மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா | 7th Social Science : Geography : Term 3 Unit 1 : Exploring Continents -North America and South America
புவியியல்
அலகு -1
கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா
p
கற்றலின் நோக்கங்கள்
• வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களின் அமைவிடம், எல்லைகள் மற்றும் அரசியல் பிரிவுகள் குறித்து புரிந்து கொள்ளுதல்.
• இயற்கைப் பிரிவுகள் மற்றும் ஆறுகள் பற்றி புரிந்து கொள்ளுதல்.
• வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் காலநிலை, இயற்கை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
• இயற்கை வளங்கள், பொருளாதார செயல்பாடுகள் மற்றும் கலாச்சார கலவை குறித்து விவாதித்தல்.
• வரைபடத்தில் இடங்களை குறிக்கும் திறனை வளர்த்தல்.
அறிமுகம்
மாணவர்கள் : காலை வணக்கம் அம்மா.
ஆசிரியர் : அனைவருக்கும் வணக்கம். உங்களது அரையாண்டு தேர்வு விடுமுறையை நன்றாக கொண்டாடினீர்களா?
மாணவர்கள் : நன்றாக கொண்டாடினோம் அம்மா .
ஆசிரியர் : அருமை. நம் உலகத்தில் எத்தனை கண்டங்கள் உள்ளன என உங்களுக்கு தெரியுமா? அவற்றை உங்களில் யாராவது ஒருவர் பெயரிட்டு சொல்லுங்கள்.
மாணவர்கள் : உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா.
ஆசிரியர் : சென்ற ஆண்டு எத்தனை கண்டங்களை பற்றி படித்து உள்ளீர்கள்?
மாணவர்கள் : ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்கள் பற்றி சென்ற ஆண்டு படித்தோம் அம்மா .
ஆசிரியர் : சரி. இவ்வாண்டு வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களைப் பற்றி நாம் படிப்போம்.