செல் சுழற்சி - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 7 : Cell Cycle
11 வது தாவரவியல் : அலகு 7
செல் சுழற்சி
11. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும்
மூன்றினை எழுதுக.
i. நிலைத்த மரபுத்தன்மை
செய்
செல்களின் மரபுப் பொருளானது, தாய் செல்லை
ஒத்துக்காணப்படுகிறது
ii. வளர்ச்சி
பல
செல் உயிரிகள் உரு வளர்ச்சி அடையும் போது அவற்றின் திசுக்களில் செல் பெருக்கமடைய உதவுகிறது.
இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே உள்ளன.
iii. திசு சிதைவதை சீர் செய்தல்
திசு
சிதைவடையும் போது, புதிய உருவொத்த செல்கள்
மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் உருவாகிய சிதைவு சரி செய்யப்படுகிறது.
12. மறைமுக செல்பகுப்பை - நேர்முக செல் பகுப்பிலிருந்து
வேறுபடுத்துக.
ஏமைட்டாசிஸ் (அ) நேர்முகதொகுப்பு)
* இது மிக எளிமையானது
* குரோமாட்டின் பொருள் செறிவுற்று
* குரோமோசோம்கள் உருப்பெறுவதில்லை
* காரியோபைனசிஸ், சைட்டோகைனசிஸ் என இரு நிலைகள் உள்ளன. துணைப்பிரிவுகள் இல்லை
* தாய்- சேய் செல்களில் குரோமோசோம் எண்ணிக்கை
மாறுவதில்லை
எ.கா: பாக்டீரியா
மைட்டாசிஸ் மறைமுகதொகுப்பு
* இது மிக எளிமையானதல்ல
* பல நிலைகளை உடையது
* குரோட்டின் தெளிவான குரோசோம்களாக உருப்பெறுகிறது.
* காரியோகைனசிஸ்
புரோநிலை,
மெட்டாநிலை, அனாநிலை, டெலோநிலை
என நான்கு துணைப்பிரிவுகள் கொண்டுள்ளது. அதைத்தொடந்து சைட்டோகைனசிஸ்
நடைபெறும்.
* தாய்- சேய் செல்களில் குரோமோசோம் எண்ணிக்கை
மாறுவதில்லை
எ.கா: உயர் தாவரங்கள் உடல் செல்கள்.
13. G0 நிலை பற்றி குறிப்புத் தருக.
செல்பகுப்பின்
அதிகக் காலம் கொண்ட நிலை
இடைகால நிலை
இது
பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது
1. G1
- நிலை
2. S –
நிலை
3. G2
– நிலை
G0 நிலை :
G0
நிலையிலுள்ள சில செல்கள் அந்த நிலையிலிருந்து - அமைதி நிலை
எனப்படும்
G0
- நிலை (quiescent stage) செல்கின்றன
செல்கள்
வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடுகின்றன ஆனால் செல்கள் பெருக்கம் அடைவதில்லை
RNA உருவாக்கம் மற்றும் புரதச்சேர்ககை குறைந்த அளவு நடைபெறுகின்றன.
நிலையற்ற நிலை எனப்படுகிறது
உகந்த செல் சாரா சமிக்ஞை + வளர்ச்சி காரணிகள்
இருந்தால்
மட்டுமே G0
நிலையிலிருந்து பெருக்கமடையும் நிலைக்கு பெரும்பாலான
விலங்கு
செல்கள் செல்ல இயலும்.
இல்லையென்றால்
சிலசெல்கள் G0 நிலையிலேயே நின்றுவிடும்.
எ.கா முதிர்ந்த நியூரான், எலும்புத்தனை
செல்கள்.
இந்த
பண்பினால் உயிரியல் பல்வேறு செயற்கை குளோனிங் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் G0
நிலையிலுள்ள செல்கள் வளர்வடக்க நிலையிலுள்ள செல்களாகக் ஒரு
போதும் கருதப்படுவதில்லை
14. தாவர செல்களிலும், விலங்கு
செல்களிலும் சைட்டோகைனசிஸ் வேறுபடுத்துக.
சைட்டோகைனசிஸ் (விலங்கு செல்கள்)
* பிளாஸ்மா சவ்வு சுருங்குவதால் ஏற்படுகிறது.
* பிளாஸ்மாசவ்வினால் ஏற்படும் சுருங்கு வளையம்
ஆக்டின் மையோசின் சேர்ந்த நுண் இழைகளாலானது.
* ஒரு விசை தோன்றி, இந்த இழைகளை உள்நோக்கிச் சுருங்க உதவுகிறது.
* இவ்வாறு சைட்டோபிளாசம் சவ்வினால் இரு சம அளவாகப் பிரிக்கப்படுகிறது.
சைட்டோகைனசிஸ் (தாவர செல்கள்)
* செல்தட்டு மையத்திலிருந்து வெளிநோக்கி நகர்ந்து
பக்கவாட்டில் செல் சுவரை அடைகிறது.
* கோல்கை உறுப்புகள் & எண்டோபிளாசவலை இணைந்து நுண்ணிழைகள் ஆக்டின் இழைகள் வெசிக்கிகள் உருவாக்குகிறது.
* கோல்கை உறுப்புக்கள்
- பெக்டின் ஹெமிசெல்லுலோஸ் இவற்றைக் கொண்டுள்ளது
* பிராக்மோ பிளாஸ்டின்
நுண்ணிழைகளும், பெக்டின் ஹெமிசெல்லுலோஸ் இவை அனைத்தும்
நகர்ந்து மையப்பகுதியில் இணைந்து புதிய பிளாஸ்மா சவ்வை செல்களுக்கிடையே
உருவாக்குகின்றன. அதோடு புதிதாக தோன்றும் செல் தட்டு விரிவடைந்து மைய தட்டு
(middle lamella) உருவாகிறது. அதன் இருபுறமும் செல்லுலோஸ்
படிந்து செல்சுவர் உருவாகிறது.
5. புரோநிலை I ல் பாக்கிடீன்
மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.
புரோநிலை
I
- நீண்ட கால அளவு கொண்டுள்ளது. இது 5
துணைநிலைகளைக் கொண்டுள்ளது
புரோநிலை
I
1. லெப்டோடீன்
2. சைக்கோட்டீன்
3. பாக்கிடீன்
4. டிப்ளோடீன்
5. டயாகைன்சிஸ்
இதில் பாக்கிடீன், டிப்ளோடீன் இவை மிக மிக முக்கியமானவை.
q பாக்கிடீன் நிலை
குரோமோசோம்கள்
- பைவாலண்ட் (அ) நான்கமை நிலை தெளிவாகப் புலப்படுகிறது.
ஒவ்வொரு
பைவாலண்ட் 4 குரோமாட்டிட்களையும் 2 சென்டிரோமியர்களையும்
கொண்டு காணப்படும்.
ஒத்திசையான குரோமோசோமின் (Homologous) சகோதரி அல்லாத குரோமாட்டிட்கள் – குறுக்கெதிர் மாற்றம் மீள் சேர்க்கைக்கு உதவும் இலக்குகள் தோன்றுகிறது.
மீள்சேர்க்கை
முடிவுற்று குறுக்கெதிர் மாற்றம் நடந்த
பகுதியில் குரோமோசோம்கள்
இணைந்துள்ள
நிலை ஏற்படுகிறது
ரிகாம்பினேஸ் என்ற நொதி மீள் சேர்க்கைக்கு உதவுகிறது
டிப்லோட்டீன் பாக்கிடீனைத் தொடரும் நிலை
சினாட்டிமல் - தொகுப்பு கலைந்து கரைகிறது
குறுக்கெதிர் மாற்றம் நடந்து ஒன்று (அ) பல புள்ளிகளில்
ஒத்திசைவு குரேமோசோம்கள் பிணைந்த நிலையிலேயே உள்ளன. இதற்கு X வடிவ கயாஸ்மாக்கள்
என்று பெயர்
கயாஸ்மாக்களில்
தான் மீள் சேர்க்கை நடைபெறுகிறது
சில
உயிரினங்களின் - இந்த நிலையின் கால அளவு அதன் பால் தன்மைக்கேற்ப (சில நாட்கள் முதல்
சில வருடங்கள் வரை) மாறுபடும்.
பெண்
கேமீட்டான முட்டையில் கருவளர்ச்சிக்காள ஊட்டப் பொருட்கள் சேமித்து
வைக்கப்பட்டுள்ளது எனவே குரோமோசோம்களில் படியெடுத்தல் அதிவேகமாக நடைபெறுகிறது.
(அவ்வாறு அசாதாரமாண படியெடுத்தலாலே விளக்கு துாரிகை குரோமோசோம் உருவாகிறது)