Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஒப்பிடுக

கண்டங்களை ஆராய்தல் | மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஒப்பிடுக | 7th Social Science : Geography : Term 3 Unit 1 : Exploring Continents -North America and South America

   Posted On :  14.05.2022 06:25 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஒப்பிடுக

கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா


சுருக்கம் 

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு அடுத்து வட அமெரிக்கா மூன்றாவது பெரிய கண்டமாகும். இது நான்கு முக்கிய இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டலம் முதல் துருவப் பகுதிகள் வரை விரிந்துள்ள அட்சக்கோடுகளின் பரவல் வட அமெரிக்காவின் காலநிலையை ஆசியாவை போன்று பலவகைப்பட்டதாக அமைத்துள்ளது.

விரிந்து பரந்த பல்வேறுபட்ட காடுகளை கொண்டுள்ளது வடஅமெரிக்கா. கிட்டதட்ட 30 சதவீத நிலப்பரப்பில் உள்ளன.

கோதுமை, சோளம், ஓட்ஸ் சோயாபீன்ஸ், பார்லி மற்றும் பல உணவு தானியங்கள் வட அமெரிக்காவில் பரந்த சமவெளிகளில் விளைவிக்கப்படுகின்றன.

வடஅமெரிக்கா இரும்பு தாது, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தாமிரம், வெள்ளி, சல்ஃபர், துத்தநாகம், பாக்சைட், மாங்கனீசு போன்றவற்றின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

நூற்றுக்கணக்கான பல்வேறுபட்ட கலாச்சாரங்களை சந்தித்து கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதால் அமெரிக்கா உருகும் பனி என அழைக்கப்படுகிறது.

ஆசியா, ஆப்பிரிக்கா,வட அமெரிக்காவினைத் தொடர்ந்து தென் அமெரிக்கா உலகின் நான்காவது மிகப்பெரிய கண்டமாக உள்ளது. இது மூன்று பெரிய இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் காலநிலையை அட்சக்கோடுகள், கடல் மட்டத்தின் உயரம் மற்றும் பசிபிக் அட்லாண்டிக் பெருங்கடல்களின் அருகாமை ஆகிய இம்மூன்றும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகளைக் கொண்டது தென் அமெரிக்கா. அமேசான் படுகை, கிழக்கு உயர்நிலங்கள், கிராண்ட் சாக்கோ மற்றும் ஆன்டஸ் மலைச்சரிவுகள்.

கோதுமை, சர்க்கரை, சோளம், காபி, கொக்கோ, வாழை, பருத்தி ஆகியவை தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப் படுகின்றன.

இரும்புத்தாது, மாங்கனீசு, பெட்ரோலியம், தாமிரம், பாக்சைட் போன்ற கனிமங்களோடு இன்னும் பிற விலைமதிப்புள்ள கனிமங்கள் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.

போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் தென் அமெரிக்காவின் முதன்மை மொழிகள் ஆகும்.


கலைச்சொற்கள் :

1. நிலச்சந்தி - A narrow stretch of land joining two large land masses - Isthmus 

2. நீர்ச்சந்தி - A narrow stretch of water joining two large water bodies - Strait

3. மரக்கூழ்  - Obtained from wood Pulp - Cellulose 

4. பிரெய்ரி புல்வெளி - A temperate grassland of North America - Prairies

5. இக்லூ (எஸ்கிமோக்களின் வீடு) - The specially designed a house by ice  - Igloos

6. பசிபிக் நெருப்பு வளையம் - These places are subject to great volcanic eruption and earthquake activities - The Pacific Ring  of Fire

7. மழைக் காடுகள் - A tract of land covered by dense equatorial forest in the Amazon basin. – Selvas

8. பாம்பாஸ் - A temperate grassland of South America - Pampas 

9. நான்கு மணி மழை - In equatorial regions, convectional Rain occurs at 4pm - 4'o Clock rain

10. செம்மறி ஆட்டுப் பண்ணை - The Breeds raised on large pasture lands - Estancias


References 

1. World Geography, Alka Gautham, (2013), Sharda Pustak Bhawan, Allahabad-211002. 2. Purnell's concise Encyclopedia of Geography - C.J. Turnney,(1984),Little Hampton Book Services Ltd, UK. 

3. The World Geography by Time life (1999), USA. 

4. The illustrated Encyclopedia of Geography, (2005), Pentagon Press, USA. 

5. A Dictionary of Geography, Mayhew Susan, (2015), Oxford University Press, UK2.


Tags : Exploring Continents | Term 3 Unit 1 | Geography | 7th Social Science கண்டங்களை ஆராய்தல் | மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Geography : Term 3 Unit 1 : Exploring Continents -North America and South America : North America and South America - Compare Exploring Continents | Term 3 Unit 1 | Geography | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா : வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஒப்பிடுக - கண்டங்களை ஆராய்தல் | மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா