Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | எழில் கொஞ்சும் அருவி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ் - எழில் கொஞ்சும் அருவி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 2 Chapter 6 : Ezhil konjum aruvi

   Posted On :  02.07.2022 12:46 pm

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி

எழில் கொஞ்சும் அருவி: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்
பயிற்சி

வாங்க பேசலாம்

* நீ வசிக்கும் பகுதியில் அல்லது மாவட்டத்தில் ஏதேனும் சுற்றுலாத்தலம் சென்று வந்துள்ளாயா? உனது அனுபவத்தை வகுப்பில்   பகிர்ந்துகொள்.

நான் வசிக்கும் திருநெல்வேலி மாவட்த்திலுள்ள தென்காசிக்கு அருகில் (மேற்குத் தொடர்ச்சி மலையில்) குற்றாலம் நான் சென்று வந்துள்ள இடமாகும்.

முதன்மை அருவி, ஐந்தருவி, புலியருவி, தேனருவி, அகத்தியர் அருவி போன்ற அருவிகளும், பழைய குற்றாலம் போன்ற இடங்களும் உள்ளன.

நானும் எனது குடும்பத்தினரும் ஐந்தருவிக்குச் சென்றோம். அந்த அருவியில் ஐந்து இடங்களில் நீர்வீழ்ச்சி இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  நானும் எனது குடும்பத்தினரும் நல்ல முறையில் நீராடி மகிழந்தோம். மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து வரும் நீரில் குளித்ததால் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைத்த அனுபவம் நன்றாக அமைந்தது. இன்னும் எத்தனைமுறை வேண்டுமானாலும் அவ்விடத்திற்குச் செல்லலாம் என்ற எண்ணமே தோன்றுகிறது.படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1.  ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _______ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது. 

அ) தங்கத்தை       

ஆ) வெள்ளியை        

இ) இரும்பை      

ஈ) கற்பாறையை

விடை : ஆ) வெள்ளியை 


2. 'ஒகேனக்கல்' என்ற சொல்லின் பொருள் ________. 

அ) பவளப்பாறை          

ஆ) வழுக்குப்பாறை 

இ) பனிப்பாறை            

ஈ) புகைப்பாறை

விடை : ஈ) புகைப்பாறை 


3. 'வெண்புகை' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________. 

அ) வெண் + புகை          

ஆ) வெ + புகை 

இ) வெண்மை + புகை       

ஈ) வெம்மை + புகை

விடை : இ) வெண்மை + புகை


4. பாதை + அமைத்து – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________. 

அ) பாதை அமைத்து        

ஆ) பாதையமைத்து 

இ) பாதம் அமைத்து         

ஈ) பாதயமைத்து

விடை : ஆ) பாதையமைத்து 


5.  தோற்றம் - இச்சொல்லின் எதிர்ச்சொல் 

அ) தொடக்கம்     

ஆ) மறைவு        

இ) முதல்         

ஈ) ஆரம்பம்

விடை : ஆ) மறைவுவினாக்களுக்கு விடையளி

1. ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.

ஒகேனக்கல் நீழ்வீழ்ச்சி, தொங்குபாலம், பரிசல் சவாரி, மான்பூங்கா,   முதலைப் பண்ணை, தேசநாதீஸ்வரர் கோவில் போன்றவை பார்க்க வேண்டிய  இடங்கள்  ஆகும்.

 

2. ஒகேனக்கலில் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?

ஒகேனக்கலில் மலை நடுவே பாதையமைத்து அருவி நீர் ஓடும் காட்சி வெண்ணெய் உருகுவது போல தெரிந்தது. 


3. சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன?

ஒகேனக்கல்லுக்கு அருகே மிகப் பழைமையான தேசநாதீஸ்வரர் கோவில் உள்ளது. அது அதியமான் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கல்வெட்டைப்   பார்த்து தெரிந்துகொள்ளலாம். 


4. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது?

தருமபுரி மாவட்டத்தில் எழில் கொஞ்சும் மலையில் உள்ள ஒகேனக்கல் அருவி பொன்னகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது.


சரியான தொடரை எனவும் தவறான தொடரை X எனவும் குறியிடுக

1. ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. ( X )

2. அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத்     தோன்றும் ()

3. கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி  உயரத்தில்  உள்ளது. ()


அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக

1. எழில் - அழகு              

2. களிப்பு - மகிழ்ச்சி 

3. நீராடலம் - குளிக்கலாம்

4. பரவசம் - மகிழ்ச்சி


பொருத்தமான சொல்லால் நிரப்புக

1. கடற்கரையில் ________ (மனல் / மணல்) வீடு கட்டி விளையாடலாம். 

விடை : மணல்

2. மரத்தில் பழங்கள் ________ (குரைவாக / குறைவாக) உள்ளன. 

விடை : குறைவாக  

3. வலப்பக்க சுவரின் மேல் ________ (பல்லி / பள்ளி) இருக்கிறது. 

விடை : பல்லி

4. ஆதிரைக்கு நல்ல ________ (வேலை / வேளை) கிடைத்துள்ளது.

விடை : வேலைபடங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?


தேன் நீர் தேனீர்

கல் பாறை கற்பாறை

பூ சூரியன் சூரியகாந்திப்பூ

இடி ஆப்பம் இடியாப்பம்சிந்திக்கலாமாபடங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது? உன் கருத்துகளை வெளிப்படுத்துக. 

தூய்மையான காற்று மரம், செடி, கொடி சார்ந்த இயற்கையிலிருந்தே கிடைக்கிறது. 

• வீட்டில் மரங்களை வளர்க்க வேண்டும். 

• பூங்காக்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். 

• வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுநீர் நடுத்தெருவில் ஓடாமல் பார்க்க வேண்டும். 

• பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் நீர், காற்று மாசுபடக்கூடிய தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது. 

• மட்டுப்படுத்துதல், மறுபடி பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்ய வேண்டும். 

• தடுப்பணைகள் கட்டி நீரைச் சேமிக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு அமைப்பை எல்லா வீடுகளிலும் உருவாக்க வேண்டும்.


பருப்பு அடை பாரம்மா 

பதமாய் எடுத்து உண்ணம்மா 

இனிப்புப் பணியாரம் வேணுமா 

இங்கு வந்து பாரம்மா 

வெள்ளை நிற உப்புமா 

வேண்டும் மட்டும் தின்னும்மா 

கரக் முரக் முறுக்கையே 

கடித்துத் தின்னு நொறுக்கியே 

சுவை மிகுந்த கொழுக்கட்டை 

சூடாய் இருக்கு தட்டிலே! 

வெல்லம் தேங்காய் சேர்த்துமே 

வெண்ணெய் பிட்டும் ஈர்க்குமே!

பாடலிலிருந்து உணவுப் பொருள்களின் பெயர்களை எழுதுக.

பருப்பு அடை, பணியாரம், உப்புமா, முறுக்கு, கொழுக்கட்டை, வெல்லம், தேங்காய்,  வெண்ணெய், பிட்டு .  இன எழுத்துகள்

குழந்தைகளே! நண்பர்களோடு சேர்ந்திருப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்தானே! உங்களைப் போலத்தான் சில எழுத்துகளும் ஒன்றாகவே இருக்க விரும்புகின்றன. அவற்றை இனஎழுத்துகள் என அழைக்கின்றனர்.

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அன்பாகப் பேசுவது, ஒரே மாதிரியாக ஆடை அணிவது என்று சில பண்புகள் பொதுவாக இருப்பதைப்போல, இனஎழுத்துகளும் பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி, காலஅளவு, வடிவம் முதலியவற்றில் ஒத்துப்போகின்றன. சரி, எந்த எழுத்து எந்த எழுத்துக்கு இனமாக வரும்? தெரிந்து கொள்வோமா? 

உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகள் பன்னிரண்டு அல்லவா! அவற்றை உயிர்க்குறில், உயிர்நெடில் எனப்பிரித்துப் படித்திருப்பீர்கள். ஆகையால், உயிர்க்குறில் எழுத்துகளுக்கு உயிர்நெடில் எழுத்துகள் இனமாக வரும். எப்படி?


அ - ஆ

இ - ஈ

உ - ஊ

எ - ஏ

ஐ - ?

ஒ - ஓ

ஔ - ?

என்ன இது? ஐ என்ற எழுத்துக்கும் ஔ என்ற எழுத்துக்கும் இன எழுத்து எங்கே? கண்டுபிடிக்கலாமா? ஐ - இந்த எழுத்தை நன்றாக ஒலித்துப் பாருங்கள். இறுதியில் என்ன ஓசையில் முடிகிறது? இ தானே. அதுபோல, ஔ என்னும் எழுத்தையும் ஒலித்துப் பாருங்கள். எந்த எழுத்தின் ஓசையில் முடிகிறது? உ என்னும் எழுத்தின் ஓசையல்லவா! இப்போது எழுதிப் பார்க்கலாமா?


ஐ - இ

ஒள - உ


மெய்யெழுத்துகள்

மெய்யெழுத்துகளை நாம் ஏற்கெனவே பெயரிட்டு அழைத்தோமே, நினைவிருக்கிறதா? என்ன அது? வல்லினம், மெல்லினம், இடையினம்.

வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள்தாம் இனமாக வரும். கீழே இருப்பதைப் பாருங்கள்.


க் - ங் 

ச் - ஞ்

ட் - ண் 

த் - ந் 

ப் - ம்

ற் - ன்

ய், ர், ல், வ், ழ், ள், இவை ஆறு எழுத்துகளும் இடையினம். இவற்றிற்கு இன எழுத்துகள் இல்லை. ஓர் எழுத்திற்கு அருகில் அதே எழுத்து வந்தாலும் அவை இன எழுத்துகள் அல்ல (பக்கம், அச்சம்...)

இன எழுத்துகள் சேர்ந்தே வருவதைக் கண்டுபிடிக்கலாம் வாருங்கள். கீழே உள்ள படங்களைப் பார்த்து, அவற்றின் பெயர்களைச் சொல்லி, எழுதிப் பாருங்கள்.


உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்

மங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்.

இன எழுத்துகள்

விடுபட்ட இடங்களில் சரியான இனஎழுத்துகளை நிரப்பலாமா?

செம்பருத்தி

குன்று       

சுண்டல்     

தொங்கு பாலம்         

ஞ்சி             

ந்தை 


1. இன எழுத்துகள் என்றால் என்ன? 

தமிழ் எழுத்துகளில் சில எழுத்துகள் ஒன்றாக இருக்கும் அவற்றை இன எழுத்துகள் என அழைக்கிறோம். 


2. உயிர் எழுத்துகளின் இன எழுத்துகளை எழுதுக. 

உயிர் எழுத்துகள் பன்னிரண்டில் உயிர்க்குறில் எழுத்துகளுக்கு உயிர்நெடில்  எழுத்துகள்  இனமாகும்.

எ.கா: அ-ஆ,  இ-ஈ,  உ-ஊ,  எ-ஏ,  ஒ-ஓ 


3. உயிர் எழுத்துகளில் ஐ, ஔ  எழுத்துகளின்  இனஎழுத்துகள்  யாவை?

'ஐ' – க்கு இனஎழுத்தாக இ’யும், 'ஔ' - க்கு இனஎழுத்தாக 'உ' வும்      அமையும்.


4. மெய்யெழுத்துகளின் இன எழுத்துகள் யாவை?

மெய்யெழுத்துகளில் வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள்    தாம் இன எழுத்தாக வரும்.

எ.கா: க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன்.


5. இடையின மெய்யெழுத்துகளின் இன எழுத்துகள் யாவை?

ய், ர், ல், வ், ழ், ள் - ஆகிய ஆறும் இடையின மெய்யெழுத்துகள் அவற்றிற்கு இன எழுத்துகள் இல்லை.செயல்திட்டம்

உங்கள் வீட்டில் நீங்கள் காணும் பொருள்களுள் இன எழுத்துகள் இடம்பெற்ற சொற்கள் 20 எழுதி வருக.

1.  சங்கு         

2.  வெண்டை                        

3.  பஞ்சு                                   

4.  தங்கம் 

5.  நூற்கண்டு             

6.  நுங்கு                                  

7.  தண்டு             

8.  பந்தல் 

9.  மிதிவண்டி           

10.  இடியாப்பம்                    

11. செங்கல்                          

12. கம்பு


Tags : Term 2 Chapter 6 | 3rd Tamil பருவம் 2 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 Chapter 6 : Ezhil konjum aruvi : Ezhil konjum aruvi: Questions and Answers Term 2 Chapter 6 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி : எழில் கொஞ்சும் அருவி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி