Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்
   Posted On :  18.12.2022 07:40 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 6 : Core பைத்தான் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்

கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

சிறந்த பதிலைத் தேர்ந்தெடுங்கள்,சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

கணினி அறிவியல் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்

மதிப்பீடு


பகுதி – அ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (1 மதிப்பெண்)


1. பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன?

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

விடை : அ) 3

 

2. elif என்பதன் விரிவாக்கம்

அ) nested if

ஆ) if..else

இ) else if

ஈ) if..elif

விடை : இ) else if

 

3. பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

அ) கூற்றுகள்

ஆ) கட்டுப்பாடு

இ) அமைப்பு

ஈ) உள்தள்ளல்

விடை: ஈ) உள்தள்ளல்

 

4. எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

அ) continue

ஆ) break

இ) pass

ஈ) goto

விடை : இ) pass

 

5. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

அ) கணித அல்லது ஒப்பீட்டுக் கோவைகள்

ஆ) கணித அல்லது தருக்கக் கோவைகள்

இ) ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

ஈ) கணித கோவைகள்

விடை: இ) ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

 

6. எது மிகவும் சுலபமான மடக்கு எது?

அ) do..while

ஆ) while

இ) for

ஈ) if..elif

விடை : இ) for

 

7. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?

i=1

while True:

if i%3 ==0:

break

print(i,end=")

i+=1

அ) 12

ஆ) 123

இ) 1234

ஈ) 124

விடை : அ) 12

 

8. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?

T=1

while T:

print(True)

break

அ) தவறு

ஆ) சரி

இ) 0

ஈ) வெளியீடு இல்லை

விடை : ஆ) சரி

 

9. பின்வருவனவற்றில் எது jump கூற்று கிடையாது?

அ) for

ஆ) goto

இ) continue

ஈ) break

விடை : அ) for

 

10. எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?

if <condition>

statements-block 1

else:

statements-block 2

அ) ;

ஆ) :

இ) ::

ஈ) !

விடை : ஆ) :

 

 

பகுதி - ஆ

பின்வரும் வினாக்களுக்கு விடையளி (2 மதிப்வபாண்கள்)


1. பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.

விடை. (i) Sequential - வரிசைமுறை கூற்றுகள்

(ii) Alternative or Branching – மாற்று அல்லது கிளைப் பிரிப்பு கூற்று

(iii) Iterative or Looping - பன்முறைச் செயல் அல்லது மடக்கு அமைப்பு

 

2. break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.

விடை. (i) break கூற்றானது அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது. நிரலின் கட்டுப்பாடானது, மடக்கின் உடற்பகுதியைத் தொடர்ந்து உடனடியாக இருக்கும் கூற்றுக்கு பாய்கிறது.

(ii) நிபந்தனையானது தவறு என்று பரிசோதிக்கும் வரை while அல்லது for மடக்கு செயல்படுத்தப்படும். ஆனால், break கூற்றைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டை மடக்கை விட்டு நிறுத்தி வெளியேறச் செய்யமுடியும்.

(iii) break கூற்று பின்னலான மடக்கின் உள்ளே இருந்தால், break கூற்று மிகவும் உள்ளே உள்ள மடக்கை விட்டு வெளியேறும்.

 

3. if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக.

விடை. தொடரியல் :

if <condition>:

statements-block 1

else :

statements-block 2

 

4. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

விடை. கட்டுப்பாட்டு நிரலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தாவுவதற்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாட்டு கட்டமைப்பு அல்லது கட்டுப்பாட்டு கூற்றுகள் எனப்படும்.

 

5. range() செயற்கூறு குறிப்பு வரைக.

விடை. range() செயற்கூறு start முதல் stop-1 வரையிலான மதிப்பு பட்டியலை உருவாக்குகிறது.

range ()ன் தொடரியல்:

range(start,stop,[step])

இதில்,

start - தொடக்க மதிப்பைக் குறிக்கும்

stop - இறுதி மதிப்பைக் குறிக்கும்

step - மிகுப்பு மதிப்பைக் குறிக்கும். இது விருப்பப் பகுதியாகும்.



பகுதி-இ

பின்வரும் வினாக்களுக்கு விடையளி (3 மதிப்பெண்கள்)

 

1. பின்வரும் வெளியீட்டைப் பெற நிரலை எழுதுக.

A

A B

ABC

ABCD

ABCDE

விடை , inti:=1

while (i<=6):

for j in range (1, i, i):

print ("A", end='/t')

for j in range (2, 1, i) :

print ("B", end ='/t')

for j in range (3,i,i) : -

print ("C"', end='/t')

for j in range (4, i, i) :

print ("D", end='/t')

for j in range (5,1,i) :

print ("E", end = '/t')

print (end='/n')

i=i+1

 

2. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

விடை. if..else கூற்றானது சரி தொகுதி மற்றும் தவறு தொகுதி இரண்டையுமே சரிபார்ப்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது. 'if..else' கூற்றின் தொடரியல்.

தொடரியல் :

if<condition>:

statements-block 1

else:

statements-block 2


3. if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக.

விடை. a = int (input ("Enter Number 1"))

b = int (input ("Enter Number 2"))

c= int (input ("Enter Number 3"))

if a>b and a>c :

print ("A is greatest")

elif b>a and b>c :

print ("B is greatest")

else:

print ("C is greatest")

 

4. while மடக்கின் பொதுவடிவம் யாது?

விடை. தொடரியல்:

while <condition>:

statements block 1

[else:

statements block2]

 

5. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடு யாது?

விடை: (i) break கூற்றானது அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது. நிரலின் கட்டுப்பாடானது, மடக்கின் உடற்பகுதியைத் தொடர்ந்து உடனடியாக இருக்கும் கூற்றுக்கு பாய்கிறது.

(ii) continue கூற்றானது break கூற்றைப் போல் இல்லாமல், மடக்கின் மீதமுள்ள குறிமுறையைத் தவிர்த்து அடுத்த மடக்கு செயலை ஆரம்பிக்கும்.



பகுதி - ஈ

பின்வரும் வினாக்களுக்கு விடையளி (5 மதிப்பெண்கள்)


1. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

விடை. (i) for மடக்கு சுலபமாக பயன்படுத்தக் கூடிய ஓர் மடக்காகும். இது ஒரு நுழைவு சோதிப்பு மடக்காகும். நிபந்தனை முதலிலேயே சோதிக்கப்பட்டு சரி எனில் மடக்கின் உடற்பகுதி செயல்பாட்டுத் தொகுதியை நிறைவேற்றப்படும். இல்லையெனில் மடக்கு நிறைவேறாமல் வெளியேறும்.

தொடரியல் :

for counter_variable in sequence:

statements-block 1

[else:  # optional block

statements-block 2

(ii) தொடரியலில் குறிப்பிட்டுள்ள தொடரியல் மாறியானது (counter_variable), C++-ல் உள்ள for மடக்கில் பயன்படுத்தும் கட்டுப்பாட்டு மாறியை ஒத்ததாகும். வரிசை என்பது தொடக்க, இறுதி மற்றும் மிகுப்பு மதிப்புகளைக் குறிப்பதாகும். 

(iii) பொதுவாக, பைத்தானில் for மடக்கில் வரிசையில் உள்ள தொடக்க, இறுதி, மதிப்புகளைக் குறிப்பதற்காக range() செயற்கூறு பயன்படுகிறது. range() செயற்கூறு start முதல் stop-1 வரையிலான மதிப்பு பட்டியலை உருவாக்குகிறது.

range ()ன் தொடரியல்:

range(start,stop,[step])

இதில்,

start - தொடக்க மதிப்பைக் குறிக்கும்

stop - இறுதி மதிப்பைக் குறிக்கும்

step - மிகுப்பு மதிப்பைக் குறிக்கும். இது விருப்பப் பகுதியாகும்.

எடுத்துக்காட்டு :

for மடக்கின் செயல்பாடு

எடுத்துக்காட்டு : #for மடக்கு பயன்படுத்தி ஒற்றை இலக்க இரட்டைப் படை எண்ணை அச்சிட விளக்கும் நிரல்  

for i in range (2,10,2) :

print (i, end =' ')

வெளியீடு :

2 4 6 8

 

22. if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை. பின்னலான if..else..elif கூற்று :

if கூற்றுகளைத் தொடர் கூற்றுகளாக அமைக்க விரும்பும் போது else' பகுதிக்குப் பதிலாக 'elif பகுதி பயன்படுத்தலாம்.

தொடரியல் :

if<condition-1>:

statements-block 1

elif<condition-2>:

statements-block 2

else:

statements-block n

மேற்கண்ட if..elif..else பொதுவடிவத்தில், condition-1 பரிசோதிக்கப்படும். condition -1 சரி எனில் statements-block 1 செயல்பாட்டு condition-1 நிறைவேற்றப்படும். இல்லையெனில் கட்டுப்பாடு, condition-2யைப் பரிசோதிக்கும். condition-2 சரி எனில் (statements-block-2) நிறைவேற்றப்படும். இல்லையெனில் else பகுதியில் உள்ள (statements-block n) நிறைவேற்றப்படும்.


if.elif..else கூற்றின் செயல்பாடு

'elif’ பகுதி if..else-if..else கூற்றுகளை இணைக்கு ஒன்றிணைத்து ஒரே if..elif...else...... 'elif’ ன் விரிவாக்கம் else if. if கூற்றில் பயன்படுத்தப்படும் 'elif பகுதிக்கு வரம்பு இல்லை , ஆனால் else பகுதி பயன்படுத்தும்போது கூற்றின் இறுதியில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு :

கீழே கொடுக்கப்பட்ட நிபந்தனையின் படி மாணவர்கள் பெற்ற தர வரிசையை அச்சிட வேண்டிய நிரல்

சராசரி          தரம்

>=80 and above   A

>=70 and <80     B

>=60 and<70      C

>=50 and<60      D

Otherwise         E

# பின்னலான if கூற்றின் பயன்பாட்டை விளக்கும் நிரல்

ml=int (input("Enter mark in first subject:"'))

m2=int (input("Enter mark in second subject :"))

avg= (ml+m2)/2

if avg>=80:

print (Grade : A)

elif avg>=70 and avg <80:

print ("Grade : B")

elif avg>=60 and avg<70:

print ("Grade : C")

elif avg>=50 and avg<60:

print ("Grade : D")

else:

print ("Grade : E")

வெளியீடு 1:

Enter mark in first subject : 34

Enter mark in second subiect : 78

Grade : D

வெளியீடு 2:

Enter mark in first subject : 67

Enter mark in second subject : 73

Grade : B

 

3. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

விடை . for i in range (101, 1001, 2) :

print (i, end = '/t')

else :

print ("/n End of the loop")

 

4. கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை வெளியிடும் நிரலை எழுதுக.

விடை . i =1

a = int (input ("Enter the first number :"))

b= int (input ("Enter the second number :"))

while (i<= 10) :

c=a* b

print (a, "*", b, "=", c, end = ' ') .

print (end='/n')

i=i+1

b=b+1


செய்முறைப் பயிற்சி

1. கொடுக்கப்பட்ட எழுத்து 'உயிரெழுத்தா இல்லையா' என கண்டறியும் நிரலை எழுதுக.

விடை . ch = input ("Enter a character")

if ch in ('a', 'A', 'e', 'E', 'i', 'T','o','O','u', 'U'):

print (ch, 'is a vowel')

              

2. if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் மிகச் சிறிய எண்ணை கண்டறியும் நிரலை எழுதுக.

விடை . a = in + (input ("Enter number 1")

b =in + (input("Enter number 2")

c= in + (input ("Enter number 3")

if a<b and a<c:

print ("a is smallest")

elif b<a and b<c:

print ("b is smallest")

else

print ("c is smallest")

 

3. கொடுக்கப்பட்ட எண் நேர்மறை எண்ணா அல்லது எதிர்மறை எண்ணா அல்லது பூஜ்யமா எனக் கண்டறியும் நிரலை எழுதுக.

விடை . x = in + (input("Enter a number")

if x>0:

'print (x, "is a positive number")

elif x.<0:

print (x, "is a negative number")

else

print (x, "is zero")

 

4. கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா எனக் கண்டறியும் நிரலை எழுதுக.

விடை . y = int (input ("Enter the year"))

If y% 400== 0 or y% 4== 0 or y%100==0:

print ("The given year is a leap year")

else:  

print ("The given number is not a leap year")

 

5. பைபோனாசி தொடரை (0 1 1 2 3 4 5 ........n) வரை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

விடை . a, b, c= 0, 1,0 -

n = in + (input("Enter number of terms"))

print (a, end=")

print (b, end =")

for I in range (3, n+1):

c= a+b

print (c, end=")

a=b

b=c

 

6. n வரையிலான இயல் எண்களின் கூட்டுத் தொகையை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

விடை . S =0

n= in + (input("Enter number of terms"))

for i in range (1, n + 1)

S = s +i

print ("sum='', s)

 

7. கொடுக்கப்பட்ட எண் பாலின் ரோமா இல்லையா என்பதை சரிபார்க்கும் நிரலை எழுதுக.

விடை . n = int (input("Enter the number"))

s, d, x = 0, 0, n

while (n! = 0):

d=n%10

s= (s* 10)+d

n = n//10

if s==x:

print ("The given number is palindrome" else: - .

print("The given number is not palindrome")

 

8. பின்வரும் அமைப்பை அச்சிடுவதற்கான நிரலை எழுதுக.

* *  * * *

* * * *

* * *

* *

*

விடை . for i in range (5, 0, -1):

for j in range (1, i + 1):

print ('*', end=")

print (end='\n'))

i+=1

12th Computer Science : Chapter 6 : Core Python : Control Structures : Python Control Structures: Book Back Questions and Answers in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 6 : Core பைத்தான் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 6 : Core பைத்தான் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்