அறிமுகம் | புவியியல் - நீர்க்கோளம் | 11th Geography : Chapter 5 : Hydrosphere
நீர்க்கோளம்
அத்தியாயக் கட்டகம்
5.1 அறிமுகம்
5.2 நிலம் மற்றும் நீரின் பரவல்
5.3 நன்னீர்
5.4 பனிக்கோளம்
5.5 பெருங்கடல்களும் கடல்களும்
5.6 உலகின் பெருங்கடல்கள்
5.7 கடல்சார் மண்டலம்
5.8 கடலடி நிலத்தோற்றங்கள்
5.9 பெருங்கடல் வெப்பநிலை
5.10 கடல் நீரின் உவர்ப்பியம்
5.11 பெருங்கடல் இயக்கங்கள்
அறிமுகம்
"நீர் இன்று அமையாது உலகெனின்
யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு"
உலகில் நீர் இல்லாமல் வாழ
முடியாது. மழையில்லாமல் இருந்தால் புவியில் ஒழுக்கம் இருக்காது என்று திருக்குறள்
கூறுவது போல உலகில் தண்ணீர் மிக முக்கியமான வளமாகும்.
கற்றல் நோக்கங்கள்
• நீர்க்கோளத்தின் முக்கியத்துவத்தை அறிந்து
கொள்ளுதல்
• பெருங்கடல்கள் மற்றும் கடலடி நிலத்தோற்றங்களின்
பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறிவது.
• பெருங்கடல்களின் அசைவுகளையும் காலநிலை மீதான
அவற்றின் தாக்கத்தை பற்றியும் அறிந்து போற்றுதல்.
உலகில்
90% நீர் அண்டார்டிக்காவில் நன்னீர் பெட்டகமாக
உள்ளது. உலகின் 85% மக்கள் புவியின் பாதிக்கு
மேற்பட்ட மிக வறட்சியான பகுதியில் வசிக்கின்றனர் என்பதை நீங்கள் அறியவேண்டும்.
இப்பொழுது நாம் நீர்க்கோளத்தைப் பற்றி விரிவாக கற்போம்.
நீர் என்பது புவியில்
காணப்படும் பொதுவான பொருளாகும். புவியில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் நீர் ஒரு
முக்கிய அங்கமாகும். நீர்க்கோளம் என்பது புவியின் நான்கு கோளங்களில் ஒன்றாகும்.
நீர்க்கோளம் என்பது புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீர், நிலத்தடி நீர்,
வளிமண்டலத்தில்
காணப்படும் நீர் ஆகியவைகளைக் கொண்டதாகும்.
நிலத்தடி
நீராக ஒரு கணிசமான அளவு நீர் காணப்படுகிறது.
வளிமண்டலத்தில்
நீர் மூன்று நிலைகளில் (திட, திரவ மற்றும் வாயு ) காணப்படுகிறது.
நீர்க்கோளம் தொடர்ந்து இயக்கத்தில் உள்ளதால் நீரின் மொத்த அளவு காலப்போக்கில்
மாறாது. புவிக்கோளத்திலேயே அதன் நிலை மாற்றப்பட்டு மீண்டும் மீண்டும்
பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு நீர்க்கோளம் தன்னிறைவு அமைப்பாக (closed
system) செயல்பட்டு வருகிறது.