைக்கும் வரை 5 இன் பெருக்கல் வாய்பாடு கூறுக.
25 ÷ 5 = ______
25 என்பது 5 முறை 5 ஆகும். 5 × 5 = 25
எனவே 25 ÷ 5 = 5