பெருமூலங்களின்
செயல்பாடுகள், உள்ளெடுக்கப்பபடும் முறைகள் மற்றும் பற்றாக்குறை அறிகுறிகள்
இப்பகுதியில் பெருமூலங்களின் செயல்பாடுகள், உள்ளெடுக்கப்பபடும்
முறைகள் மற்றும் பற்றாக்குறை அறிகுறிகள் விவரிக்கப்பட்டுள்ளது.
1. நைட்ரஜன்
(N): மிக அதிக அளவில் தாவரங்களுக்குத் தேவைப்படும் தனிமம்,
புரதங்கள், நியுக்ளிக் அமிலங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், ஆல்கலாய்டுகள்,
பச்சையம் மற்றும் சைட்டோகுரோம் ஆகிய அனைத்தின் ஆக்கத்திற்கும் தேவைப்படுகிறது. இது
நைட்ரேட் (NO3) வடிவில் உள்ளெடுக்கப்படுகிறது.
குறைபாடு : பச்சைய சோகை, குன்றிய வளர்ச்சி, ஆந்தோசயனின் நிறமி
தோற்றம்.
2. பாஸ்பரஸ்
(P): செல் சவ்வு, புரதங்கள், நியுக்ளிக் அமிலங்கள், ATP,
NADP, பைட்டின் மற்றும் பாஸ்பேட் பெற்ற சர்க்கரை ஆகியவற்றில் காணப்படுகிறது. H2PO4+ மற்றும்
HPO4- அயனிகளாக உள்ளெடுக்கப்படுகிறது.
பற்றாக்குறை அறிகுறிகள்
: வளர்ச்சி குன்றுதல், ஆந்தோசயனின் நிறமிகள் தோன்றுதல்,
திசு நசிவு உருவாதல், கேம்பிய செயல்பாட்டின் ஒடுக்கம், வேர் வளர்ச்சி குன்றுதல், கனி
முதிர்வடைவதில் பாதிப்பு.
3. பொட்டாசியம்
(K): செல்லின் சவ்வூடுபரவல் திறன் மற்றும் விறைப்பழுத்தத்தை
கட்டுப்படுத்தி இலைத்துளை மூடி, திறக்க உதவுதல், புளோயத்தில் நடைபெறும் கடத்தல் செயல்,
நொதிகளின் செயல்பாடு மற்றும் அயனி பரிமாற்றம் மூலம் அயனி சமநிலையை உண்டாக்குதல் ஆகியவை
இதன் பணிகளாகும். K+ அயனிகளாக
உள்ளெடுக்கப்படுகிறது.
பற்றாக்குறை அறிகுறிகள்
: விளிம்பு பச்சைய சோகை, திசு நசிவு (Necrosis), கேம்பிய செயல்பாடு குறைதல், முனை
ஆதிக்கப் பாதிப்பு, தானியங்களில் நீரோட்ட தலைசாய்வு மற்றும் இலைவிளிம்பு சுருள்தல்.
4. கால்சியம் (Ca): செல்லின் இடையடுக்கில் உருவாகும் கால்சியம் பெக்டேட் உற்பத்திக்கு இது உதவுகிறது. மைட்டாடிக் பகுப்பின் போது கதிர்கோல் இழை உருவாகவும், மைட்டாடிக் செல்பிரிவு, செல் சவ்வின் ஊடுறுவு திறனை மேம்படுத்தவும், லிப்பிடு வளர்சிதை மாற்றத்திற்கும் இது மிக அவசியம். பாஸ்போலிப்பேஸ், எடிபியேஸ், அமைலேஸ் மற்றும் அடினைல் கைனேஸ் நொதிகளின் ஊக்குவிப்பானாக இது செயல்படுகிறது. Ca2+ அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.
பற்றாக்குறை அறிகுறிகள்
: பச்சையச் சோகை, திசு நசிவு, குன்றிய வளர்ச்சி, இலை
மற்றும் மலர்கள் உதிர்தல், விதை உருவாவதை தடை செய்தல், செலரியில் மையக் கருக்கல் நோய்
தோன்றுதல், சர்க்கரை வள்ளி கிழங்கு, வாழை மற்றும் தக்காளியின் இலை நுனி கொக்கி போல்
வளைதல்.
5. மெக்னீசியம்
(Mg): பச்சையம் நிறமியின் பகுதிக்கூறாக இது உள்ளது. கார்போஹைட்ரேட்
வளர்சிதை மாற்ற நொதிகளின் (RUBP கார்பாக்சிலேஸ்
மற்றும் PEP கார்பாக்சிலேஸ்) ஊக்குவிப்பானாக
உள்ளது. DNA மற்றும் RNA உருவாக்கத்தில் பயன்படுகிறது. ரைபோசோம்
துணை அலகுகள் இணைப்பிற்குத் தேவைப்படுகிறது. Mg2+
அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.
பற்றாக்குறை அறிகுறிகள்
: நரம்பிடைப் பச்சையச் சோகை, திசு நசிவு ஆந்தோசயனின்
நிறமிகளின் உருவாக்கம், புகையிலையில் மண் மிகை நீர் ஓட்ட நோய்.
6. சல்பர் (S): சிஸ்டைன், சிஸ்டீன்
மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்களின் அமைப்புக் கூறாகச் சல்பர் உள்ளது. துணைநொதி
A, வைட்டமின்கள் பயோடின், தையமின், புரதம் மற்றும் பெரடாக்சின் ஆகியவற்றின் பகுதிக்
கூறாக இது உள்ளது. தாவரங்கள் சல்ஃபரை, சல்பேட் (SO4) அயனியாக உள்ளெடுக்கின்றன.
பற்றாக்குறை அறிகுறிகள்
: பச்சைய சோகை, ஆந்தோசயனின் நிறமி உருவாக்கம், குன்றிய
வளர்ச்சி, இலைநுனி சுருளுதல் மற்றும் லெகூம் தாவரங்களில் குறைவான வேர்முடிச்சுகள் உருவாதல்.
உங்களுக்குத் தெரியுமா?
NPK உரங்கள்: நைட்ரஜன் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் பல விகிதங்களில் கலந்து தயாரிக்கப்படுகிறது. பையின் மீது காணப்படும் 15-15-15 என்பது அதன் விகிதத்தைக் குறிப்பிடுகிறது.