பைத்தான் - கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் - அறிமுகம் | 12th Computer Science : Chapter 6 : Core Python : Control Structures
அலகு II
பாடம் 6
கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்
கற்றலின் நோக்கங்கள்
இந்தப்
பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர்கள் அறிந்துக் கொள்வது:
•
பைத்தான் மொழியில் பல்வேறு பாய்வுக்கட்டுப்பாடுகளைப் பற்றிய அறிவைப் பெறுதல்.
•
நிபந்தனை அமைப்பை பயன்படுத்தி நிரலின் பாய்வு செயல் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை
கட்டளை அமைப்பு மூலம் அறிதல்.
• பன்முறை செயல் அமைப்பை அல்லது மடக்கை பயன்படுத்தி நிரல் பகுதியை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை அல்லது நிபந்தனை நிறைவேற்றப்படும் வரை திரும்ப செய்யும் குறிமுறையை உருவாக்குதல்.
அறிமுகம்
நிரல்கள் கூற்றுகளின் தொகுதியை கொண்டிருக்கும். இந்த கூற்றுகளே
விடைகளைக் கொடுக்கும் இயக்கப் பகுதிகளாகும். பொதுவாக, கூற்றுகள் வரிசையாக, அதாவது கூற்றுகள்
ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். ஏதேனும் சில சமயங்களில் நிகழ் நேர நிரல்களை இயக்கும்
போது நிரலின் ஒரு பகுதியை அல்லது கூற்றுகளின் தொகுதியை நிறைவேற்றாமல் விட்டு விட்டு
நிபந்தனையின் அடிப்படையில் நிரலின் மற்றொரு பகுதியை இயக்க நேரிடும். இதற்கு “மாற்று”
அல்லது "கிளைப்பிரிப்பு” என்று பெயர். மேலும், கூற்றுகளிள் உள்ள ஒரு தொகுதியை
பல தடவை நிறைவேற்றவேண்டி இருக்கும். இதற்கு பன்முறைசெயல் அல்லது மடக்கு என்று பெயர்.
இந்தப் பாடப் பகுதியில் பைத்தானில் பல்வேறு கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் அதன் கட்டளை
அமைப்புகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தி நிரல்கள் உருவாக்குதல் மற்றும் கற்றல் ஆகியவற்றைக்
காண்போம்.