தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 (பாஸ்கல் முக்கோணம்) | 7th Maths : Term 2 Unit 5 : Information Processing
பயிற்சி 5.2
1. கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.
தீர்வு :
2. பாஸ்கல் முக்கோணத்தில் இருந்து பின்வரும் அறுங்கோண வடிவங்கள் எடுக்கப்பட்டுள்ள எனில், அவற்றில் விடுபட்டுள்ள எண்களை நிரப்புக.
தீர்வு :
3. 1, 2, 6, 20 ஆகிய எண்களை இணைக்கும் கோட்டைச் சமச்சீர் அச்சாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.
தீர்வு :
கொள்குறி வகை வினாக்கள்
4. பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?
i) 1, 5, 10, 5, 1
ii) 1, 5, 5, 1
iii) 1, 5, 5, 10, 5, 5, 1
iv) 1, 5, 10, 10, 5, 1
விடை : iv) 1, 5, 10, 10, 5, 1
5. பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்
i) 3, 6, 10, ....
ii) 4, 10, 20, ...
iii) 1, 4, 10, ...
iv) 1, 3, 6, ...
விடை : ii) 4, 10, 20, ...
6. பாஸ்கல் முக்கோணத்தில் 9வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை யாது?
i) 128
ii) 254
iii) 256
iv) 126
விடை : iii) 256
விடைகள் :
பயிற்சி 5.2
1.
2.
3.
கொள்குறி வகை வினாக்கள்
4. (iv) 1,5,10,10,5,1
5. (ii) 4,10,20,...
6. (iii) 256