Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | திட்ட அளவைகளைக் கொண்டு அளத்தல்

அளவைகள் | மூன்றாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அளவைகளைக் கொண்டு அளத்தல் | 3rd Maths : Term 3 Unit 4 : Measurements

   Posted On :  21.06.2022 04:21 am

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : அளவைகள்

திட்ட அளவைகளைக் கொண்டு அளத்தல்

ஒரு கொள்கலனின் கொள்ளவை அளக்கக் கூடிய திட்ட அலகு லிட்டர் ஆகும்.

திட்ட அளவைகளைக் கொண்டு அளத்தல்

மீனாவும் அவள் தாயும்

அம்மா : மீனா, ஒரு குவளைத் தண்ணீரை மாவில் ஊற்று.

மீனா : சரி, அம்மா

அம்மா : மாவு மிகவும் கெட்டியாக உள்ளது. ஒரு முழுக் குவளைத்  தண்ணீர் ஊற்றினாயா?

மீனா : ஊற்றினேன் அம்மா

அம்மா : நீ எந்தக் குவளையில் தண்ணீர் ஊற்றினாய்

மீனா : அம்மா, நான் சிறிய குவளையில் தண்ணீர் ஊற்றினேன்.

தாய் : நீ பெரிய குவளையில் ஊற்றியிருக்க வேண்டும். மீனா

மீனா : சரி அம்மா

அம்மா : மீனா, இப்போது பாலில் ஊற்ற 2 குவளைகள் தண்ணீர் கொண்டு வா.

மீனா : அம்மா, நான் இப்போது பெரிய குவளையில் கொண்டு வந்திருக்கிறேன்.

அம்மா : மீனா, இப்போது நீ சிறிய குவளையில் தண்ணீர் கொண்டு வந்திருக்க வேண்டும்.

மீனா : அம்மா. சில நேரங்களில் சிறிய குவளையில் தண்ணீர் கொண்டு வரச் சொல்கின்றீர்கள், சில நேரங்களில் பெரிய குவளையில் கொண்டு வரச் சொல்கிறீர்கள். எனக்கு எப்போது பெரிய குவளையில் கொண்டு வரவேண்டும் எப்போது சிறிய குவளையில் கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை .

இந்தச் சூழலுக்குத் (குழப்பம் / பிரச்சனை) தீர்வு காண என்ன செய்யலாம்.

கொள்கலன்களின் கொள்ளளவுகளை அளவிட நமக்குத் திட்ட அளவைகள் தேவை. மேலும் அவற்றைக் குறிப்பிட நமக்குத் திட்ட அலகுகள் தேவை.

கொள்ளளவினை அளக்கப் பயன்படும் சில திட்டக் கருவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பால் விற்பனைக் கடைகள், மளிகை கடைகள் போன்ற இடங்களில் நீங்கள் காணலாம். நாம் இவற்றைக் கொண்டு தண்ணீர், எண்ணெய், பால், பெட்ரோல் போன்ற திரவங்களை அளக்கலாம்.

ஒரு கொள்கலனின் கொள்ளவை அளக்கக் கூடிய திட்ட அலகு லிட்டர் ஆகும்.

• சிறிய கொள்கலன்களின் மூலம் குறைந்த அளவிலான திரவங்களை மில்லி லிட்டரில் அளக்கலாம்.

பெரிய கொள்கலன்களின் மூலம் அதிக அளவிலான திரவங்களை லிட்டரில் அளக்கலாம்.


செயல்பாடு 

1. ஆசிரியர், புட்டியில் நிரப்புதல் என்னும் விளையாட்டை விளையாடச் செய்யலாம்.

2. ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களைக் கொண்டு மாதிரி பால் கடையை நடத்தச் செய்யலாம்.


பயிற்சி 

1. பின்வரும் பொருள்களை அவற்றின் அளவுகளைக் கொண்டு வகைப்படுத்தி அட்டவணையை நிறைவு செய்க



1 லிட்டரை விடக் குறைவாகப் பிடிக்கும் பாத்திரங்கள் 

1. குவளை 

2. சொம்பு 

3. மருந்துக் குப்பி

1 லிட்டரை விட அதிகமாகப் பிடிக்கும் பாத்திரங்கள் 

1. பானை 

2. தண்ணீர் குடுவை 

3. எண்ணெய் குடுவை


2. கொடுக்கப்பட்ட திரவங்களை அளப்பதற்குப் பயன்படும் சரியான அலகுகளை ‘’ குறியிடுக.



3. மிக அதிகமான அளவினை '' குறியிடுக.

i. a) 500 மிலி b) 100 மிலி c) 50 மிலி d) 75 மிலி

ii. a) 200 மிலி b) 300 மிலி c) 150 மிலி d) 175 மிலி

iii. a) 5 லி b) 2 லி c) 8 லி d) 7 லி

iv. a) 3 லி b) 300 மிலி c) 30 மிலி d) 30 லி

v. a) 250 மிலி b) 1500 மிலி c) 760 மிலி d) 75 லி

4. மிகக் குறைவான அளவினை ‘‘ குறியிடுக.

i. a) 250 மிலி b) 350 மிலி c) 50 மிலி d) 750 மிலி

ii. a) 300 மிலி b) 350 மிலி c) 800 மிலி d) 275 மிலி

iii. a) 10 லி b) 3 லி c) 9 லி d) 6 லி

iv. a) 3 லி b)350 மிலி c) 5 மிலி d) 40 லி 

v.a) 2500 மிலி b) 100 மிலி c) 810 மிலி d) 175 லி

5. பின்வரும் செயல்பாடுகளுக்கு உங்கள் வீட்டில் எத்தனை லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துவீர்கள்? அட்டவணையை நிறைவு செய்க



6. கொடுக்கப்பட்டுள்ள கொள்கலன்களை நிரப்புவதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் ஒரு லிட்டர் புட்டியைக் கொண்டு அளந்து அட்டவணையை நிறைவு செய்க

குடுவை 1 ஒரு லிட்டர் புட்டிகள் (குடுவைகள்)

வாளி  5 ஒரு லிட்டர் புட்டிகள் (குடுவைகள்) 

பானை 10 ஒரு லிட்டர் புட்டிகள் (குடுவைகள்)


செயல்பாடு 

ஒரு குவளையையும் 1 லிட்டர் குடுவையையும் எடுத்துக் கொள்ளுங்கள் குவளையைக் கொண்டு குடுவையை நிரப்புங்கள் குடுவையை நிரப்புவதற்குக் குவளை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?

4 முறை

பல்வேறு கொள்கலன்களை (குவளைகள், குடுவைகள்) வைத்து இதே செயல்பாட்டைச் செய்து நீங்கள் கண்டறிந்த அளவுகளைக் குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

1. எந்தக் கொள்கலன் இரு முறை பயன்படுத்தப்பட்டது?

குடுவைகள்

2. எந்தக் கொள்கலன் நான்கு முறை பயன்படுத்தப்பட்டது?

குவளைகள்



Tags : Measurements | Term 3 Chapter 4 | 3rd Maths அளவைகள் | மூன்றாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 4 : Measurements : Measurement by standard tools Measurements | Term 3 Chapter 4 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : அளவைகள் : திட்ட அளவைகளைக் கொண்டு அளத்தல் - அளவைகள் | மூன்றாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : அளவைகள்