Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | மாட்டு வண்டியிலே....: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 9 | 3 ஆம் வகுப்பு தமிழ் - மாட்டு வண்டியிலே....: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 1 Chapter 9 : Maattu vandiyilae

   Posted On :  02.07.2022 12:21 pm

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 9 : மாட்டு வண்டியிலே....

மாட்டு வண்டியிலே....: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 9 : மாட்டு வண்டியிலே....: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்
பயிற்சி

வாங்க பேசலாம்

1. மாட்டு வண்டியில் அல்லது வேறு ஏதேனும் வாகனத்தில் வெளியூர் சென்றிருக்கிறாயா? அப்படி நீ சென்று வந்த அனுபவம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

பாஸ்கர் : நண்பர்களே! நீங்கள் மாட்டு வண்டிப் பயணம் சென்று உள்ளீர்களா?

மதன் : நாங்கள் இதுவரை சென்றதில்லை.

பாஸ்கர் : எங்கள் அப்பா மாட்டு வண்டி என்று சொல்லப்படும் கட்டை வண்டி வைத்துள்ளார்.

செல்வா : இந்த மாட்டு வண்டியில் என்னென்ன பயன்கள் உண்டு?

சுரேஷ் : எங்கள் அப்பாவும் மாட்டு வண்டி வைத்திருக்கிறார். விவசாய பொருட்களையும், கல், மண், கம்புகள் கொண்டு செல்லவும் பயன்படுத்துவார் என் அப்பா.

பட்டு ராஜா : மாட்டு வண்டி இயங்க என்னென்ன வேண்டும்?

பாஸ்கர் : கடையாணி, அல்லைப்படல், குடம், நுகத்தடி, வட்டை ,சவாரித்தப்பை, பட்டா, இருசு, ஏர்க்கால், மூக்கேர், ஏர்க்கால் சட்டம், பூட்டாங்கயிறு,  பூட்டாங்குச்சி,  முனைக்குச்சி,  கொலுப்பலகை போன்றவை  மாட்டுவண்டி  இயங்க  தேவை. 

இசக்கி : எங்கள் ஊரான அன்னவாசலில் கோவில் கொடைவிழாவில் இரவு கூத்து பார்க்க என் அப்பா, நான், அம்மா, தங்கை ஆகியோர் சென்றோம். ஜல், ஜல் என்று சலங்கைகள் ஆட மாட்டு வண்டியில் சென்றது ஒரு  சுகமான  அனுபவம். 

கிஷோர் : கயிற்றின் உதவியுடன் மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். இப்போது பெரும்பாலான மாட்டு வண்டிகள் உருளிப் பட்டைகளால் ஆனவை. பயணம் சுகமாக இருக்க எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்போம். 

கார்த்திக் : எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் காங்கேயம் காளைகள் பூட்டப்பட்டு இருக்கும்.

மகிபாலன் : என் அப்பா மாட்டுவண்டியை  நின்று கொண்டே ஓட்டுவார். சில நேரம் என் அண்ணனும் மாட்டு வண்டி ஓட்டுவான்.

செந்தில் : வயல்வெளிகளுக்கு இடையே மாட்டுவண்டிப் பயணம் செய்வோம்.  இயற்கையோடு இணைவோம்.

                   


படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

அ) தண் + ணீர்    

ஆ) தண் + நீர்    

இ) தண்மை + நீர்     

ஈ) தன் + நீர்

விடை : இ) தண்மை + நீர்


2. மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல் ______________. 

அ) உயரே      

ஆ) நடுவே                  

இ) கீழே                    

ஈ) உச்சியிலே

விடை : இ) கீழே


3. வயல் + வெளிகள் - இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________. 

அ) வயல்வெளிகள்                                                                    

ஆ) வயவெளிகள் 

இ) வயற்வெளிகள்                                                                 

ஈ) வயல்வெளிகள்

விடை : அ) வயல்வெளிகள்


4. கதை + என்ன - இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.

அ) கதைஎன்ன    

ஆ) கதையன்ன        

இ) கதையென்ன      

ஈ) கதயென்ன

விடை : இ) கதையென்ன 


5. வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________.

 அ) நிழல்     

ஆ) பகல்        

இ) வெப்பம்      

ஈ) இருள்

விடை : அ) நிழல்



இணைக்கலாமா?



சொல் கோபுரம் அமைப்போம்



இதனைக் ‘கரம்’ என்றும் கூறலாம் [1] கை

பசு கொடுக்கும் பானம் [2] பால்                                                           

ஆறுகள் சென்று சேருமிடம் [3] கடல்

வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது [4] அச்சாணி

பாலைவனக்கப்பல் [5] ஒட்டகம்


பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா!



1. எட்டு கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும். அது என்ன?

விடை : குடை 

2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?

விடை : வாழைப்பூ 

3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை. அது என்ன?

விடை : புத்தகம் 

4. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும். அது என்ன?

விடை : கோலம் 

5. என்னோடு இருக்கும் சிறுமி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்கு தெரியும். அது என்ன?

விடை : கண் 

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?

விடை : வெடி 

7. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு. அது என்ன?

விடை : நெற்கதிர் 

8. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன?

விடை : சூரியன்


மொழியோடு விளையாடு



புதிர்களையும் விடைகளையும் எழுதிய அட்டைகளை வகுப்பறையின் நடுவில் வைக்க வேண்டும். மாணவர்களை அழைத்து ஒவ்வொரு மாணவனையும் ஓர் அட்டையை எடுக்கச் சொல்ல வேண்டும். புதிர் அட்டையை வைத்திருக்கும் மாணவனோடு அப்புதிருக்கான விடையை வைத்திருக்கும் மாணவன் இணைந்து நிற்க வேண்டும். அவர்கள் இருவரும் அதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும். இருவரும் இச்செயலைச் செய்து முடிக்கும் கால அளவை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த இருவர் இவ்விளையாட்டை விளையாடுவர். எவர் இருவர் குறைவான கால அளவில் இணை சேர்ந்தனரோ அவர்களே வெற்றி பெற்றவராவர். அனைத்து மாணவர்களையும் விளையாட்டில் பங்கு பெறச்செய்ய வேண்டும்.



செயல் திட்டம்

வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மூன்று புதிர்களைக் கேட்டறிந்து குறிப்பேட்டில் எழுதி வருக.

புதிர்கள்

1. கூரை வீட்டை பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள் வெள்ளை மாளிகை, வெள்ளை மாளிகை நடுவில் ஓர் குளம் நான் யார்?

விடை : தேங்காய் 

2. சாப்பிட எதை குடித்தாலும் சாப்பிடுவேன். ஆனால் நீரைக் குடிக்க தந்தால் இறப்பேன் நான் யார்?

 விடை : நெருப்பு  

3. ஓயாமல் சத்தம் போடுவேன். நான் இயந்திரம் அல்ல. உருண்டு உருண்டு வருவேன். பந்தும் இல்லை நான் யார்?

விடை : கடல்


Tags : Term 1 Chapter 9 | 3rd Tamil பருவம் 1 இயல் 9 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 1 Chapter 9 : Maattu vandiyilae : Maattu vandiyilae: Questions and Answers Term 1 Chapter 9 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 9 : மாட்டு வண்டியிலே.... : மாட்டு வண்டியிலே....: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 9 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 9 : மாட்டு வண்டியிலே....