தாவரவியல் - நீர் ஊடக வளர்ப்பு மற்றும் காற்றூடக வளர்ப்பு | 11th Botany : Chapter 12 : Mineral Nutrition
நீர் ஊடக வளர்ப்பு மற்றும் காற்றூடக வளர்ப்பு
கனிம ஊட்டகரைசலில் தாவரங்களை வளர்க்கும் முறையினை வான்
சாக்ஸ் உருவாக்கினார். இதற்குறிய கனிம ஊட்டச் சத்து கரைசல்கள் முறையே நாப்ஸ் கரைசல்
(1865), ஆர்னான் மற்றும் ஹாக்லேண்டு கரைசல் ஆகியவை ஆகும்.
கோயெரிக் (1940) என்பவர் ஹைட்ரோபோனிக்ஸ் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். வணிக ரீதியான ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பங்களை உருவாக்கியவரும் இவரே. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில், தாவரத்தின் வேர்களைக் கனிமங்கள் கரைந்துள்ள ஊட்டச்சத்து திரவத்தில் முழுவதும் மூழ்கிய நிலையில் வைத்து வளர்க்கப்படுகிறது. தேவையான காற்று குழாயின் மூலம் செலுத்தப்படுகிறது. (படம் 12.3)
இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்கள் சோஃபர் ஹில்லல்
மற்றும் டேவிட் டர்ஜர். இம்முறையில் வேரானது ஊட்டச்சத்து திரவத்திற்கு மேலே காற்றில்
மிதந்தபடி இருக்குமாறு தாவரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் ஊட்டச்சத்து திரவம்
சுழலும் மோட்டாரின் உதவியோடு வேர்கள் மீது தெளிக்கப்படுகிறது. (படம் 12.4)