கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தினை கற்போர்
• செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பின்
பல நிலைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
• மரபு ஒத்த செல்களை உருவாக்குவதில்
மைட்டாசிஸ்சின் முக்கியத்துவத்தைக் கண்டுணர்தல்.
• மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ்சின் முக்கியத்துவத்தைத்
தெரிந்து கொள்ளுதல்.
• தாவர மற்றும் விலங்கு செல்களின் மியாசிஸ்/குன்றல்
பகுப்பின் போது குரோமோசோம்களின் செயல்பாடுகளை அறியச் செய்தல்.
உங்களுக்குத் தெரியுமா?
நரம்பு
செல்களை (Neurons) மாற்றீடு செய்ய முடியும்!
மனித
மூளையின் ஸ்டெம் செல்கள் - பெரும்பாலான
நரம்பு செல்கள் G, நிலையில் காணப்படுகின்றன. அவை பகுப்படைவதில்லை. நரம்பு செல்கள் மற்றும்
நியூரோகிளியா (Neuroglia) இறக்கும்போது அல்லது சேதம் ஏற்படும்போது இவை நியூரல் ஸ்டெம்
செல்களால் மாற்றீடுசெய்யப்படுகின்றன.
பாட
உள்ளடக்கம்
7.1 உட்கருவின்
பகுப்பு
7.2 செல் சுழற்சி
7.3 செல் பகுப்பு
7.4 மைட்டாசிஸ்
மற்றும் மியாசிஸ் இடையே உள்ள வேறுபாடு
உயிருள்ள செல்களின் முக்கியப் பண்பானது அது வளர்ச்சியடைந்து பகுப்படைவதாகும். புதிய செல்கள் ஏற்கனவே இருக்கும் செல்களிலிருந்து பகுப்படைவதால் தோன்றுகின்றன. செல் பகுப்பு மூலம் செல் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. பெற்றோர் செல் பகுப்படைந்து அதன் மரபுப் பொருட்களை சேய் செல்களுக்கு கடத்துகின்றன.
எட்வர்ட் வான் பெனிடென் என்பவர் பெல்ஜியத்தின் செல்லியலாளர்,
கருவியலாளர் மற்றும் கடல் சார்ந்த உயிரியலாளர். அவர் லீகி பல்கலைகழகத்தில் விலங்கியல்
பேராசிரியராக இருந்த பொழுது அஸ்காரிஸ் என்ற உருளை புழுவில் செய்த ஆய்வுகளின் மூலம்
செல் மரபியலில் கருத்துகளை வெளியிட்டார். குரோமோசோம்கள் குன்றல் பகுப்பில் எவ்வாறு
அமைகின்றன என்பதைக் கண்டறிந்து விளக்கினார். (கேமிட்டுகளின் உற்பத்தி)
உட்கரு பகுப்பு
உட்கரு பகுப்பில் மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் என இரு வகைகள் உள்ளன. மைட்டாசிஸ்சின் போது தோன்றிய சேய் செல்களின் குரோமோசோம்
எண்ணிக்கை பெற்றோர் செல்லை போன்றே அமைந்துள்ளது. இந்நிலைக்கு இரட்டை மடிய (2n) நிலை என்று பெயர். செல் வளர்ச்சியடையும் போது அல்லது
பாலிலா இனப்பெருக்கத்தில் புதிய செல்களின் ஆக்கத்தின் போது மைட்டாசிஸ் பகுப்பு நடைபெறுகிறது.
மியாசிஸ் (குன்றல் பகுப்பு) பகுப்பில் தோன்றும் சேய்
செல்களில் தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி எண்ணிக்கை காணப்படுகிறது.
இந்நிலைக்கு ஒற்றை மடிய (n) நிலை என்று
பெயர்.
எந்த ஒரு உட்கரு பகுப்பு நடைபெற்றாலும் அதனை தொடர்ந்து
சைட்டோபிளாசம் பகுப்படைந்த பின்னரே தனி செல்களை (சேய் செல்கள்) உண்டாக்க முடியும்.
இதற்கு சைட்டோபிளாச பகுப்பு (Cytokinesis) என்று பெயர்.
செல்லின்
வரலாறு