பைத்தான் - பைத்தான் மையக் கருத்துருக்கள் பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators
கணினி அறிவியல் : பைத்தான் மையக் கருத்துருக்கள் பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள்
மதிப்பீடு
பகுதி – அ
சரியான விடையைத்
தேர்ந்தெடுக்கவும் (1 மதிப்பெண்)
1. பைத்தானை உருவாக்கியவர் யார்?
அ)
ரிட்ஸீ
ஆ)
கைடோ வான் ரோஷம்
இ)
பில் கேட்ஸ்
ஈ)
சுந்தர் பிச்சை
விடை: ஆ) கைடோ வான்
ரோஷம்
2. இவற்றுள் எந்த தூண்டு குறி
நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?
அ)
>>>
ஆ)
<<<
இ)
#
ஈ)
<<
விடை : அ)
>>>
3. பின்வரும் எந்த சாவி சேர்மானம்
ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.
அ)
Ctrl+C
ஆ)
Ctrl +F
இ)
Ctrl+B
ஈ)
Ctrl+N
விடை: ஈ)
Ctrl+N
4. பின்வரும் எந்த குறியுரு பைத்தான்
நிரலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?
அ)
#
ஆ)
&
இ)
@
ஈ)
$
விடை: அ) #
5. எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட
உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்
அ)
அரைப்புள்ளி
ஆ)
டாலர்
இ)
காற்புள்ளி
ஈ)
முக்காற்புள்ளி
விடை: இ) காற்புள்ளி
6. பின்வரும் எது வில்லைகள் கிடையாது?
அ)
நிரல்பெயர்ப்பி
ஆ)
குறிப்பெயர்கள்
இ)
சிறப்புச் சொற்கள்
ஈ)
செயற்குறிகள்
விடை: அ) நிரல்பெயர்ப்பி
7. பின்வருவனவற்றில் எது பைத்தான்
சிறப்புச் சொல் கிடையாது?
அ)
break
ஆ)
while
இ)
continue
ஈ)
operators
விடை: ஈ)
operators
8. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி
என்று அழைக்கப்படுகிறது?
அ)
கணக்கீடு
ஆ)
தொடர்புடைய
இ)
தருக்க
ஈ)
மதிப்பிருத்தல்
விடை: ஆ) தொடர்புடைய
9. பின்வருவனவற்றில் எது தருக்க
செயற்குறி கிடையாது?
அ)
and
ஆ)
or
இ)
not
ஈ)
like
விடை: ஈ) like
10. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி
என்று அழைக்கப்படுகிறது?
அ)
மும்ம செயற்குறி
ஆ)
தொடர்புடைய
இ)
தருக்க
ஈ)
மதிப்பிருத்தல்
விடை: அ) மும்ம
செயற்குறி
பகுதி - ஆ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (2 மதிப்பெண்கள்)
1. பைத்தான் நிரலினை சோதிக்க
எத்தனை வகை முறைமைகள் உள்ளன?
விடை. பைத்தான் நிரலினை சோதிக்க ஊடாடும் முறைமை, ஸ்கிரிப்ட் முறைமை என்று
இரு வகை முறைமைகள் உள்ளன.
2. வில்லைகள் பற்றி சிறு குறிப்பு
வரைக.
விடை. பைத்தான் நிரலின் இடம்பெறும் வரிகளை அடிப்படை சொற்களாக பிரிக்கிறது.
இந்த கூறுகள் வில்லைகள் எனப்படும் பொதுவாக வில்லைகளின் வகையான,
(i) குறிப்பெயர்கள்
(ii) சிறப்புச் சொற்கள்
(iii) செயற்குறிகள்
(iv) வரம்புக்குறி மற்றும்
(v) நிலை உரு
வில்லைகளை பிரிப்பதற்கு வெற்று இடைவெளி கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
3. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள்
யாவை?
விடை. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள்:
(i) கணித செயற்குறிகள்
(ii) தொடர்புடைய அல்லது ஒப்பீடு செயற்குறிகள்
(iii) தருக்க செயற்குறிகள்
(iv) மதிப்பிருத்து செயற்குறிகள்
(v) நிபந்தனை செயற்குறி
4. குறிப்பெயர்கள் என்றால் என்ன?
குறிப்பெயர்கள் வகைகள் யாவை?
விடை. குறிப்பெயர்கள், மாறிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மாறிகள் என்பவை,
மதிப்பு அல்லது மாறிகளைத் தாங்கியுள்ள நினைவகப் பெட்டிகளைக் குறிக்கின்றன மாறியின்
பெயர் ஓர் எழுத்தில் அல்லது அடிக்கீறல் தொடங்கி, அதனைத் தொடர்ந்து எழுத்து அல்லது எண்களைக்
கொண்டிருக்கும்.
வகைள்:
(i) int மாறிலிகள்
(ii) முழு எண் அல்லது வரிசையெண் சார்ந்த மாறிலிக் குறிப்பெயர்கள்
(iii) char மாறிலிகள்
(iv) enum குறிப்பெயர்கள்
5. எக்ஸ்போனன்ட் தரவு பற்றி குறிப்பு
வரைக.
விடை. மிதப்புப்புள்ளி தரவுகளை அடுக்கெண் முறையிலும் (எக்ஸ்போனன்ட் தரவு)
குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடும் போது E அல்லது e என்னும் எழுத்தைப் பயன்படுத்த
வேண்டும். அது முழுஎண் பகுதி, பதின்மப்புள்ளி, பின்னப்பகுதி அடுக்கெண் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
எ.கா. 12E04, 24e04
பகுதி - இ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (3 மதிப்பெண்கள்)
1. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு
வரைக. எடுத்துக்காட்டு தருக.
விடை. கணித செயற்குறிகள், இரு செயலேற்பிகள் ஏற்றுக் கொண்டு அதன் மீது கணித
செயல்பாடுகளை செய்யும். அவை எளிய முறை கணித செயல்பாடுகளாக பயன்படுகிறது. பெரும்பான்மையாக
கணிப்பொறி மொழிகள் இதுபோன்ற செயற்குறிகளை கொண்டிருக்கும், அவை சமன்பாடுகளை பயன்படுத்தி
தொடர் கணிப்பீடுகளை செய்யப் பயன்படுகிறது.
பைத்தான் பின்வரும் கணித செயற்குறிகளை கொண்டுள்ளது .
2. பைத்தானில் மதிப்பிருத்தல்
செயற்குறிகள் என்றால் என்ன?
விடை. பைத்தானில், = என்பது ஒரு மதிப்பிருத்தல் செயற்குறியாகும். இது மாறிகளுக்கு
மதிப்பிருத்த பயன்படுகிறது. a = 5 மற்றும் b = 10 என்று கூற்று a யின் மதிப்பு 5 என்றும்,
b-ன் மதிப்பு 10 என்று மதிப்பிருந்தும். இவ்விரு மதிப்பிருத்தல் கூற்றினை வேறுவிதமாக
a,b=5,10 என்றும் கொடுக்கலாம், இதுவும் வலது பக்கம் இருக்கு 5 மற்றும் 10 என்ற மதிப்பினை
a,b என்ற மாறிகளில் முறையே மதிப்பிருத்தும். பைத்தான், +=, -=, *=, /=, %2
=, **= மற்றும் //= போன்ற கூட்டு செயற்குறிகளையும் ஏற்கும்.
3. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன்
எழுதுக.
விடை. மும்ம செயற்குறி நிபந்தனை செயற்குறி என்றும் அழைக்கப்படுகிறது. இது
சமன்பாடுகளின் நிபந்தனையை சரி அல்லது தவறா என்று சோதித்து செயல்படுத்தும், மும்ம செயற்குறி
பல வரி if..else கூற்று போல் அல்லாது நிபந்தனைகளை ஒற்றை வரியில் சோதிக்க அனுமதிக்கிறது.
நிபந்தனைச் செயற்குறியின் தொடரியல்,
Variable Name = [on_true] if [Test expression) else [on_false]
எடுத்துக்காட்டு:
min= 50 if 49<50 else 70 // min = 50
min=50 if 49 > 50 else 70 // min =70
4. விடுபடு வரிசைப்பற்றி குறிப்பு
எழுதி எடுத்துக்காட்டு தருக.
விடை. பைத்தானில், பின்சாய்வுகோடு ஆகிய சிறப்பு குறியீட்டை "விடுபடு"
குறியுரு என்று அழைக்கிறோம். இது சில வெற்று இடைவெளியை குறிப்பிட பயன்படுகிறது.
"\t" என்பது தத்தல், "\n" என்பது புதியவரி மற்றும்
"\r" என்பது நகர்த்தி திரும்பலை (carriage return) குறிக்கிறது. எடுத்துக்காட்டு
"It's raining" என்ற செய்தியை பின்வரும் பைத்தான் கட்டளை வெளியிடும்,
>>>print ("It\'s raining")
It's raining
5. சரநிலையுரு என்றால் என்ன?
விடை. பைத்தானில், சர நிலையுருக்கள், குறியுருக்களின் தொடர், மேற்கோள் குறிக்குள்
கொண்டிருக்கும். பைத்தானில், சரங்களை ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று மேற்கோள் குறிகளில்
அடைக்கலாம். குறியுரு மதிப்பிருக்கள் ஒற்றை அல்லது இரட்டை மேற்குறியை கொண்டிருக்கும்.
பல வரி சர நிலையுருவை மூன்று மேற்கோள் "' '' குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
சர நிலையுரு செயல் விளக்கம் :
# Demo Program to test String Literals
strings = "This is Python"
char = "C"
multiline_str = ''This is a multiline string with
more than one line code.''
print (strings)
print (char)
print (multiline_str)
# End of the Program
வெளியீடு :
This is Python
C
This is a multiline string with more than one line code.
பகுதி - ஈ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (5 மதிப்பெண்கள்)
1. செயல்முறை ஸ்கிரிப்ட் முறைமை
நிரலாக்கம் பற்றி எழுதுக.
விடை. ஒரு ஸ்கிரிப்ட் என்பது பைத்தான் கட்டளைகளை கொண்ட ஒரு உரை ஆவணத்தைக் குறிக்கிறது. பைத்தான் ஸ்கிரிப்ட்
குறிமுறையை மறுபயனாக்கம் செய்துக் கொள்ளலாம். ஒரு முறை ஸ்கிரிப்ட் கோப்பை எழுதிவிட்டால்
பல முறை இயக்கிக் கொள்ளலாம் மீண்டும் அந்த ஸ்கிரிப்டை உருவாக்க தேவையில்லை. ஸ்கிரிப்ட்
பதிப்பாய்வு செய்ய கூடியவை.
பைத்தான் ஸ்கிரிப்ட் எழுதுதல்
(i) பைத்தான் shell சாளரத்தில் File → New File அல்லது
Ctrl+N என்பதை அழுத்தவும்.
(ii) பெயரிடப்படாத Untitled வெற்று ஸ்கிரிப்ட் Text editor தோன்றும்.
(iii) பின்வரும் கட்டளைகளை ஸ்கிரிப்ட் editorல் உள்ளிடவும்.
a= 100
b = 350
c= a+b
print ("The Sum=", c)
பைத்தான் ஸ்கிரிப்ட்யை சேமித்தல்
(i) File → Save கட்டளையை தேர்ந்தெடுக்கவும் அல்லது Ctrl +S அழுத்தவும்.
(ii) Save As உரையாடல் பெட்டி திரை தோன்றும்.
(iii) Save As உரையாடல் பெட்டியில், கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தை
தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கோப்பின் பெயரை File Name பெட்டியில் உள்ளிட வேண்டும்.
முன்னியல்பாக பைதான் கோப்புகள் .py என்ற நீட்டிப்புடன் சேமிக்கப்படுகிறது. எனவே, பைத்தான்
ஸ்கிரிப்ட் editor-ல் கோப்புகளுக்கு பயனர் நீட்டிப்பை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
(iv) இறுதியாக Save பொத்தானை தேர்ந்தெடுத்து, பைத்தான் ஸ்கிரிப்ட்டை
கோப்பை சேமிக்கலாம்.
விடை. Executing பைத்தான் ஸ்கிரிப்ட்டை இயக்க
(i) Run → Run Module அல்லது F5 யை தேர்ந்தெடுக்கவும்.
(ii) குறிமுறையில் பிழைகள் இருப்பின் அவை சிகப்பு நிறத்தில் IDLE திரையில்
காண்பிக்கப்பட்டு, பைத்தான் பிழைக்கான காரணத்தை விளக்கும். பிழைகளை திருத்துவதற்கு,
ஸ்கிரிப்ட் editorக்கு சென்று, பிழைகளைத் திருத்தி, கோப்பை Ctrl + S அல்லது File → Save கட்டளைக்
கொண்டு சேமித்தபின் மீண்டும் இயக்க வேண்டும்.
(iii) பிழைகள் இல்லாத பைத்தான் குறிமுறையை இயக்கியவுடன் அதன் வெளியீடு
பைத்தான் IDLE திரை தோன்றும்.
2. input() மற்றும் output()
செயற்கூறுகள் பற்றி விளக்கு.
விடை. உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள்
ஒரு நிரல் பயனர் விரும்பிய பணியை நிறைவேற்றுவதற்கு பயனருடன் தொடர்பு
கொள்ள வேண்டும். இதற்கு உள்ளீடு - வெளியீடு செயற்கூறுகள் பயன்படுகிறது. input() செயற்கூறு,
ஓர் நிரலை இயக்கும் பொழுது தரவுகளை உள்ளீடு செய்யவும், print() என்ற வெளியீடு செயற்கூறு
நிரலின் தீர்வுகளை திரையில் காண்பிக்க உதவுகிறது.
Print() செயற்கூறு
பைத்தானில், print() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை வெளியிட
பயன்படுகிறது.
print() செயற்கூறின் தொடரியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
print ("string to be displayed as output")
print (variable)
print ("String to be displayed as output", variable)
print ("Stringl", variable, "String 2",
variable, "String 3" ........)
எடுத்துக்காட்டு:
>>>print("Welcome to Python Programming")
Welcome to Python Programming
>>>x= 5
>>>y=6
>>>z=x+y
>>> print (z)
11
>>>print ("The sum=", z)
The sum=11
>>> print ("The sum of "', x,
"and", y, "is", z)
The sum of 5 and 6 is 11
வெளியீடு:
Welcome to Python programming
11 The sum = 11
The sum of 5 and 6 is 11
print() செயற்கூறு தீர்வுகளை திரையில் காண்பிக்கும் முன் கோவையை மதிப்பீடு
செய்யும். print() செயற்கூறினுள் கொடுக்கப்படும் முழு கூற்றினையும் திரையில் காட்டும்.
காற்புள்ளி(,) கொண்டு print() செயற்கூறினுள் ஒன்றுக்கு மேற்பட்ட உருப்புகளை பிரிக்கலாம்.
input() பைத்தானில், input() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை
உள்ளீடாக பெற்றுக் கொள்ளப் பயன்படுகிறது. input() செயற்கூறின் தொடரியல்,
Variable = input ("prompt string")
இந்த தொடரியலில் உள்ள "prompt string" பயனர் கொடுக்கப்பட
வேண்டிய உள்ளீடு எதுவென்பதை உணர்த்தும் கூற்று அல்லது செய்தியை கொண்டிருக்கும்.
input() கட்டளை அமைப்பில் உள்ள "prompt string"திரையில் தோன்றும்,
பயனர் இதை படித்து உள்ளீடு சாதனத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் தரவுகளை கொடுக்கலாம்.
input() செயற்கூறு, விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்தவற்றை மாறியில் சேமித்து வைக்கும்.
"prompt string" கொடுக்கப்படவில்லையெனில் திரையில் எந்த தகவலும் தோன்றாது.
இதனால் பயனர் எவற்றை உள்ளீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.
எடுத்துக்காட்டு 1: "prompt string" கொண்டுள்ள input() செயற்கூறு
>>> city=input ("Enter Your City:")
Enter Your City: Madurai
>>> print ("I am from", city)
I am from Madurai
எடுத்துக்காட்டு 2: "prompt string" இடம்பெறாத input( ) செயற்கூறு
>>> city=input()
Rajarajan
>>> print (I am from", city)
I am from Rajarajan
மேலே உள்ள எடுத்துக்காட்டு 2ல், input(). செயற்கூற்றில் -
"prompt string" இடம்பெறவில்லை. எனவே, எவற்றை உள்ளீடாக தர வேண்டும் என்பது
பயனர் புரிந்து கொள்ள இயலாது. நிரலுக்கு தொடர்பில்லாத தரவுகளை உள்ளிட்டால், தவறான தீர்வை
வெளியிடும். எனவே பயனர் நிரலை உரிய முறையில் இயக்க, "prompt string"
input() செயற்கூறில் பயன்படுத்த வேண்டும்.
input( ) செயற்கூறு அனைத்து தரவுகளையும் சரங்கள் அல்லது குறியுருவாக
ஏற்றுக் கொள்ளும், எண்களாக அல்ல. பயனர் எண்களை மதிப்புகளாக உள்ளீடு செய்யும் போது,
அவை வெளிப்படையாக எண்வகை தரவுகளாக மாற்றப்பட வேண்டும். int() செயற்கூறு சரவகை தரவை
எண்வகை தரவாக வெளிப்படையாக மாற்ற உதவுகிறது.
3. பைத்தானில் உள்ள வில்லைகள்
பற்றி எழுதுக.
விடை. வில்லைகள்:
பைத்தான், நிரலின் இடம்பெறும் வரிகளை அடிப்படை சொற்களாக பிரிக்கிறது.
இந்த கூறுகள் வில்லைகள் எனப்படும் பொதுவாக வில்லைகளின் வகையான,
(i) குறிப்பெயர்கள்
(ii) சிறப்புச் சொற்கள்
(iii) செயற்குறிகள்
(iv) வரம்புக்குறி மற்றும்
(v) நிலை உரு
வில்லைகளை பிரிப்பதற்கு வெற்று இடைவெளி கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
(i) குறிப்பெயர்கள் : மாறி, செயற்கூறு, இனக்குழு, தொகுதி அல்லது பொருளின்
பெயர்களை குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.
சரியான குறிப்பெயர்களின் எடுத்துக்காட்டு :
Sum, total_marks, regno, num 1
(ii) சிறப்புச் சொற்கள்: நிரலின் அமைப்பை அடையாளம் காண பைத்தான் மொழிப்பெயர்ப்பி
சிறப்புச் சொற்களை பயன்படுத்துகிறது. சிறப்பு சொற்கள் மொழிபெயர்ப்பியில் குறிப்பிட்ட
பொருள் கொண்டுள்ளதால் இவற்றை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.
பைத்தான் சிறப்புச் சொற்கள் :
false class finally is
(iii) செயற்குறிகள் : கணிப்பொறி நிரலாக்க மொழியில் செயற்குறிகள் என்ற
சிறப்பு குறியீடுகள் கணிப்பீடுகள், நிபந்தனை சோதிப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது.
செயற்குறிகள் என்பவை குறியீடுகள் இவை செயலேற்பிகளில் உள்ள மதிப்புகளில் செயல்படும்.
கணித, ஒப்பீடு, தருக்க, மதிப்பிருத்தல் போன்று பல வகை செயற்குறிகள் உள்ளன. மதிப்புகள்
மற்றும் மாறிகள் செயற்குறியுடன் பயன்படுத்தும் போது செயலேர்பிகள் என்று அழைக்கப்படுகிறது.
(iv) வரம்புக்குறிகள்: பைத்தான், குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுப்பை,
கோவை, பட்டியல், அகராதி மற்றும் சரங்களில் பயன்படுத்துகிறது. பின்வருவன பைத்தான் வரம்புக்குறிகளாகும்.
(v) நிலை உருகள்: நிலை உருகள் என்பது மாறிகள் அல்லது மாறிலிகளுக்கு
வழங்கப்படும் மூல தரவாகும். பைத்தானில் பல்வேறு வகையான நிலை உருகள் உள்ளன.
எண்கள்
சரம்
பூலியன்